இலங்கையில், கருத்திட்ட மட்ட சு.தா. மதிப்பீடானது 1993 இல் இருந்து வினைத்திறனுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கருத்திட்ட மட்ட சு.தா.ம. சுற்றாடல் தாக்கங்கள் தீர்ப்பதில் வினைத்திறன் கொண்டதாக இருந்தபோதிலும், அநேகமாக அவை, பல்வேறு கருத்திட்டங்களின் மொத்தமான தாக்கங்களை கவனத்திற் கொள்ள தவறிவிடுகின்றன. தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடானது இது தொடர்பில் உள்ள மிகவும் தாக்கமுள்ள கருவியொன்றாக நிரூபிக்கப்பட முடியும். உயர் உபாயமுறை மட்டத்தில் தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடானது பிரயோகிக்கப்படுவதோடு, உபாயமுறை மட்டத்தில் கூறப்பட்டுள்ள கொள்கை திட்டமிடலொன்றின் அல்லது நிகழ்ச்சித்திட்டமொன்றிற்குரிய சாத்தியாமான சுற்றாடல் தாக்கங்களை அதனூடாக உறுதிப்படுத்துகின்றன.
தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடானது இதுவரை இலங்கையில் கட்டய தேவைப்பாடொன்றாக இல்லை. எவ்வாறாயினும், அமைச்சரவையானது இலங்கையில் திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் கொள்கைகளுக்கு த.சு.மதிப்பீட்டின் அமுலாக்கத்தை அங்கீகரித்துள்ளது. புதிய கொள்கை, திட்டம் அல்லது நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றினை அமுல்படுத்துவதற்கு பொறுப்பான அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகள் என்பன புதிய கொள்கை, திட்டம் அல்லது நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் தந்திரோபாய சுற்றாடல் மதிப்பீடொன்றை மேற்கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆ.சு.ப தொடர்பான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாகாண அலுவலர்களுக்கான வழிகாட்டல்கள்
அமுலிலுள்ள ஒழுங்குவிதிகள்/ செயல்முறை வழிகாட்டிதொடர்பான மீட்டல்
முறையான சு.தா.ம நடைமுறைஅமுலாக்கத்திற்கு துணசெய்யும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் திட்டஆதரவாளர் மற்றும் திட்ட ஒப்புதல் நிறுவனங்களுக்கு பல வழிகாட்டுதல் நெறிமுறைகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தயார் செய்யப்பட்டுள்ளது. பின்வரும் பதிப்பாக்கங்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வௌளியிடப்பட்டுள்ளது.
• சுற்றாடல் தாக்க மதிப்பீடு அமுலாக்கம் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள். நடைமுறை இல. 01- திட்ட ஒப்புதல் நிறுவனங்களுக்கான பொது வழிகாட்டி, 2006 – விலை 100.00
• சுற்றாடல் தாக்க மதிப்பீடு அமுலாக்கம் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள். நடைமுறை இல.02- சுற்றாடல் சார் நோக்கெல்லையை வரையறுத்தல் பொது வழிகாட்டி, 2006 – விலை 100.00
• இலங்கையின் வீதி மற்றும் ரயில் அபிவிருத்திக்கான சுற்றாடல் வழிகாட்டி, 1997 - விலை 300.00
• வேளாண்மைத்துறைசார் சுற்றாடல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் – 1997 - விலை 300.00
• சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (சு.தா.ம) நடைமுறைக்கான எளிய வினாவிடைகள் – 2012 - விலை 30.00
• ஆறு மற்றும் குளத்து நீரை கையகப்படுத்தலுக்கான சுற்றாடல்பாய்ச்லை உறுதிப்படுத்தலுக்கான அபிவிருத்தித்தட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்.
சு.தா.ம. அலகானது சு.தா.ம நடைமுறைதொடர்பான அடிப்டை விழிப்புணரவைத்தருவதற்கு சு.தா.ம நடைமுறையில் கலந்துகொண்டுள்ள (ம.சு.அ பணியாளர்கள், அரச நிறுவனங்கள், கல்வியியலாளர்கள், ஆலோசகர்கள், தனியார் துறை, அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், மேலும் பல.) அங்கத்தவர்களின் நலன்கருதி குறுகியகால பாடநெறியொன்றை நடாத்துகின்றது.
சு.தா.ம. செயன்முறையின் முறையான அமுலாக்கத்தில் கருத்திட்ட பிரேரணையாளர்கள், கருத்திட்ட அங்கீகரிப்பு முகவராண்மைகள் என்பவற்றக்கு உதவுவதற்காக ம.சு. அதிகாரசபையினால் பல்வேறு வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பின்வரும் வெளியீடுகள் ம.சு. அதிகாரசபையிடம் காணப்படுகின்றன;
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்- இல 1, கருத்திட்ட அங்கீகரிப்பு முகவராண்மைகளுக்கான ஒரு பொது வழிகாட்டல், 2006 - ரூபா. 100.00.
சு.தா.ம. செயன்முறை இல 2 அமுலாக்கத்திற்கான வழிகாட்டல் – சுற்றாடல் சார் நோக்கெல்லையை வரையறுத்தல் சம்பந்தமான செயற்பாட்டை நடாத்துவதற்கான ஒரு பொது வழிகாட்டல், 2003 - ரூபா. 100.00
இலங்கையில் வீதி மற்றும் புகையிரதப் பாதைகளின் அபிவிருத்திக்கான சுற்றாடல் வழிகாட்டல், 1997 - ரூபா. 300.00
விவசாயத் துறை கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் வழிகாட்டல், 1997 - ரூபா. 300.00
சுற்றாடல் தாக்க மதிப்பீடு பற்றிய எளிய கேள்விகளும் பதில்களும், 2005 - ரூபா. 30.00
அபிவிருத்தி திட்டமிடலுக்கான சுற்றாடல் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்திற்காக வினைத்திறன்மிக்க கருவியொன்றாக சுற்றாடல் தாக்க மதிப்பீட்டின் முக்கியத்துவம் இலங்கையில் உயர்வாக அங்கீகரிக்கப்படுகிறது. கருத்திட்டமொன்றின் ஆரம்ப கட்டத்தில் சுற்றாடல் மீதான குறிப்பிட்ட சாத்தியமான தாக்கங்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு சு.தா.ம. உதவுகின்றது. அது ஏற்றுக் கொள்ள முடியாத தாக்கங்களை குறைப்பதற்கான வழிகளை கண்டறிவதற்கும், கருத்திட்டம் உள்ளூர் சுற்றாடலுக்கு ஏற்றதாக வடிவமைப்பதற்கும் உதவுகின்றது. அது கருத்திட்டமொன்று பற்றி தீர்மானங்களை உத்தியோகத்தர்கள் மேற்கொள்வதற்கு உதவுவதோடு, கருத்திட்ட பிரேரணையாளர் தனது குறிக்கோள்களை மிகவும் வெற்றிகரமாக அடைவதற்கும் உதவுகின்றது. இந்த வகையில் சு.தா.ம. ஒரு பிரதான திட்டமிடல் கருவியொன்றாக கருதப்பட முடியும் என்பதுடன் நலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கான பிரதான உத்தியொன்றாகவும் கருதப்பட முடியும்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழும் மற்றும் சில சட்டங்களின் கீழும் இலங்கையில் அபிவிருத்தி கருத்திட்டங்களை தாபிப்பதற்கான அத்தியாவசியமான தேவைப்பாடொன்றாகவும் சு.தா.ம. மாறியுள்ளது.
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




