சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்துரைக்கப்படாத செயற்பாடுகளுக்காக ம.சு.அ (CEA) இனால் பின்பற்றப்பட்ட மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றுதான் இட பொருத்தப்பாட்டை மதிப்பிடுதலாகும். பொது கழிவு நீர் சுத்திகரிப்பு முறைமைகள் போன்ற உரிய சுற்றாடல் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்ட தேசிய சுற்றாடல் சட்டத்தின் பகுதி IV C இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பேட்டைகளுக்கு வெளியே அமைக்கப்படவுள்ள அனைத்து உத்தேச தொழில்துறை செயற்பாடுகளும் அவற்றின் தொழிற்பாட்டு கட்டத்திற்கு முன்னர் சுற்றாடல் திறன் சார்ந்த மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு முகாமை செய்வதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதலால் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்துறைகள் (SMIS) சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு உட்படாத அனைத்து சாத்தியமான எதிர்கால தொழில்துறை இடங்களும் அல்லது புதிய தொழில்துறை செயற்பாடுகளை கொண்ட தாபனங்கள் உத்தேச இடத்துக்காக ம.சு.அ (CEA) சபையிடமிருந்து சுற்றாடல் சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகின்றன.
பொருத்தப்பாட்டை கவனத்திற் கொள்ளும்போது, சுற்றுப் புறச் சூழல், காணிப் பயன்பாடு தொடர்பில் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களை வலயமிடல் திட்டங்கள் குறித்த அதன் இணக்கப்பாடு, இடைத்தாங்கலுக்காக காணப்படுகின்ற காணித் தேவை, மேலதிக மாசுறுதல் சுமையை பெறுவதற்கும், கழிவுளை அகற்றுவதற்கு தேவைப்பாடும் இடத்தின் கொள்ளளவு போன்ற நியதிகளின் அடிப்படையில் உத்தேச இடங்கள் மதிப்பிடப்படுகின்றன.
சுற்றாடல் சிபாரிசு நடைமுறைகளின் பிரதான நோக்கம் யாதெனில் உத்தேச தொழில்துறை செயற்பாட்டிலிருந்து எழத்தக்கதான, எதிர்பார்க்கத்தக்க சுற்றாடல் மாசுறுதலை முன்கூட்டியே இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான போதிய தணிப்பு நடவடிக்கை எடுப்பதாகும்.
சுற்றாடலுக்கு கழிவுகளை/ மேலதிக பொருட்கள் விடுவிக்கக்கூடிய, படிவுசெய்யக்கூடிய, அல்லது சுற்றாடலுக்கு இரைச்சல் அல்லது வாயுக்களை வெளிப்படுத்தக்கூடிய தற்போதுள்ள தொழில்துறைகளிடமிருந்து மாசுறுதலை குறைப்பதற்கு ம.சு.அ. (CEA) இனால் குறித்துரைக்கப்பட்ட நியமங்களுக்கு இணைந்து செல்கின்ற தொழில்துறைகளுக்கு சு.பா. அனுமதிப்பத்திரமானது வழங்கப்படுகின்றது. ஆனால், ஆரம்பத்தில் தணிப்பு நடவடிக்கைகளை ஒன்றிணைக்காது ஆபத்தான அமைப்பில் தமது தொழில்துறைகளை அமைத்து நியமங்களுடன் இணைந்து செல்வதற்கு சிரமமான சில தொழில்துறைகள் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
இந்த பிரச்சினையை வெற்றி கொள்வதற்கும் ஆரம்ப கட்டத்திலுள்ள சாத்தியமான மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கும் ம.சு.அதிகாரசபையினால் சுற்றாடல் சிபாரிசுகள் வழங்கப்படுகின்றன. இது ம.சு.அதிகாரசபைக்கும் பல்வேறு துறைகளிலுமுள்ள தொழிலதிபர்களுக்கும் நன்மை பயக்கத்தக்கதாகும். ம.சு.அ. ஆரம்ப கட்டத்தில் சாத்தியான மாசுறுதலை கட்டுப்படுத்துவதன் ஊடாக நன்மை அடைவதோடு தொழில்துறைகள் சுற்றாடல் சார் சிபாரிசுகளில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அவர்களும் அதன் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
சுற்றாடல் சிபாரிசை பெறுவதற்கான நடைமுறைகள்
ம.சு.அ. தலைமை அலுவலகம் மற்றும் ம.சு.அ. மாகாண/ மாவட்ட அலுவலகங்களிலிருந்துவிண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளுதல்.
தேவையான, பொருத்தமான ஆவணங்களுடன் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ம.சு.அ. சபைக்கு சமர்ப்பித்தல் (இடத்தின் நிலஅளவை வரைபடம், ஏதாவது கட்டிட வரைபடம், அருகிலுள்ள நகரத்திலிருந்து உத்தேச இடத்தின் பாதைவழி அமைப்பு)
விண்ணப்பம் உரிய முறையில் நிரப்பப்பட்டு பொருத்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் பரிசோதனை கட்டணத்தை செலுத்தும் படி விண்ணப்பதாரருக்கு ஒரு எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்படும் (தற்போது ஆகக் குறைந்த தொகை ரூபா. 3,360/- ஆகக் கூடிய தொகை ரூபா. 11,200/- (அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க வரிகளுடன்)
பரிசோதனை கட்டணத்தை செலுத்தியதன் பின்னர், ம.சு.அ. அலுவலர்கள் குழுவொன்றினால் ஒரு களப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இடம் சிபாரிசு செய்யப்பட முடியுமாயின் சுற்றாடல் சிபாரிசை வழங்குவதற்கு, சாத்தியமான சுற்றாடல் மாசுறுதலை தணிப்பதற்கான நிபந்தனைகளுடன் மாநகர ஆணையாளர்/ தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபையின் தலைவருக்கு சிபாரிசு செய்யப்படும். சுற்றாடல் சிபாரிசின் பிரதியொன்று விண்ணப்பதாரிக்கும், தொடர்புடையதாயின் ஏதாவது ஏனைய நிறுவனங்களுக்கும், அமைப்புக்களுக்கும் அனுப்பப்படும்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999