மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆய்வுகூடமானது நீர், கழிவுநீர், வளி, ஒலி, மற்றும் தொழில்துறை வெளியேற்றங்களின் கண்காணிப்பில் தொழில்சார்ந்த அமைப்பாகும். சுற்றுப்புற நீர், தொழில்துறை கழிவு நீர், மண், சுற்றுப்புற வளித்தர கண்காணிப்பு, ஒலி மற்றும் அதிர்வு, தொழில்துறை வெளியேற்றுகை முதலியவற்றுக்கான சுற்றாடல் அளவீடுகளின் பெரும் பகுதியை கண்காணிப்பதற்கு உடமைத்த சிறந்த கருவிகளைக் கொண்டுள்ளது.
1 நீர் மற்றும் தொழில்துறை கழிவு நீரின் கண்காணிப்பினூடாக நீர் மாசுறுதலை கட்டுப்படுத்தல்
ஒழுங்குறுத்துகை நோக்கங்களுக்காக தொழில்துறை கழிவுநீரின் கண்காணிப்பு இணக்கப்பாடு.
தொழில்துறைகளிலுள்ள கழிவுகளின் வெளியேற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாட்டின் புலனாய்வு
ம.சு.அதிகாரசபையிலும், ஏனைய நிறுவனங்களிலும் நீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான ஒழுங்குவிதி மற்றும் நியமங்களை தயாரிப்பதற்கு தொழல்நுட்ப உதவிகளை வழங்குதல்.
2 நாட்டில் உள்ள உள்நாட்டு நீர் நிலைகளுக்குரிய நீரின் தரத்தை பாதுகாத்தல்
நாட்டிலுள்ள உள்நாட்டு மேற்பரப்பு நீர்நிலைகளிலுள்ள நீரின் தரத்திற்குரிய வழமையான கண்காணிப்பு.
மாசுற்ற நீர்நிலைகளை மீளமைத்து, மீள்நிலைப்படுத்தலுக்கான ஆய்வுகூட சேவைகளை வழங்குதல்.
வர்த்தக அடிப்படையில் சுற்றுப்புற நீர் தொடர்பான அடிப்படை தரவுகளை திரட்டுவதற்கு அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு (சு.தா.ம/ ஆ.சு.ப) ஆய்வுகூட சேவைகளை வழங்குதல்.
3 சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிகளை நடாத்துதல்.
நீர் மாசுறுதல், அல்லது வேறு ஏதாவது நீர் தொடர்பான விடயங்கள் குறித்து பாடசாலை பிள்ளைகளுக்கும் பொதுமக்களுக்குமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
தொடர்பு தகவல் |
|
பணிப்பாளர் ஆய்வுகூட சேவைகள் |
|
| தொலைபேசி | : 117877281 |
| மின்னஞ்சல் | : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




