SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. செயன்முறையின் படிமுறைகள்

1.    ஆரம்பநிலை தகவல்களை சமர்ப்பித்தல்


சு.தா.ம. / ஆ.சு.ப. ஒன்றுக்கு தேவைப்படுகின்ற உத்தேச கருத்திட்டமொன்றின் இயற்கை தன்மை, அமைவிடம், தாக்கங்கள் தொடர்பான தகவல்களை கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு கருத்திட்ட முன்மொழிவாளர் சமர்ப்பித்தல் வேண்டும்.
கருத்திட்ட அமைவிடம் தீர்மானிக்கப்பட்டு மற்றும் கருத்திட்ட கோட்பாடு பூர்த்தி செய்யப்பட்டவுடன் கருத்திட்ட முன்மொழிவாளர் ஒருவரியால் உத்தேச கருத்திட்டம் பற்றிய ஆரம்பநிலை தகவல்களை சமர்ப்பிப்பதற்கான சிறந்த காலமாகும்.


2.    ஆரம்பநலைத்தகவல்ளை வடிகட்டல்


ஆரம்பநலைத்தகவல்ளை வடிகட்டல் செயற்பாடானது பின்வரும் தீர்மானங்ளை மேறகொள்ள உதவுகின்றது
குறித்த உத்தேசகருத்திட்டத்தின் அங்கீகாரமானது தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு IV இ இன் கீழா அல்லது சு.தா.ம ற்கான வேறுபொருத்தமான சட்டத்தின்கீழா அமையவேண்டும்.
திட்ட ஒப்புதல் நிறுவனமானது போதுமானஅளவு ஆரம்பநலைத்தகவல்கள் திரட்டப்பட்டதும் சு.தா.ம நடவடிக்கையின் நோக்கெல்லையை வரையறுத்தல் செயன்முறையை ஆரம்பித்துவிடும்.


3.    சுற்றாடல் சார் நோக்கெல்லையை வரையறுத்தல்


சுற்றாடல்சார் நோக்கெல்லை வரையறையானது, உத்தேச செயற்பாட்டுடன் தொடர்பான முக்கிய விடயங்களை அடையாளங் காண்பதற்கும் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களின் எல்லையை தீர்மானிப்பதற்குமான ஆரம்பநிலை மற்றும் திறந்த செயன்முறையாகும். க.அ. முகவராண்மையானது நோக்கெல்லையை வரையறுத்தல் செயற்பாட்டிற்காக சம்பந்தப்பட்ட அனைத்து முகவராண்மைகள், கருத்திட்ட முன்மொழிவாளர்கள், ஏனைய ஆர்வமுடைய ஆட்கள் (தேவையாயின்) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கும் நோக்கெல்லை வரையறை செயன்முறையின் பின்னர் சு.தா.ம. / ஆ.சு. பரிசோதனைகளுக்கான ஆய்வெல்லையை (ToR) க.அ.மு. வெளியிடும்.


4.    சு.தா.ம. / ஆ.சு.ப. அறிக்கை தயாரித்தல்


சு.தா.ம/ ஆ.சு.ப. அறிக்கை என்பவற்றை தயாரிப்பதும், மதிப்பிடலுக்காக க.அ.மு. சமர்ப்பிப்பதும் கருத்திட்ட பிரேரணையாளரின் பொறுப்பாகும். சு.தா.ம. அறிக்கைகளின் தயாரிப்பில் பல விசேட துறைகள் உள்ளடக்கப்பட வேண்டியுள்ளதால் உசாவுநர்கள் குழுவொன்றின் சேவைகளையும் வேண்டி நிற்கலாம். சு.தா.ம. அறிக்கைகளை தயாரிக்கின்ற ஆலோசனை நிறுவனங்களின் பட்டியலொன்று ம.சு. அதிகாரசபையில் காணப்படுகிறது. ம.சு.அதிகாரசபை பதிவு செய்திராத பொருத்தமான, தகைமையுள்ள ஆலோசகர்களின் சேவைகளையும் கருத்திட்ட பிரேரணையாளர் இதற்கு மேலதிகமாக பயன்படுத்த முடியும். சு.தா.ம. அறிக்கைகள் தேவையான தராதரத்தை கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்புடைய துறையில் நம்பகமான, போதிய தகைமைகளையுடைய நிபுணர்களின் சேவைகளையும் கருத்திட்ட பிரேரணையாளர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும்.


5.    பொதுமக்கள் பங்கேற்பும் அறிக்கையின் மதிப்பீடும்


சு.தா.ம. அறிக்கையை பெற்றதன் பின்னர் க.அ. முகவராண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்த நியதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக போதிய சரிபார்த்தலுக்கு உட்படுத்தப்படும். பின்னர் அது 30 வேலை நாட்களுக்கு, பொதுமக்கள் கருத்துக்கள்/ பரிசோதனை என்பவற்றுக்காக வெளிப்படையாக வைக்கப்படும்.
சு.தா.ம. அறிக்கை தொடர்பாக ஏதாவது பொதுமக்கள் கருத்துரை காணப்படுமாயின், அவை பதிலுக்காக கருத்திட்ட பிரேரணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுமக்கள் கருத்துரை காலத்தை தொடர்ந்து, சு.தா.ம. அறிக்கையை மதிப்பீட செய்து தனது சிபாரிசுகளை செய்வதற்காக தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்றை (TEC) க.அ.மு. நியமிக்கும்.
ஆ.சு.ப. அறிக்கைகள் பொதுமக்கள் கருத்திற்கு வெளிப்டையாக வைக்கப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லை. எனவே தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு மட்டுமே உட்படுத்தப்படும்.


6.    தீர்மானம் எடுத்தல்


தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் கருத்திட்டமொன்றுக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி க.அ.மு. அதன் தீர்மானத்தை மேற்கொள்ளும்.  க.அ.மு என்பது ம.சுஅ. இல்லாவிட்டால், அது அங்கீகரித்த வழங்குவதற்கு முன்னர் ம.சு. அதிகாரசபையால் அங்கீகரித்தை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
கருத்திட்ட பிரேரணையாளர் தீர்மானத்தை சம்மதிக்காவிட்டால், சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரது தீர்மானமே இறுதியானதாக இருக்கும்.


7.    கண்காணிப்பு இணக்கப்பாடு


சு.தா.ம./ ஆ.சு.ப. அங்கீகாரம் என்பன கருத்திட்ட பிரேரணையில் நிறைவேற்ற எதிர்பார்க்கின்ற நிபந்தனைகளுடன் இயைந்ததாகவே பொதுவாக வழங்கப்படுகின்றது. அமுலாக்கப்படும் நிபந்தனைகள்/ தணிப்பு நடவடிக்கைகளை ம.சு.அ. அல்லது க.சு.மு. கண்காணிக்கும்.  கருத்திட்ட பிரேரணையாளர் நிபந்தனைகளை மீறுவராயின் அங்கீகாரம் மீள் பெற்றுக் கொள்ளப்படும். சு.தா.ம. ஒழுங்குவிதிகள் பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
•    1993.06.24 ஆம் திகதிய 772/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
•    1995.02.23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
•    1999.11.05 ஆம் திகதிய 1104/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
- 1993.06.24 ஆம் திகதிய 772/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி{தேசிய சுற்றாடல் (சட்டதிட்டங்ளை அங்கீகரிப்பதற்கான செயன்முறை)}ஒழுங்குவிதி 01 ற்கமைவாக திட்ட ஆதரவாளரிடமிருந்து நிர்வாக கட்டணங்களை வசூலிப்பதற்கான திட்டம் காணப்படுகின்றது.
-திட்டம் நிறைவடைய முன்னமே சுற்றாடல் அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றதாகி காலாவதியாகும் பட்சத்தில் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்துக்கான நீட்டிப்பு தேவையானது.
- திட்ட ஆதரவாளர் சரியான நேரத்தில் கோரிக்கை விடுக்காத பட்சத்தில் காலாவதியான சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை மீள செல்லுபடியானதாக்கும் செயன்முறை பின்பற்றப்படவேண்டும்.
- குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் / விரிவுபடுத்தப்படும் அல்லது கைவிடப்படும் சந்தர்ப்பத்தில், திட்ட ஆதரவாளர், திட்ட ஒப்புதல் நிறுவனத்திற்கு அறிவிக்கக்கடமைப்பட்டவராவார்.

Thursday, 14 September 2023 06:11 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

PEA2024cooltext452053042169170 2024-03-15-Closing-Date-extended-up-to-31st-March-2024 1

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்