SinhalaSriLankaEnglish (UK)

குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள்

கீழ் ஆ.சு.ப. / சு.தா.ம. தேவைப்படுகின்ற குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


பகுதி I


1981 ஆம் ஆண்டின் 57 ஆம்“குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள்” மட்டுமே, ஆ.சு.ப./ சு.தா.ம. உட்படுத்தப்பட வேண்டி தேவைப்படுத்தப்படுகின்றன. தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் இலக்க கரையோர பாதுகாப்பு சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறான கரையோர வலையத்திற்கு வெளியே பூரணமாகவா அல்லது பகுதியாகவா கருத்திட்டங்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் அமையுமாகவிருந்தால்,


1.    சிறிய நீர்ப்பாசன பணிகள் நீங்கலாக அனைத்து ஆற்றுப் பெருநில அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன கருத்திட்டங்கள் (நீர்ப்பாசன கட்டளை சட்டத்தின் அத்தியாயம் 453 இனால் வரையறுக்கப்பட்டவாறு).
2.    4 ஹெக்டயர்களுக்கும் அதிக பரப்புடைய ஈரநிலங்கள் மற்றும் காணிகள் மீட்பு.
3.    அரிமர பிரித்தெடுப்புக்குரிய 5 ஹெக்டயர்களுக்கு மேற்பட்ட காணிகள்.
4.    காடல்லாத பயன்பாட்டுக்காக 1 ஹெக்டயருக்கு அதிகமான பரப்பைக் கொண்ட வனப் பாதுகாப்பு
5.    50 ஹெக்டயருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை சுத்தப்படுத்தல்
6.    சுரங்க வேலை மற்றும் கனிப்பொருள் அகழ்வு
•    25 மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்துடன் சம்பந்தப்படுகின்ற உள்நில ஆழ் சுரங்க வேலை மற்றும் கனிப்பொருள் அகழ்வு.
•    ஒட்டுமொத்த 10 ஹெக்டயருக்கு மேற்பட்ட நிலப்பரப்பிற்குரிய உள்ளக மேற்பரப்பு சுரங்க வேலை.
•    அனைத்து தொலைகடல் சுரங்க வேலை மற்றும் கனிப்பொருள் அகழ்வு
•    எந்தவொரு வதிவிட அல்லது வர்த்தக பகுதியின் 1 கிலோ மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பளிங்கு, சுண்ணாம்புக்கல், சிலிக்கா,குவாட்ஸ் மற்றும் அழங்கார கற்கள் போன்றவற்றின் மொத்த கற்சுரங்க தொழிற்பாடுகள் மற்றும் இயந்திரமயப்படுத்தப்பட்ட அகழ்வு.
7.    போக்குவரத்து முறைமைகள்
•    10 கி.மீ. மேற்பட்ட நீளமுடைய தேசிய மற்றும் மாகாண மட்ட நெடுஞ்சாலைகளின் நிர்மாணம்
•    புகையிரத தண்டவாள நிர்மாணம்
•    விமான நிலையங்களின் நிர்மாணம்
•    விமான ஓடு பாதைகளின் நிர்மாணம்
•    50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் அதிகரித்த விமான நிலையங்கள் அல்லது விமான ஓடு பாதைகளின் விரிவாக்கம்
8.    துறைமுகங்கள், இறங்குதுறைகள் அபிவிருத்தி
•    துறைமுகங்களின் நிர்மாணம்
•    இறங்குதுறைகளின் நிர்மாணம்
•    வருடாந்தம் 50% அதிகரிப்பு அல்லது தலா வருடத்திற்கு கையாளப்படுகின்ற அளவை அதற்கு மேற்பட்டதாக அதிகரித்தலுடன் தொடர்பான துறைமுகை விரிவாக்கம்
9.    வலு உற்பத்தி மற்றும் மின்இணைப்புக்கள்
•    50 மெகாவாட்களுக்கு அதிகமான நீர் மின்சார நிலையங்களின் நிர்மாணம்
•    தனியான இடமொன்றில் 25 மெகாவோற்களை மிஞ்சிய மின்பிறப்பாக்கு திறன் கொண்ட அல்லது தற்போதுள்ள நிலையங்களில் 25 மெகாவோற்களுக்கு மேலதிகமான கொள்ளவை அதிகரிப்பதற்கான அனல்மின் நிலையங்களின் நிர்மாணம்
•    அணுக்கருத்திறன் மின்நிலையத்தின் நிர்மாணம்.
•    அனைத்து புதுப்பிக்கத்தக்க சக்தியை அடிப்டையாகக்கொண்ட 50 மெகாவோற்களுக்கு அதிகமான மின்பிறப்பாக்கி நிலையங்கள்.
10.    மின்செலுத்துகைக் கம்பிகளை பொருத்துதல்
•    50 கிலோவோற்களுக்கு அதிகமான உவோற்றளவு மற்றும் 10 கிலோமீற்றர் நீளத்திற்கு அதிகமான மேலசெல்லும் மின்செலுத்துகைக் கம்பிகளின் பொருத்துகை.
11.    வீடமைப்பும் கட்டிடங்களும்
•    10 ஹெக்டயர்களுக்கு மேற்பட்ட காணிப் பரப்பை உள்ளடக்கியதாக வீடமைப்பு, தொழில்துறை, வர்த்தக உட்கட்டமைப்பு போன்றவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைக்கப்பட்ட பன்முக அபிவிருத்தி செயற்பாடுகள்.
12.    மீள்குடியேற்றம்
•    அவசர நிலைமைகளின் கீழ் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றம் தவிர 100 குடும்பங்களுக்கு மேற்பட்ட தன்னிச்சையான மீள்குடியேற்றம்.
13.    நீர் வழங்கல்
•    தினமொன்றுக்கு ½ மில்லியன் கன மீற்றர்களுக்கு மேற்பட்ட கொள்ளவுடைய நிலக் கீழ் நீர் எடுத்தல் கருத்திட்டங்கள்.
•    ½ மில்லியன் கன மீற்றர்களுக்கு மேற்பட்ட கொள்ளவுடைய நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணம்.
14.    குழாய்வழி வசதிகள்
•    1 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட நீளத்தில் வாயு மற்றும் திரவ (நீர் நீங்கலாக) மாற்றல் குழாய்வழிகளை அமைத்தல்.
15.    ஹோட்டல்கள்
•    99 அறைகளுக்கு மேற்பட்ட அல்லது 40 ஹெக்டயர்களுக்கு அதிகமான பரப்பில் பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதற்கான ஹோட்டல்கள் அல்லது விடுமுறை விடுதிகள் அல்லது கருத்திட்டங்கள் என்பவற்றின் நிர்மாணம்.
16.    மீன்பிடித்துறை
•    4 ஹெக்டயருக்கு அதிகமான பரப்பில் நீரக வாழ் உயிரின விருத்தி கருத்திட்டங்கள்.
•    மீன்பிடித் துறைமுகங்களின் நிர்மாணம்
•    50% அதிகரிப்புக்கு உட்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுக விரிவாக்கல் கருத்திட்டங்கள் அல்லது ஆண்டொன்றுக்கு அதற்கு மேற்பட்ட மீன் கையாளுதல் கொள்ளளவு.
17.    சகல சுரங்கத்தொழில்களும்
18.    கழிவு அகற்றல்
•    நாளொன்றுக்கு 100 தொன் கொள்ளளவு அதிகரிப்பை கொண்டுள்ள எந்தவொரு திண்ம கழிவு அகற்றல் வசதியொன்றை நிர்மாணித்தல்
•    நஞ்சு அல்லது அபாயகரமான கழிவை கையாளத்தக்கதாக கழிவு கருத்திட்ட தொகுதியின் நிர்மாணம்.
19.    10 ஹெக்டயருக்கு அதிகமான அளவுடைய அனைத்து தொழில்துறை பேட்டைகள் மற்றும் பூங்காக்களை அபிவிருத்தி செய்தல்.
20.    இரும்பு மற்றும் உருக்கு தொழில்துறைகள்
•    இரும்பை மூலப் பொருளாக பயன்படுத்தி நாளொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட அளவில் இரும்பு மற்றும் உருக்கு பொருட்ளை உற்பத்திசெய்தல்.
•    கழிவிரும்பு உலோகத்தாதுக்களை மூலப் பொருளாக பயன்படுத்தி நாளொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட அளவில் இரும்பு மற்றும் உருக்கு பொருட்ளை உற்பத்திசெய்தல்.
21.    இரும்பல்லாத அடிப்படை உலோக தொழில்துறைகள்
•    தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு அதிகமான உற்பத்தி கொள்திறனுடைய அலுமினியம் அல்லது செம்பு அல்லது ஈயத்தை உருக்கியெடுத்தல்.
22.    அடிப்படை தொழில்துறை இரசாயனங்கள்
•    தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட உற்பத்தி கொள்திறனுடைய நச்சு இரசாயன பொருட்ளை சூத்திரமாக்கல்.
•    தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு மேற்பட்ட உற்பத்தி கொள்திறனுடைய நச்சு இரசாயன பொருட்ளை உற்பத்திசெய்தல்.
23.    பூச்சிகொல்லிகள் மற்றும் உரம்
•    தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய பூச்சிகொல்லிளை சூத்திரமாக்கல்.
•    தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய பூச்சிகொல்லிளை உற்பத்திசெய்தல்.
24.    பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய இரசாயனங்கள்
•    மசகு எண்ணெயிலிருந்து பெற்றோல், எரிபொருள் எண்ணெய்கள், ஒளியெற்றல் எண்ணெய்கள், உராய்வு நீக்கி எண்ணெய் மற்றும் மசகு, வான் மற்றும் கடல்சார் எரிபொருள் மற்றும் திரவ பெற்றோலிய வாயு என்பவற்றை உண்டாக்கும் பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையங்கள்.
•    எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தினமொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய பெற்றோலிய இரசாயனங்ளை உற்பத்திசெய்தல் அல்லது இயற்கை வாயு பிரிப்பு.
25.    டயர் மற்றும் டியுப் தொழில்துறைகள்
•    இயற்கை மற்றும் செயற்கைச்சேர்மமான இறப்பரிலிருந்து தினமொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய டயர் மற்றும் டியுப் பொருட்களின் உற்பத்தி.
26.    சீனித் தொழிற்சாலைகள்
•    தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய சுத்தப்படுத்திய/ விளக்கிய சீனி உற்பத்தி
27.    சீமெந்து மற்றும் சுண்ணாம்பு
•    கிளிங்கர் (clinker) தயரிப்பினூடாக சீமெந்து உற்பத்தி.
•    தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கொள்ளளவுடைய சூளையில் சுண்ணாம்பு தயாரித்தல்
28.    கடதாசி மற்றும் காகிதக் கூழ்
•    தினமொன்றுக்கு 50 தொன் மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய கடதாசி அல்லது காகிதக் கூழ் உற்பத்தி.
29.    நூற்றல், நெய்தல் மற்றும் புடைவை வகைகளின் நிறைவாக்கம்
•    தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய நூற்றல், நெய்தல், சாயமிடல் மற்றும் அச்சிடல் தொழிற்பாடுகள் ஒன்றிணைந்த பருத்தி அல்லது செயற்கைச்சேர்மமான புடைவை ஆலைகள்.
30.    தோல் பதனிடும் ஆலைகள் மற்றும் தோல் உற்பத்தி பொருட்களின் நிறைவாக்கம்
•    தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய குரோமிய உலோகப்பூச்சு தோல் பதனிடும் ஆலைகள்.
•    தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய தாவரச்சாய (பட்டை) தோல் பதனிடும் ஆலைகள்.
எவ்வாறாயினும், மேலே (19) இல் விபரிக்கப்பட்டவாறு தொழில்துறை பேட்டைகள் மற்றும் பூங்காக்களினுள்அமைகின்ற 20-30 வரையிலான குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சட்டத்தின் பகுதி IV C இன் ஏற்பாடுகளின் கீழ் அங்கீகாரம் தேவையற்றதாகும்.
31.    1969 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அணுசக்தி அதிகாரசபை சட்டத்தில் விபரிக்கப்பட்டவாறு கதிர் இயக்கப் பொருட்களின் உற்பத்தி, பாவனை அல்லது களஞ்சியப்படுத்துகையுடன் தொடர்புடைய அல்லது தேசிய பாதுகாப்பு காரணங்கள் நீங்கலாக, 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிபொருட்கள் சட்டத்தின் வரையறுக்கப்பட்ட வெடிபொருட்கள் சம்பந்தமான தொழில்துறைகள்.


பகுதி II


32.    பகுதி I இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து கருத்திட்டங்கள் மற்றும் பொறுப்புகள் என்பவற்றின் அளவை பொருட்படுத்தாமலே மற்றும் அவை கரையோர வலயத்தில் அமைந்துள்ளதா அல்லது இல்லையா என்பதையும் பொருட்படுத்தாமலே, அது அட்டவணையின் பகுதி III இல் குறிப்பிட்ட பகுதியினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்திருந்தல்.
32.    (அ).1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறான அனைத்து வர்த்தக கட்டிடங்களினதும் நிர்மாணம் மற்றும் வதிவிட வீட்டு கூறுகளின் நிர்மாணம் என்பவற்றின் அளவை பொருட்படுத்தாமலே மற்றும் அவை கரையோர வலயத்தில் அமைந்துள்ளதா அல்லது இல்லையா என்பதையும் பொருட்படுத்தாமலே, அது அட்டவணையின் பகுதி III இல் குறிப்பிட்ட பகுதியினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்திருந்தல்.
33.    இரும்பு மற்றும் உருக்கு
34.    இரும்பல்லாத அடிப்படை உலோகம்
35.    அடிப்படை தொழிலதுறை இரசாயனங்கள்
36.    பூச்சிகொல்லிகள் மற்றும் உரங்கள்
37.    செயற்கைச்சேர்மமான பிசின்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மனிதனால் தயரிக்கப்பட்ட நார் வகைகள்
38.    ஏனைய இரசாயனப் பொருட்கள்
39.    பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய-இரசாயனப் பொருட்கள்
40.    டயர் மற்றும் டியுப்கள்
41.    சீனித் தயாரிப்பும் சுத்தப்படுத்தலும்
42.    மதுசாரவகைகள்
43.    மோல்ட் வாசனைமது மற்றும் மோல்ட்
44.    சீமெந்து, கிளின்கர் மற்றும் சுண்ணாம்புக்கல்
45.    உலோகமல்லாத கனிப்பொருட்கள்
46.    கடதாசி, கடதாசி கூழ் மற்றும் கடதாசி பலகைகள்
47.    நூற்றல், நெய்தல் மற்றும் புடைவை வகைகளின் நிறைவாக்கம்
48.    தோல் பதனிடும் ஆலைகள் மற்றும் தோல் உற்பத்தி பொருட்களின் நிறைவாக்கம்
49.    கப்பல் கட்டுதல் மற்றும் திருத்த வேலைகள்
50.    புகையிரதப் பாதை உபகரணங்கள்
51.    மோட்டார் வாகனங்கள்
52.    வானூர்தி       


பகுதி III               


1.    1988 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய மரபுரிமை வனச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது பகுதியினுள் அல்லது எல்லைகளிலிருந்து 100 மீட்டர் தூரத்தினுள்;
வன கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 451). 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு சட்டத்தின் வரையறுக்கப்பட்டவாறு கரையோர வலயத்தினுள் அத்தகைய பகுதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்.


2.    பின்வரும் பகுதிகளில் அத்தகைய பகுதிகள் கரையோர வலயத்தினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்,  


•    மண் பாதுகாப்பு சட்டத்தின் (அத்தியாயம் 540) கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது அரிப்பு ஏற்படக்கூடிய பிரதேசம்.
•    வெள்ள பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 449) கீழ் பிரகடனப்படுத்தப்பட்டவாறு வெள்ளம் ஏற்படும் ஏதாவது பிரதேசம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்டவாறு 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது வெள்ள பாதுகாப்பு பிரதேசங்கள்.
•    முடியரசு காணி கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 454) கீழ் பிரகடனப்படுத்தப்பட்டவாறு பொது கால்வாய்களின் கரையோரம் குளத்தின் 60 மீற்றர் தூரத்தில் இருந்தும் மற்றும் அதன் செல்வழியின் ஏதாவது நோக்கு இடத்திலிருந்து 25 மீற்றர்களுக்கு கூடுதலான அகலத்தை கொண்டிருத்தல்.
•    ஒரு நீர்த்தேக்கத்தின் முழு வழங்கல் மட்டத்திற்க அப்பால் உள்ளது ஏதாவது ஒதுக்கு இடம்.
•    தொல்பொருள் கட்டளை சட்டத்தின் (அத்தியாயம் 188) இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட ஏதாவது தொல்பொருளியல் சார் ஒதுக்கு, பண்டைய அல்லது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்.
•    தாவரவியல் பூங்கா கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 446) பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது இடம்.
•    தாவர, விலங்கின பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 469) எல்லைகளிலிருந்து 100 மீற்றர் இடப்பரப்பினுள் அல்லது அப்பிரதேசத்தினுள் ஏதாவது பகுதி சரணாலயம் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது.
•    உயர் வெள்ள மட்ட சமஉயரக்கோட்டிலிருந்து 100 மீட்டர் இடப்பரப்பினுள் அல்லது அப்பிரதேசத்தினுள்ள பொது ஏரி/ வாவியாக முடியரசு காணி கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 454) வரையறுக்கப்பட்டவாறு மற்றும் சொல்லப்பட்ட கட்டளைச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டது.
குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.            
    1993 ஆம் ஆண்டின் யூன் 24 ஆம் திகதிய 772/22
    1999 ஆம் ஆண்டின் நவம்பர் 5 ஆம் திகதிய 1104/22
    1999 ஆம் ஆண்டின் நவம்பர் 29 ஆம் திகதிய 1108/1

Thursday, 14 September 2023 06:24 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

PEA2024cooltext452053042169170 2024-03-15-Closing-Date-extended-up-to-31st-March-2024 1

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்