SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திர திட்டத்தின் அமுலாக்கம்

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்கச் சட்டம், 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழ் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் (சு.பா.அ.) ஒரு முறைப்பத்தும்/ சட்ட கருவியாக உள்ளது. சு.பா.அ. தேவைப்படுத்தப்பட்ட தொழில்துறைகள் மற்றும் செயற்பாடுகள் 2008.01.25 ஆம் திகதியிடப்பட்ட, 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் . பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தொழில்துறைகளின் மூலம் ஏற்படும் மாசுறுதல் வாய்ப்பின் அடிப்படையில், , பட்டியல் "ஏ","பீ" மற்றும் "சி"என 3 பட்டியல்களின் கீழ் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பகுதி “ஏ” குறிப்பாக 80 உயர் மாசுறுதல் தொழில்துறை செயற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதோடு, பகுதி “பீ” 33 நடுத்தர மட்ட மாசுறல் செயற்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. “ஏ” மற்றும் “பீ” பட்டியலிலுள்ள தொழில்துறைகளுக்கான சு.பா.அ. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தொடர்புடைய மாகாண அலுவலகங்கள் அல்லது மாவட்ட அலுவலகங்களிலிருந்து பெறப்படுதல் வேண்டும்.

பகுதி “சி” ஆனது 25 குறைந்த மாசுறுதல் தொழில்துறை செயற்பாடுகளை உள்ளடக்கி இருப்பதோடு, அவை மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டவையாக இருக்கின்றன. பட்டியல் “சி” இல் உள்ள கைத்தொழில்களுக்கான சு.பா.அ. உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து பெறப்படுதல் வேண்டும். உள்ளூர் அதிகாரசபைகள் சு.பா.அ. வழங்குதல், பின்தொடர் நடவடிக்கை கண்காணிப்பு மற்றும் சட்ட வினைப்படுத்துகை போன்ற தொடர்புடைய பணிகளையும் மேற்கொள்கின்றன.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் (சு.பா.அ.) நோக்கங்கள்

  • தேசிய கழிவகற்றல் மற்றும் புகை வெளியேற்றல் தராதரங்களுக்கு இயைந்த வகையில் குறித்துரைக்கப்பட்ட (தொழில்துறை) செயற்பாடுகளிலிருந்து சுற்றாடலுக்கு வெளியிடப்படுகின்ற கழிவுகள் வெளியேற்றங்களை தடுத்தல் அல்லது குறைத்தல்.
  • சுற்றாடல் மீதான தாக்கத்தின் பின்னணியில் அனைத்து ஊடகங்களுக்கும் (வளி, காற்று, நிலம்) குறித்துரைக்கப்பட்ட (தொழில்துறை) செயன்முறைகளிலிருந்து கழிவுகளை வெளியிடுகின்றவை என கருதப்படுபவற்றுக்கு மாசுறுதல் கட்டுப்பாட்டு அனுகுமுறையொன்றை விருத்தி செய்தல்.
  • குறிப்பாக மாசுறுதல் செயன்முறைகளுக்கு மாசுபடுத்தல் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டலை வழங்கி தொழில்துறை மீது பொறுப்பை காட்டுதல்.
  • முறைமையானதும் மாறுகின்ற மாசு தணிப்பு தொழில்நுட்பம் மற்றும் தூய உற்பத்தி, கழிவு குறைத்தல் போன்ற புதிய அறிவு ஆகிய இரண்டுக்கும் நெகிழ்ச்சித் தன்மையுடன் பதிலளிக்கின்றது என்பதை உறுதிப்படுத்தல்.

சு.பா.அ. ஒன்றின் செல்லுபடியாகும் காலம்

  • பட்டியல் “ஏ” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை செயற்பாடுகளை உடையவை – அனுமதிப்பத்திரத்திம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து செல்லுபடியாகும் காலமனது ஆகக் கூடியது ஒரு வருடம்
  • பட்டியல் “பீ” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை செயற்பாடுகளை உடையவை – அனுமதிப்பத்திரத்திம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து செல்லுபடியாகும் காலமனது ஆகக் கூடியது மூன்று வருடங்கள்
  • பட்டியல் “சி” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை செயற்பாடுகளை உடையவை – அனுமதிப்பத்திரத்திம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து செல்லுபடியாகும் காலமனது ஆகக் கூடியது  மூன்று வருடங்கள்

தரங்களும் நியமங்களும்

தேசிய சுற்றாடல் சட்டத்தின் (தே.சு.ச.) பிரிவு 23 ஏ இன் கீழான அதிகாரத்துடன் அச்சட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய நியமங்கள் மற்றும் கட்ளைவிதிகளுக்கு இயைந்தாகவும், ம.சு.அதிகாரபையின் சு.பா.அனுமதிப்பத்திரம் அன்றி எந்தவொரு நபரும் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது என தெளிவாக குறிப்பிடுகின்றது.

2008 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (பாதுகாப்பு மற்றம் தரம்) ஒழுங்குவிதிகள் என வரையறுக்கப்பட்டு 2008/02/01 ஆம் திகதியிட்ட 1534/18 ஆம் இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தலில் சுற்றாடலுக்கு கழிவு நீரை வெளியேற்றுவதற்கான நியமங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கழிவுநீர் வெளியேற்றுகைக்கான நியமங்கள்

1996 ஆம் ஆண்டின் 01 இலக்க தேசிய சுற்றாடல் (ஒலி கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகள் என வரையறுக்கப்பட்டு 1996.05.23 ஆம் திகதியிடப்பட்ட 924/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினால் தொழில்துறைகளிலிருந்து ஒலி வெளியிடுகைகளின் கட்டுப்பாட்டுக்கான நியமங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய சுற்றாடல் (ஒலிக் கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகள் 1996

இறுதி அதிர்வு கட்டுப்பாட்டு நியமங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படும் அத்தகைய காலம் வரை பின்வரும் அதிர்வூட்டல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அதிர்வு கட்டுப்பாடு சம்பந்தமான இடைக்கால நியமங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இயந்திர நடவடிக்கைகள், நிர்மாண செயற்பாடுகள் மற்றும் நகர்வுள்ள வாகனப் போக்குவரத்து செயற்பாட்டின் அதிர்வுக்கான இடைக்கால நியமங்கள்

அழுத்தத்தின் மீதான காற்று வெடிப்பு மற்றும் நில அதிர்வுக்கான வெடிப்பு செயற்பாடுகளுக்கள் தொடர்பான இடைக்கால நியமங்கள்

கட்டடங்களில் குடியிருப்போரின் அசௌகரியங்களுக்கான நியமங்கள்

குறிப்பு:

ம.சு.அ. எதிர்பார்க்கும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான தேவை தொடர்பில் எந்தவொரு குறிப்பான தொழில்துறை, தொழிற்பாடு, அல்லது செயன்முறை தொடர்பிலும் தற்போது குறித்துரைக்கப்பட்டுள்ளவற்றை விட மிகவும் கடுமையான நியமங்கள் மற்றும் கட்டளைவிதிகள் ஒரு பணிப்புரையின் மூலம் விதிக்கப்படலாம்.

தொழில்துறை செயற்பாடுகளுக்கான சு.பா.அ. வழங்குவதற்கான நடைமுறைகள்

2008.01.25 ஆம் திகதியிடப்பட்ட 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் “ஏ” பட்டியல் மற்றும் “பி” பட்டியல் என்பவற்றில் உள்ள தொழில்துறைகளுக்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தொடர்புடைய மாகாண/மாவட்ட அலுவலகங்களினால் வழங்கப்படுவதோடு, பட்டியல் “சி” உள்ளவற்றிற்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபையினால் வழங்கப்படுகின்றன.

“ஏ” பட்டியல் மற்றும் “பீ” பட்டியல் உள்ள கைத்தொழில் நடவடிக்களுக்காக சு.பா.அ. வழங்குவதற்கான நடைமுறை.

  • படிமுறை 1: விண்ணப்ப நடைமுறை

சு.பா.அ. விண்ணப்பமானது, is published in the Form A of the schedule II of the 2008/02/01 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்
அட்டவணை II இன் “ஏ” படிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை ம.சு.அ. தலைமையகம் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து  பெற்றுக் கொள்ள முடியும். அது ம.சு.அ. இணையத்தளமான   www.cea.lk இலிருந்து  தரவிறக்கம் செய்யவும் முடியும்.

ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுக்குமாக உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ம.சு.அ. தொடர்புடைய மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்.

விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விபரங்களையும் விண்ணப்பதாரி கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுடன் பின்வரும் சான்று ஆவணங்களுடன் ம.சு.அதிகாரசபையின் மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

  1. வியாபார பதிவுக்கான சான்றிதழ்

  2. குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கு காணியை பயன்படுத்துவதற்கான சட்ட அதிகாரமளிப்பு (காணி உறுதியின் பிரதி, குத்தகை உடன்படிக்கையின் பிரதி முதலியன)

  3. இடத்தின் நில அளவை வரைபடத்தின் பிரதி.

  4. குறிப்பிட்ட இடத்தில் தொழில்துறையை தாபிப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரமளிப்பு (தொடர்புடைய உள்ளூராட்சி அதிகாரசபையிடமிருந்தான இணக்கப்பாட்டு சான்றிதழ் / வர்த்தக அனுமதிப்பத்திரம் அல்லது இணக்க பத்திரம்)

  5. குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான உற்பத்திச் சான்றிதழ் (குடிபான வகைகள், மருந்துப் பொருட்கள், கிருமிநாசினி உற்பத்தி முதலியன)

  6. மாசுறுதல் பொருட்களை குறைத்தலுக்கான பிரேரணை

  7. அதிகாரசபையினால் கோரப்பட்ட வேறு ஏதாவது விபரங்கள்/ ஆவணங்கள்

  • படிமுறை 2: விண்ணப்பத்தின் முன் மதிப்பீடு

ம.சு.அ. பொருத்தமான மாகாண/ மாவட்ட அலுவலகம் சு.பா.அ. வழங்குவதன் பொருத்தப்பாட்டை சரிபார்ப்பதற்கு முன் கூட்டியான மதிப்பீடொன்றை செய்யும் என்பதோடு தரப்பட்டுள்ள விபரங்களின் போதிய தன்மை என்பவற்றின் நிமித்தம் மதிப்பீடு கோரப்பட வேண்டிய பரீட்சிப்பு கட்டணத்தை தீர்மானித்த பின்னர் விண்ணப்பம் 3வது படிமுறைக்கு தொடர்ந்து செல்லும் அல்லது முதலாவது படிமுறைக்கு மீண்டும் செல்லும்.

  • படிமுறை 3: பரிசோதனை கட்டணத்தை தீர்மானித்தலும் கொடுப்பனவும்

தொழிலதிபரினால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய பரிசோதனை கட்டணத்தின் தொகையை சம்பந்தப்பட்ட மாகாண / மாவட்ட அலுவலகம் தீர்மானிப்பதோடு, தொழிலதிபருக்கு ஒரு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்படும். தற்போது குறைந்தது ரூபா. 3,360/- உம் ஆகக் கூடியது ரூபா. 11,200/- (அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட வரியுடன்) உம் பரிசோதனை கட்டணமாக உள்ளது.

தொழிலதிபர்கள் அத்தகைய கட்டணத்தை ம.சு.அ. சபையின் பொருத்தமான மாகாண/ மாவட்ட அலுவலகம், தலைமை அலுவலகம் அல்லது பிற ஏதாவது மாகாண/ மாவட்ட அலுவலகத்திற்கு செலுத்துதல் வேண்டும். கொடுப்பனவு செய்யப்பட்டதன் பின்னர் பற்றுச்சீட்டு தொடர்புடைய மாகாண/ மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பற்றுச்சீட்டு கிடைக்கப்பெற்றவுடன் 4வது படிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

  • படிமுறை 4: களப் பரிசோதனை

தொழில்துறை தொடர்பில் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தரவுகளை மதிப்பிட்டுக் கொள்வதற்கும்  மற்றும் மாசுறுதல் கட்டுப்பாட்டுடன் அத்தகைய தொழில்துறை இயங்குவதற்கான சாத்தியப்பாட்டை தீர்மானிக்கவும் அலுவலர்கள் குழுவொன்று களப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளும்.

  • படிமுறை 5: சிபாரிசுகளுடனான பரிசோதனை அறிக்கை

சமூக தாக்கங்களையும் அவற்றிற்கான சிபாரிசுகளுடனும் மற்றும் விண்ணப்பதாரரினால் வழங்கப்பட்ட தொழில்துறை, தொழில்நுட்ப அறிக்கை தொடர்பில் களப் பரிசோதனை விபரங்களின் அடிப்படையிலும் பரிசோதனை குழுவானது அறிக்கை ஒன்றை தயாரிக்கும். இவ் அமைவிடம் சிபாரிசு செய்யப்படுமானால் 6வது படிமுறை தொடர்ந்துசெல்லும்.

சிபாரிசு செய்யப்பட்ட முன்மொழிவு மேலதிக மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரேரணை ஒன்றை கோரினால் தொழிலதிபர் அத்தகைய வேண்டுகோளை நிறைவேற்றும் படி அறிவிக்கப்படுவார். விண்ணப்பதாரியினால் வழங்கப்பட்ட மேலதிக விபரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் சு.பா.அ. வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுவதோடு 6வது படிமுறை தொடரும்.

அனுமதிப்பத்திரத்தை வழங்குவதை அல்லது மறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதன்நிமித்தம் விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.

தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, அனுமதிப் பத்திரமொன்றை பெறுவதற்கு அதிகாரசபையினால் நிராகரிப்படுவதானால்  பாதிக்கப்பட்ட எந்தவொரு விண்ணப்பதாரியும் அவருக்கு / அவளுக்கு அத்தகைய தீர்மானம் அறிவிக்கப்பட்ட திகதியின் பின்னர் முப்பது (30) நாட்களுக்குள் அத்தகைய தீர்மானத்திற்கு எதிராக சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலமான ஒரு மேன்முறையீட்டை செய்யலாம்.

  • படிமுறை 6: சு.பா. அனுமதிப்பத்திரத்திற்கான அங்கீகாரம்

பரிசோதனை குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் சு.பா. அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கான ம.சு.அ. சபையின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வழங்குவதோடு, சு.பா. அனுமதிப்பத்திரத்திற்குரிய வரைவு நிபந்தனைகளுக்குக்கான சட்ட அங்கீகாரத்தை ம.சு.அ. சட்டப்பிரிவு வழங்குகின்றது.

  • படிமுறை 7: அனுமதிப்பத்திர கட்டணம்

சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், தொழில்துறை செயற்பாட்டுக்கான சு.பா.அ. வழங்குவதற்குகாக ம.சு. அதிகாரசபையைக்கு கிடைக்கக்கூட்டிய வகையில் தொழிலதிபர் அனுமதிப்பத்திர கட்டணத்தை செலுத்தும் படி கோரப்படுகின்றனர்.
அனுமதிப் பத்திர கட்டண விபரங்கள்

  1. பட்டியல் “ஏ” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகள் – ரூபா.: 7,500.00 தலா அனுமதிப்பத்திரத்திற்கு / ஒரு வருடத்திற்கு மேற்படாதது.
  2. பட்டியல் “பீ” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகள் – ரூபா.:-6,000.00 தலா அனுமதிப்பத்திரத்திற்கு / மூன்று வருடங்களுக்கு மேற்படாதது.
  • படிமுறை 8: சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை வழங்குதல்

அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தியவுடன், அதிகாரமளிக்கப்பட்ட ஒப்பதாரரின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் குறித்துரைக்கப்பட்ட காலப் பிரிவை விட விஞ்ஞாத காலப் பிரிவுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். பட்டியல் “ஏ” ஒரு வருடம், பட்டியல் “பீ” மற்றும் பட்டியல் “சி” மூன்று வருடங்களாகும்.

பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகளுக்கான சு.பா.அ. வழங்குவது தொடர்பான நடைமுறைகள்.

பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகளுக்கான சு.பா.அ. வழங்குதலானது 2008.02.14 இல் இருந்து அமுலாகும் வண்ணம் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. (மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை)

பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகளுக்கு சு.பா.அ. ஒன்றை வழங்கும் போது கீழ் குறிப்பிட்ட  நடைமுறை பிரயோகிக்கப்படுகிறது.

  • படிமுறை 1: விண்ணப்ப நடைமுறை

சு.பா.அ. விண்ணப்பமானது,2008/02/01 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் அட்டவணை II இன் ஏ படிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்ப படிவத்தை ம.சு.அ. தலைமையகம் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து  பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் ம.சு.அ. இணையத்தளமான  www.cea.lk இலிருந்தும்  தரவிறக்கம் செய்ய முடியும்.

விண்ணப்பிக்கும் நோக்கத்திற்காக ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுக்கும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தொழில்துறை அமைந்துள்ள உள்ளுராட்சி அதிகாரபையிடம் சமர்ப்பிக்வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விபரங்களையும் விண்ணப்பதாரி கட்டாயம் வழங்க வேண்டும்.

  1. வியாபார பதிவுக்கான சான்றிதழ்

  2. குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கு காணியை பயன்படுத்துவதற்கான சட்ட அதிகாரமளிப்பு (காணி உறுதியின் பிரதி, குத்தகை உடன்படிக்கையின் பிரதி முதலியன)

  3. இடத்தின்  நில அளவை வரைபடத்தின் பிரதி.

  4. குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான உற்பத்திச் சான்றிதழ் (குடிபான வகைகள்,  மருந்துப் பொருட்கள், கிருமிநாசினி உற்பத்தி முதலியன)

  5. மாசுறுதல் பொருட்களை குறைத்தலுக்கான பிரேரணை

  6. அதிகாரசபையினால் கோரப்பட்ட வேறு ஏதாவது விபரங்கள்/ ஆவணங்கள்

  • படிமுறை 2: விண்ணப்பத்தின் முன் மதிப்பீடு

சம்பந்தப்பட்ட  உள்ளூராட்சி அதிகாரசபை  சு.பா. அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தப்பாடு, தரப்பட்டுள்ள விபரங்களின் போதிய தன்மை, என்பவற்றை முன் மதிப்பீடொன்றை செய்து, செலுத்தப்பட வேண்டிய பரீட்சிப்பு கட்டணத்தை தீர்மானிக்கும்.

  • படிமுறை 3: பரிசோதனை கட்டணத்தை தீர்மானித்தலும் கொடுப்பனவும்

தொழிலதிபரினால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய பரிசோதனை கட்டணத்தின் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபை  தீர்மானிப்பதோடு, தொழிலதிபருக்கு அத்தகைய கொடுப்பனவை செய்ய  ஒரு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்படும். கொடுப்பனவு உள்ளூராட்சி அதிகாரசபைக்கு செலுத்தப்படும். கொடுப்பனவு செய்யப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி அதிகாரசபையிடமிருந்து ஒரு பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும். பற்றுச்சீட்டு கிடைக்கப்பெற்றவுடன் 4வது படிமுறை மேளகொள்ளப்படும்.

  • படிமுறை 4: களப் பரிசோதனை

உத்தேச தொழில்துறை தொடர்பில் விண்ணப்பத்தில் உள்ள தரவுகளை அனுகுவற்காக ஒரு பரிசோதனைக் குழுவொன்று களப் பரிசோதனை ஒன்றை மேற்கொண்ட்டு குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கான இடத்தின் பொருத்தப்பாட்டை தீர்மானிக்கும்.

  • படிமுறை 5: சிபாரிசுகளுடனான பரிசோதனை அறிக்கை

பரிசோதனை குழுவானது விண்ணப்பதாரரினால் வழங்கப்பட்ட களப் பரிசோதனை, சம்பந்தப்பட்ட ஆவணம், தொழில்நுட்ப அறிக்கை மற்றும் அவர்களது ஆலோசனைகள் உள்ளிட்ட தொடர்பில் சமூகசார் அம்சங்களின்  அறிக்கை ஒன்றை தயாரிக்கின்றது. பரிசோதனை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறி்க்கை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. குழு தொடர்புடைய உள்ளூராட்சி அதிகாரசபையினால் நியமிக்கப்படுகின்றது. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின்  பொறுப்பு யாதெனில்  அனுமதிப்பத்திர வழங்கல் நடைமுறை பற்றி உள்ளுராட்சி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்குவதாகும். குறித்த உள்ளுராட்சி அதிகாரசபைக்கு குறித்துரைக்கப்பட்ட ம.சு.அதிகாரசபையின் மாகாண/ மாவட்ட அலுவலகத்தின் பிரதேச சுற்றாடல் உத்தயோகத்தர் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கான செயலாளராக தொழிற்படுகின்றார்.

  • படிமுறை 6:   தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

பரிசோதனைக்குழு மற்றும் தொழில்துறையோடு தொடர்புடைய சம்பந்தப்பட்ட ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில்  தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவானது தனது சிபாரிசுகளை செய்கின்றது.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு சுயமாக கள பரிசோதனையொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கலாம்: அடுத்த நடவடிக்கை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின்  பரிசோதனையின் அடிப்படையில் எடுக்கப்படும்.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின்  சிபாரிசுகள்  மேலதிக மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரேரணை ஒன்றை கோரினால் தொழிலதிபர் அத்தகைய வேண்டுகோளை நிறைவேற்றும் படி அறிவிக்கப்படுவார். விண்ணப்பதாரியினால் வழங்கப்பட்ட மேலதிக அறிக்கைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7வது படிமுறையை தொடருவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படும் .

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதை மறுப்பதற்கு சிபாரிசுசெய்தால் அதன்படி விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும். தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, அனுமதிப் பத்திரமொன்றை பெறுவதற்கு அதிகாரசபையினால் நிராகரிப்பதனால்  பாதிக்கப்பட்ட எந்தவொரு விண்ணப்பதாரியும் அவருக்கு / அவளுக்கு அத்தகைய தீர்மானம் அறிவிக்கப்பட்ட திகதியின் பின்னர் முப்பது (30) நாட்களுக்குள் அத்தகைய தீர்மானத்திற்கு எதிராக எழுத்துமூலமான ஒரு மேன்முறையீட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு செய்யலாம்.

  • படிமுறை 7 சு.பா. அனுமதிப்பத்திரத்திற்கான அங்கீகாரம்

பரிசோதனை குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு என்பவற்றினால் செய்யப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் சு.பா. அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கான உள்ளூராட்சி அதிகாரசபையின் அதிகாரமளிக்கப்பட்ட நபருக்கு  அங்கீகாரம்  வழங்கப்படுகின்றது.

  • படிமுறை 8: அனுமதிப்பத்திர கட்டணம்

அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், தொழில்துறை செயற்பாட்டுக்கான சு.பா.அ. வழங்குவதற்கு உள்ளூராட்சி அதிகாரசபையை இயலச் செய்யும் வகையில் தொழிலதிபர் அனுமதிப்பத்திர கட்டணத்தை செலுத்தும் படி கோரப்படுகின்றனர்.

பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகள் – ரூபா: 4,000.00 தலா அனுமதிப்பத்திரத்திற்கு / மூன்று (03) வருடங்களுக்கு மேற்படாதது.

  • படிமுறை 9: சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தியவுடன், அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பத்துடன் ஆகக்கூடியது மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுகின்றது.

சு.பா. அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்

(அ) பட்டியல் "A" மற்றும் பட்டியல் "B" இல் உள்ள செயற்பாடுகளுக்கு சு.பா.அ. புதுப்பித்தல்

குறித்துரைக்கப்பட்ட ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் சு.பா.அ. புதுப்பித்தல் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.

  1. சு.பா.அ. காலவாதித் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்

  2. செயற்பாட்டுக்கு ஏதாவது மாற்றங்கள், திருத்தங்கள் அல்லது விஸ்தரிப்புக்கள் ஒரு மாதத்திற்கு முன்னர்
  • படிமுறை1: விண்ணப்ப நடைமுறை

சு.பா.அ. விண்ணப்பமானது,  2008/02/01 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்  பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு விண்ணப்ப படிவத்தை ம.சு.அ. தலைமையகம் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து  பெற்றுக் கொள்ள முடியும். அது ம.சு.அ. இணையத்தளமான www.cea.lk  இலிருந்து  தரவிறக்கம் செய்யவும் முடியும்.

உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுக்குமாக ம.சு.அ. தொடர்புடைய மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்.

  • படிமுறை: 2 கள பரிசோதனைகள்

  1. முன்னைய சு.பா. அனுமதிப்பத்திரத்தில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு ம.சு.அதிகாரபை அதிகாரிகள் குழுவொன்று கள பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளும்.

  2. சு.பா.அ. புதுப்பித்தலுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைக்கு பரிசோதனைக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

  3. நிபந்தனைகளினை மீறப்பட்டமை அவதானிக்கப்பட்டால், பொருத்தமான மாசுறுதல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து விண்ணப்பதாரி/ தொழிலதிபருக்கு அறிவிப்படும்.

  • படிமுறை 3 :  புதுப்பித்தலுக்கான அனுமதிப்பத்திர கட்டணம்

எந்தவொரு சு.பா. அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான கட்டணமானது முன்னைய சு.பா.அ. கட்டணத்தை போன்றதாகும். புதுப்பித்தலின் செல்லுபடியாகும் காலப்பிரிவு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.

சு.பா.அ. கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் அனுமதிப்பத்திர வழங்குவது கவனத்திற் கொள்ளப்படும்.

() உள்ளூராட்சி அதிகாரசபையினல் (உ.அ)வழங்கப்பட்ட சு.ப.அ. புதுப்பித்தல் பட்டியல் "C" உள்ள செயற்பாடுகள்

உ.அ. இனால் வழங்கப்பட்ட சு.பா. அனுமதிப்பத்திரமொன்றை புதுப்பிப்பதற்கான நிலைப்பாட்டை ம.சு.அ. கொண்டதாக இல்லை. தொழிலதிபர்கள் புதுப்பித்தலுக்காக தொடர்புடைய உள்ளூராட்சி அதிகாரசபைக்கே விண்ணப்பித்தல் வேண்டும்.

தொழில்துறை செயற்பாடுகளின் பின்தொடர் கண்காணிப்பு

தொழில்துறை செயற்பாடுகளின் பின்தொடர் கண்காணிப்பு பின்வருவனவற்றை மேற்கொள்கின்றன;

  1. தொழில்துறைகளில் தாபிக்கப்பட்டுள்ள மாசுறுதல் கட்டுப்பாடு முறைமைகளின் செயலாற்றுகையை சோதனை செய்தல்.

  2. சு.பா.அ. குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுடன் தொழில்துறை இணங்கிச் செல்கின்றதா என்பதை சோதனை செய்தல்.

  3. தொழில்துறை செயற்பாட்டில் ஏதாவது மாற்றம், விரிவாக்கம், திருத்தம் உள்ளதா என்பதை சரிபார்த்தல்.

கண்காணிப்பு செயற்பாடுகள் பின்வருமாறு மேற்கொள்ளப்படுகின்றன;

  1. சீரான  இடைவெளிகளில் தொழில்துறைகளை பரிசோதனை செய்தல்.

  2. கழிவுநீர் பகுப்பாய்வு, ஒலி/ அதிர்வு அளவுகளின் அறிக்கைகளை கண்காணித்தலும் தொழில்துறை செயற்பாட்டில் மாசுறுதல் கட்டுப்பாட்டு முறைமைகளின் வினைத்திறன் / மதிப்பீடு குறித்த அறிக்கைகள்.

இந்த செயன்முறைகளில் தொழிலதிபர்கள், சு.பா.அ. சுட்டிக்காட்டியுள்ளவாறு அத்தகைய சோதனை அறிக்கைகளை கால ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு பிரபல ஆய்வு கூடங்களை உசாவுகை செய்யும் படி வேண்டப்படுவர்.

தொழில்துறைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

சட்ட நடவடிக்கைகமுறைகள் தே.சு.சட்டத்தின் பகுதி IV A இன் கீழ் பின்வரும் சந்தர்ப்பங்களில் கையாளப்படுகின்றது :

  1. அனுமதிப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது நியதிகள், நிபந்தனைகள், நியமங்கள் என்பவற்றினை மீறிச்செயற்படும் தொழில்துறை செயற்பாடுகள்/ செயன்முறை நடவடிக்கைகள்.

  2. சு.பா.அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளாத குறித்துரைக்கப்பட்ட தொழில்துறைகள்.

  3. குறிக்கப்பட்ட நியமங்களுக்கு இயைபற்ற வகையில் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள் மூலம் கழிவுளை சுற்றாடலுக்கு வெளியேற்றுதல்.

தொழில்துறைகளினால் தொடர்ந்து நிபந்தனைகள் மீறப்படுவதனால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

சட்ட நடவடிக்கை முறை பின்வரும் செயற்பாடுகளை உள்ளடக்கும்

  1. சு.பா.அனுமதிப்பத்திரத்தினை இரத்துச் செய்தல் / இடைநிறுத்துதல்.

  2. சு.பா.அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தை நிராகரித்தல்.

  3.  சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் மேன்முறையீடுகளை விசாரித்தல்.

  4.  சட்டரீதியான அறிவித்தல்களை அனுப்புதல்.

  5.  வழக்குகளை தொடருதல்.

Monday, 27 June 2016 04:58 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

 

greenbanner2018-eng

 g-gif-update

 

infoacttam

envposter-tam

epayment 

ReEBwaste

ngotamil2

 

weerawilatam

manu

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12