தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் அமுலாக்கத்திற்கு வசதிப்படுத்தலுக்கு பங்களிப்புச் செய்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு முன்னைய புவி சார் தகவலியல் அலகின் செயற்பரப்பானது விஸ்தரிக்கப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகாக 2013 ஆம் ஆண்டில் மீள்பெயரிடப்பட்டது.
மற்றும்
அலகின் பிரதான தொழிற்பாடுகள்
நாட்டின் சுற்றாடலின் தர சீர்குலைவுக்கு இட்டுச் செல்கின்ற முக்கிய சுற்றாடல் விடயங்கள் / பிரச்சினைகளை அடையாளங் கண்டு முன்னுரிமையளித்தல்.
ம.சு. அதிகாரசபையின் ஆணையுடன் இணைந்து செல்லத்தக்கதான சுற்றாடல் முகாமைத்துவம் தொடர்பான அளவாய்வுகள், புலனாய்வுகள் மற்றும் ஆய்வுகளை நடத்தி, மேம்படுத்தல், வசதிளித்தல், அவற்றை ஒருங்கிணைத்து அத்தகைய தகவல்களை பரப்புதல்.
ம.சு.அதிகாரசபையின் கட்டளைக்குப் பொருத்தமாக தேவைப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றாடல் ஆராய்ச்சிகளிற்குரிய சிபாரிசுகள்/ முடிவுகளுடனான ஆராய்ச்சி தரவுத்தளமொன்றை விருத்தி செய்தல்.
சுற்றாடல் திட்டமிடல், முகாமைத்துவம், மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காகவும் அத்தகைய தகவல்களை பரப்பவிடுவதற்காகவும் தேவையான பகுப்பாய்வுளை மேற்கொள்ளல் மற்றும் புவி இடஞ்சார்ந்த தரவுகளை வழங்குவதற்கு இலங்கையின் விரிவான புவி இடஞ்சார்ந்த சுற்றாடல் வளங்களின் தரவுத்தளத்தின் விருத்தியும் இற்றைப்படுத்துகையும்.
ம.சு. அதிகாரசபையின் மாகாண, மாவட்ட அலுவலகங்களுடன் தரவுகள்/ தகவல்கள் பரிமாற்றலுடன் பயனாளிகளின் இடை முகத்தை அதிகரிப்பதற்கு இணையத்தள ரீதியான புவி சார் தகவலியல் முறைமையை விருத்தி செய்தல்.
ஒளியியல் மற்றும் PALSAR தொலை உணர்வை பயன்படுத்தி எண்ணியல்மயப்படுத்தப்பட்ட மாவட்ட வளங்களின் உரு வரிப்படங்ளை தயார் செய்வதன் மூலம் இலங்கையின் தென் கிழக்கு ஆற்றங்கரை படுக்கை பிராந்தியத்திலுள்ள ஈரநிலங்களின் வரைபடமிடல் மற்றும் மாற்றத்தை கண்டுபிடித்தல் பற்றிய ஆய்வை மேற்கொள்ளல்.
மண் அரிப்பு மற்றும் வண்டற்படிவ விளைச்சல் என்பவற்றை எதிர்வு கூறலில் புவி இடஞ்சார்ந்த அணுகுமுறை - சமனலவெவவ நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடய ஆய்வு.
பு.த.மு. / தொலை உணர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொல்கொட வாவி படுக்கை மீதான நிலப்பாவனை/ நில மறைப்பு மாற்றங்களின் பகுப்பாய்வு.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழான குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய சிறுகைந்நூல் - 2013
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999