SinhalaSriLankaEnglish (UK)

மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கான புதிய உபாயமுறைகள் / சாதனங்களின் அறிமுகம்

  1. கழிவு நீர் கட்டண நிகழ்ச்சித் திட்டம்:

அநேகமாக நாடுகளைப் போல இலங்கையும் தொழில்துறை மாசுறுதல் கட்டுப்பாடு தொடர்பில் மரபு ரீதியான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அணுகுமுறையொன்றையே (CAC) பின்பற்றுகிறது. மாசுறுதலை கட்டுப்படுத்தப்படுகின்ற பிரதான கருவியாக இருப்பது சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமாகும். கழிவு நீர் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றுவதற்கான நியமங்கள் ம.சு.அ. இனால் குறித்துரைக்கப்பட்டுள்ளது. தொழிற்பாட்டுக்காக சு.பா.அ. பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய தொழில்துறைகளின் பட்டியலும் குறித்துரைக்கப்பட்டிருக்கின்றன.

சு.பா.அ. திட்டத்தின் ஊடாக கழிவுநீர் அகற்றலின் கட்டுப்பாடு இருக்கின்ற போதிலும் இலங்கையின் அநேகமான பிராந்தியங்களில் பல நீர் நிலைகளின் தரம் தொடர்ந்தும் மோசமாகி வருகின்றது. இதற்கான காரணம் குறித்துரைக்கப்பட்டுள்ள நியமங்கள் கவனக் குவிப்பு அடிப்படையில் அமைந்திருப்பதோடு, சுற்றாடலுக்கு விடப்படுகின்ற மாசுறுதல் பொருள் அளவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

  1. சுத்தமான உற்பத்தி மற்றும் கழிவு குறைப்பு உத்திகள் தொடர்பிலான மேம்பாடு

சுத்தமான உற்பத்தி செயன்முறை (CP) ஊடாக தொழில்துறைகள் வெளியிடப்படுகின்ற கழிவுகளின் அளவை குறைக்க முடியும். அதனூடாக இறுதி தொழிற்படல் சுத்திகரிப்பு செலவுகளை குறைக்கலாம். சுத்தமான உற்பத்தி உத்திகளை பின்பற்றுவதானது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகும். ஏனெனில் தொழில்துறையானது, அதன் இலாபங்களை அதிகரித்து கொள்கின்ற அதேவேளை ம.சு.அ. சபையின் கட்டுப்பாட்டு தேவைப்பாடுகளை நிறைவேற்றவும் முடியும்.

துரதிஷ்டவசமாக, இலங்கையில் சுத்தமான உற்பத்திக் கோட்பாடு அநேகமான தொழில்துறைகளை இதுவரை சென்றடையவில்லை. ஆதலால் மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது தொழில்துறைகள் தமது செயன்முறையில் சுத்தமான உற்பத்தி கோட்பாட்டை உள்ளடக்குவதோடு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

செலவு வினைத்திறன்மிக்க முறையில் கழிவு பிறப்பாக்கத்தை குறைப்பதற்கு சுத்தமான உற்பத்தி உத்திகள் தொழிலதிபர்களுக்கு உதவுகின்றன. சுத்தமான உற்பத்தி உத்திகளை பின்பற்றவதன் மூலம் சுற்றாடலுக்கான மாசுறுதல் அளவு குறைக்கப்படும் என்பது இதன் மற்றுமொரு பெறுமானமாகும். ஆதலால் சுத்தமான உற்பத்தியை கடைப்பிடிப்பதானது, மாசுறுதல் அளவை குறைப்பதற்கு தொழிலதிபர்களுக்கு நன்மை பயக்கும் ஓர் விடயமாகும்.

  1. தேசிய பசுமை விருதுகள்

கோட்பாடு

தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய சுற்றாடலுக்கு வெளியிடப்படும் தொழில்துறை சார் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கான பிரதான சட்டரீதியான கருவியாக இருப்பது தற்போதுள்ள சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமாகும். அது கட்டளை மற்றும் கட்டுப்பாடு முறையொன்றாக அமுல்படுத்தப்படுகின்றது. மறுபுறத்தில் சுற்றாடல் தாக்க மதிப்பீடானது (சு.தா.ம.) அபிவிருத்தி கருத்திட்டங்களிலிருந்து இயற்கை சுற்றாடலை பாதுகாத்து, முகாமை செய்வதற்கான சட்டமுறையான கருவியாகும். இரண்டு சட்ட வினைப்படுத்துகை நடைமுறைகளுக்கும் அப்பால் ம.சு.அ. சபையானது நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் கல்வி, மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றது.

எவ்வாறாயிலுனம் மேற்படி மூன்று முறைமைகளும், சுற்றாடலுக்கான மாசுறுதல் பதார்த்தங்களை கட்டுப்படுத்துவதில் ம.சு.அ.  இலக்குகளை அடைவதற்கு போதியதாக இல்லை. களத்தில் மேற்படி முறைமையை அமுல்படுத்துவதிலுள்ள ம.சு.அ. நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. ஆதலால் பல்வேறுபட்ட செயற்பாடுகளிலிருந்து மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்ட கருவிகளுடன் ஏனைய நிருவாக சார் கருவிகளையும் பிரயோகிக்க வேண்டிய முக்கியத்துவமும் தேவைப்பாடும் உள்ளது.

மறுபுறத்தில் ம.சு.அ. சபையானது சுற்றாடலுக்கு மாசுப் பொருட்களை வெளியேற்றுகின்ற அல்லது அகற்றுகின்ற செயற்பாடுகளுக்கிடையே அமுல்படுத்துவதற்கான சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாடு, மற்றும் முகாமைத்துவத்திற்கான உபாயமுறையொன்றாக தேசிய பசுமை விருது வழங்கல் திட்டத்தை அடையாளங் கண்டுள்ளது. பசுமை விருது வழங்கல் திட்டமானது சுற்றாடலை பசுமையாக்குதல், மாசுறுதலை தவிர்த்தலில் சிறந்த நடைமுறைகளை பிரயோகிப்பதற்கு பல்வேறு துறைகளுக்குமிடையே போட்டித்தன்மை சார் மன்றமொன்றை உருவாக்கின்றது. அதனூடாக இலங்கையில் சுற்றாடலின் தரத்தை மேம்படுத்துகின்றது.

இந்த விருதுகள் தொழில்துறைகளின், அவற்றின் தொழில்துறை செயன்முறை, சுற்றாடலை பசுமையாகவும் சுத்தமாகவும் பேணுவதற்கான அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு, தொடர்பாடல் என்பவற்றுக்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமொன்றாக கருதப்படுகின்றன. இது வெற்றிபெற்றோர்களினால் கையாளப்பட்ட சிறந்த தெரிவுகளை, கண்டுபிடித்து, கலந்துரையாடி பரப்புவதற்கான அரங்கமொன்றாக இருக்கின்ற அதேவேளை மொத்தத்தில் குறித்த தொழில்துறை செயற்பாட்டிலும் செயன்முறைகளிலும் அவர்களது முயற்சிகளை பாராட்டுவதாகவும் அமைகின்றது. இது தொழில் முயற்சியாளர்களும். சேவை வழங்குநர்களும் சுற்றாடலை பசுமையாகவும் சுத்தமாகவும் வைப்பதற்கு ஊக்குவிப்பதற்கான மிகச் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.

இலக்கும் நோக்கங்களும்

தொழில்துறைசார் விருது வழங்கல் திட்டமானது அதன் முன்னேற்றத்தில் பின்வரும் இலக்குகளையும் நோக்கங்களையும் மையப்படுத்தியதாக அமைகின்றது.

  1. இலங்கையில் உயர் தரத்திலான சுற்றாடல் நடைமுறைகளைக் கொண்ட தொழில்துறை சார்/ நிறுவனங்களுக்கு அரசாங்க அங்கீகாரத்தை வழங்குதல்.

  2. நியமங்கள், ஒழுங்குவிதிகளுடன் இணக்கப்பாட்டுக்கான மாசுறுதல் கட்டுப்பாடு, சுற்றாடல் முகாமைத்துவ முறைமை அடிப்படையிலான சுய கண்காணிப்பு ஊக்குவித்தலும், சுற்றாடலின் பேணத்தகு பேணுதலும்.

  3. தமது தொழில் வளாகத்தினுள் சுத்தமான, பசுமையான சுற்றாடல் தொடரில் தொழிற் குழுக்களுக்கிடையே ஆர்வத்தை அதிகரித்தல்
  1. சுற்றாடலின் தரத்தை மேம்படுத்துவதற்கு புதிய உபாயமுறையின் விருத்தியும் கையாளுகையும்.
  1. சுற்றாடல் நட்புறவு கொண்ட செயன்முறைகள் ஊடாக தயாரிக்கப்பட்ட தொழில்துறை உற்பத்திகளுக்கான சந்தை அங்கீகாரத்தை வழங்கி தொழிலதிபர்களின் சுற்றாடல் கடமை உணர்வை மேம்படுத்துதல்.
Tuesday, 23 July 2013 14:56 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்