அரநாயக்க, பிபிலே மலை, கடுகண்ணாவையை சூழவுள்ள மலைப்பிராந்தியத்திலிருந்து உருவெடுக்கின்ற மகா ஓயாவினது (538 சதுர கி.மி. நீரேந்து பரப்பையும் 130 கி.மி. நீளமான கால்வாயையும் கொண்டதாகும். இந்த நீரேந்து பகுதிகளில் சராசரியான மழைவீழ்ச்சி, வருடத்திற்கு 3800 மி.மீ கடந்ததாக வழமையாக காணப்படுகிறது. சராசரி வருடாந்த ஓட்டம் சுமார் 1485 மில்லியன் மீட்டராகும்.
மகா ஓயா கடுகண்ணாவையிலிருந்து ஆரம்பித்து மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் ஆகிய மூன்று மாகாணங்களையும் உள்ளடக்கியதாக கேகாலை (மாவட்டத்தின் 32 %), குருநாகல் (மாவட்டத்தின் 8%) கம்பஹா (மாவட்டத்தின் 23%) மற்றும் புத்தளம் மாவட்டத்தின் சிறுபகுதி (2%) ஆகிய நான்கு மாவட்டங்கள் ஊடாக கடந்து செல்கின்றது. மகா ஓயாவின் நீர் முகமானது, பரந்த நெல், வயல், இறப்பர், தேயிலை மற்றம் தென்னந் தோட்டங்களை கொண்டதாக சிறப்பாக உள்ளது.
மகா ஓயா மிகச் சிறிய அளவு நீர் மின்சார சக்தியை கொண்டதாகவே உள்ளது. மகா ஓயா நீரின் மிக முக்கிய பயன் யாதெனில் குடிநீருக்கான வழங்கலாகும். தற்போது 200,000 நகர சனத்தொகைக்கு பயனளித்து அதன் வடிநிலத்தில் 14 நீர் வழங்கல் உள்ளீர்ப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மாதிரி பரிசோதனை அமைவிடங்களின் வரைபடம்
மாதிரி பரிசோதனை இடங்கள்: | பு.நி.முறைமை இணைப்புகள் : |
மாதிரி பரிசோதனை முனை 1 (கொச்சிகடை பாலம்) | ( 79 51 51 E, 7 16 14 N) |
மாதிரி பரிசோதனை முனை 2 (படல்கம பாலம்) | ( 80 11 39 E, 7 18 07 N) |
மாதிரி பரிசோதனை முனை 3 (கொடதெனியாவ பாலம்) | ( 80 03 41 E, 7 17 07 N) |
மாதிரி பரிசோதனை முனை 4 (கிரிஉள்ள பாலம்) | ( 80 07 23 E, 7 19 45 N) |
மாதிரி பரிசோதனை முனை 5 (அலவ்வ பாலம்) | ( 80 14 26 E, 7 17 34 N) |
மாதிரி பரிசோதனை முனை 6 (கரதன பாலம்) | (80 18 55 E, 7 19 17 N) |
மாதிரி பரிசோதனை முனை 7 (ஹிரிவதுன்ன பாலம்) | ( 80 23 04 E, 7 17 17 N) |
மாதிரி பரிசோதனை முனை 8 (மாவனல்ல பாலம்) | ( 80 26 20 E, 7 15 10 N) |
மாதிரி பரிசோதனை நிலைமை |
WQI |
உயிர்ச் சூழல்தரம் |
உயிர்ச் |
நிறக் குறியீடு |
கொச்சிகடை பாலம் | 53 | பலவீனம் | D | ஒரேஞ்சு |
படல்கம பாலம் | 63 | பலவீனம் | D | ஒரேஞ்சு |
கொடதெனியாவ பாலம் | 68 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் கிரிஉள்ள |
பாலம் | 72 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் கிரிஉள்ள |
அலவ்வ பாலம் | 66 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் கிரிஉள்ள |
பாலம் | 68 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் கிரிஉள்ள |
ஹிரிவதுன்ன பாலம் | 60 | பலவீனம் | D | ஒரேஞ்சு |
மாவனல்ல பாலம் | 74 | ஓரளவு சிறந்தது | C | மஞ்சள் கிரிஉள்ள |
மகா ஓயாவின் மாதிரி பரிசோதனை இடங்களுக்கு எதிரான நீ.த.சு. வரைவு
கண்காணிப்பு நிலையங்களுக்கான நீர் தர சுட்டெண் புள்ளிகள் மேல் நீரோட்டத்திலிருந்து கீழ் நீரோட்டம் வரையான நிலை இலக்குகளுக்கு பிரிக்கப்பட்டுள்ளன. மகா ஓயாவின் ஆகக் கூடிய நீ.த.சுட்டெண் மாவனெல்லை பாலத்தில் அமைந்துள்ள மிக உயரமான மேல் நீரோட்ட இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு (நிலைய இல. 8) ஆகக் குறைந்த புள்ளி கொச்சிகடை பாலத்தில் அமைந்துள்ள மிகக் கீழ் நீரோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகா ஓயாவின் நீளம் சுமார் 130 கி.மீ. ஆகும். முதலாவது 30 கி.மீ. நீளமான மேல் நீரோட்டத்திலிருந்து மாவனல்ல பாலம் வரை மேல் நீரோட்ட பகுதியாக கருதப்படுவதோடு, இறுதி 30 கி.மீ. நீளமான கீழ் நீரோட்டம் பலாங்கொடை பாலம் வரை கீழ் நீரோட்டம் பகுதியாக கருதப்படுவதோடு எஞ்சிய 70 கி.மி. நீளமான பகுதி மகா ஓயாவின் நடுத்தர நீரோட்ட பகுதியாக கருதப்படுகின்றது.
மேல் நீரோட்ட பகுதியே, ஏனைய ஏழு பகுதிகளுடன் ஒப்பிடும் போது சிறந்த தரத்திலான நீரை கொண்டுள்ளது. நீர் தர சுட்டெண் கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களிலும் முதன்மையானதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடமானது மாவனல்ல நகரத்திற்கான குடிநீர் மூலத்திற்கான சிறந்ததாக அமைந்துள்ளது. இது மலைத்தொடரிலிருந்து கீழ் நோக்கி ஓடினாலும் ஆதலால் இந்த இடத்திற்கான மேல் நீரோட்டத்தை அசுத்தப்படுத்துகின்ற மூலங்கள் குறைவானதாக உள்ளதோடு, அவை குளித்தல், கழுவுதல் போன்ற உள்ளூர் பயன்பாடுகளாக உள்ளன. இவை அளவீடு பங்களிப்புகளில் பிரதிபலிப்பதோடு, இங்கு மிகையளவு அரிதாகவும் அவை இடம்பெறும்போது சிறியதாகவும் உள்ளன. விசேடமாக, மாசுத் தன்மை மிகையாகவுள்ள ஒரேயொரு அளவுகோளாக இருப்பதோடு, சந்தரப்பத்திற்கேற்ப ஏனைய அளவீடுகளின் மிகையும் உள்ளன. (16.7 % COD, 16.7 % Pb, 16.7%FC)
மாவனல்ல பாலத்திற்கான நடு நீரோட்ட இடம், அதன் மேல் நீரோட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்தளவு நீர்த் தர தன்மையுடையதாக உள்ளது. நீர் தர சுட்டெண் கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களில் ஏழாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேல் நீரோட்டத்தின் பெறுமதியை விட குறைந்ததாக உள்ளது. இந்த இடமானது தே.நீ.வ.வ. சபையின் ஹிரிவதுன்ன நீர் உள்ளீர்ப்புக்கு சற்று அருகே அமைந்துள்ளதோடு, ஒப்பீட்டு ரீதியில் சமவெளியான ஓரளவு நகரமயமான நிலப்பகுதிகளினூடாக நீரோட்டம் ஓடுகின்றது. ஆதலால் ஆற்றுடன் கலக்கும் விகிதம் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகும். இந்த இடப் பரப்பு இறப்பர் தொழிற்சாலை, வாகன சேவை நிலையங்கள் போன்றவற்றின் தொழில்துறை செயற்பாடுகள் மூலம் கணிசமான அளவு கழிவு நீரை பெறுகின்றன. மானுடவியல் செயற்பாடுகளான மணல் அகழ்தல், குளித்தல், உள்ளூர் கழிவுகளை வெளியேற்றுதல் என்பனவும் ஒப்பீட்டு ரீதியில் உயர்வானதாக இருப்பதோடு, குறைவான நீர்த் தரம், குறைந்த நீர் தர சுட்டெண் பெறுமதி என்பவற்றுக்கும் பங்களிப்பு செய்கின்றன. கலங்கல் தன்மை அனைத்து நேரங்களிலும் அதிகரித்த அளவீடுகள் கொண்டதாகவும் ஏனைய அளவீடுகள் சில சமயம் அதிகரிக்கத்தக்கதாகவும் உள்ளன. (16.7%DO, 16.7%COD, 16.7%BOD, 33.3%FC)
ஹிரிவதுன்ன பாலத்திற்கு அருகிலுள்ள நடுநீரோட்ட இடம் அதன் மேல் நீரோட்ட இடத்துடன் ஒப்பிடும் பேது சிறந்த நீர் தரத்தை கொண்டிருந்தது. கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களில், நீர் தர சுட்டெண் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டதோடு, மேல் நீரோட்ட பெறுமதியை விட உயர்வானதாக உள்ளது. இந்த இடமானது ஓரளவு நெருக்கமாகவும் தே. நீ.வ.வ.சபை நீர் உள்வாங்கலுக்கு 100 m மேல் இடத்திற்கும் அருகாமையிலுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் மலைப்பாங்கான, சமவெளியில் நீர் பாய்ந்து ஓடுகிறது. ஆதலால் காற்றுடைய வேகம் ஓரளவு உயர்வாகவுள்ளது.
இந்த பகுதி சிறியளவு தொழில்துறை செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படும் சுமாரான அளவு கழிவு நீரைப் பெறுகின்றது. மானுடவியல் செயற்பாடுகளான மணல் அகழ்தல், குளித்தல், உள்ளூர் கழிவுகளை வெளியேற்றுதல் என்பனவும் ஒப்பீட்டு ரீதியில் உயர்வானதாக இருப்பதோடு, குறைவான நீர்த் தரம், குறைந்த நீர் தர சுட்டெண் பெறுமதி என்பவற்றுக்கும் பங்களிப்பு செய்கின்றன. கலங்கல் தன்மை அனைத்து நேரங்களிலும் அதிகரித்த அளவீடுகள் கொண்டதாகவும் ஏனைய அளவீடுகள் சில சமயம் அதிகரிக்கத்தக்கதாகவும் உள்ளன. (16.7% COD, 16.7%FC)
கரந்தன பாலத்திற்கான நடு நீரோட்ட இடம், அதன் மேல் நீரோட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்தளவு நீர்த் தர தன்மையுடையதாக உள்ளது. நீர் தர சுட்டெண் கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களில் 5 ஆவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேல் நீரோட்டத்தின் பெறுமதியை விட குறைந்ததாக உள்ளது. இந்த இடமானது அளவ்வ நகரத்திற்கு அருகே அமைந்துள்ளதோடு, ஒப்பீட்டு ரீதியில் சமவெளியான ஓரளவு நகரமயமான நிலப்பகுதிகளினூடாக நீரோட்டம் ஓடுகின்றது. ஆதலால் ஆற்றுடன் கலக்கும் விகிதம் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகும். இந்த இடப் பரப்பு தொழில்துறை செயற்பாடுகள் மூலம் கணிசமான அளவு கழிவு நீரை பெறுகின்றன. மானுடவியல் செயற்பாடுகளான மணல் அகழ்தல், குளித்தல், உள்ளூர் கழிவுகளை வெளியேற்றுதல் என்பனவும் ஒப்பீட்டு ரீதியில் உயர்வானதாக இருப்பதோடு, குறைவான நீர்த் தரம், குறைந்த நீர் தர சுட்டெண் பெறுமதி என்பவற்றுக்கும் பங்களிப்பு செய்கின்றன. கலங்கல் தன்மை அனைத்து நேரங்களிலும் அதிகரித்த அளவீடுகள் கொண்டதாகவும் ஏனைய அளவீடுகள் சில சமயம் அதிகரிக்கத்தக்கதாகவும் உள்ளன. (16.7%Cr, 50.0% FC)
அளவ்வ பாலத்திற்கான நடு நீரோட்ட இடம், அதன் மேல் நீரோட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்தளவு நீர்த் தர தன்மையுடையதாக உள்ளது. நீர் தர சுட்டெண் கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களில் இரண்டாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேல் நீரோட்டத்தின் பெறுமதியை விட குறைந்ததாக உள்ளது. இந்த இடமானது கிரிஉள்ள நகரின் நீர் உள்ளீர்ப்புக்கு சற்று அருகே அமைந்துள்ளதோடு, ஒப்பீட்டு ரீதியில் சமவெளியான ஓரளவு மலைப்பாங்கான பிரதேசத்தினூடாக ஓடுகின்றது. ஆதலால் ஆற்றுடன் கலக்கும் விகிதம் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகும். இந்த இடப் பரப்பு கிரிஉள்ள நகரத்தின்கழிவு நீரை ஒரளவு பெறுவதோடு சிறிய அளவு தொழில்துறை செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகள் மூலம் கணிசமான அளவு கழிவு நீரை பெறுகின்றன. மானுடவியல் செயற்பாடுகளான மணல் அகழ்தல், குளித்தல், உள்ளூர் கழிவுகளை வெளியேற்றுதல் என்பனவும் ஒப்பீட்டு ரீதியில் குறைவானதாக இருப்பதோடு, சிறந்த நீர்த் தரம், உயர்வான நீர் தர சுட்டெண் பெறுமதி என்பவற்றுக்கும் பங்களிப்பு செய்கின்றன. கலங்கல் தன்மை அனைத்து நேரங்களிலும் அதிகரித்த அளவீடுகள் கொண்டதாகவும் ஏனைய அளவீடுகள் கண்காணிப்பு காலத்தில் அதிகரிக்கத்தக்கதாகவும் உள்ளன.
கிரிஉள்ள பாலத்திற்கான நடு நீரோட்ட இடம், அதன் மேல் நீரோட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்தளவு நீர்த் தர தன்மையுடையதாக உள்ளது. நீர் தர சுட்டெண் கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேல் நீரோட்டத்தின் பெறுமதியை விட குறைந்ததாக உள்ளது. இந்த இடமானது கொட்டதெனிய நகரத்துக்கு அப்பால் தூரமானதாக அமைந்துள்ளதோடு, ஒப்பீட்டு ரீதியில் சமவெளியான ஓரளவு மலைப்பாங்கான நீர் பிரதேசத்தினூடாக ஓடுகின்றது. ஆதலால் காற்றோட்டம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமாதாகும். இந்த இடப் பரப்பு இறப்பர் தொழிற்சாலை, வாகன சேவை நிலையங்கள் போன்ற தொழில்துறை செயற்பாடுகள் மூலம் கணிசமான அளவு கழிவு நீரை பெறுகின்றன. மானுடவியல் செயற்பாடுகளான மணல் அகழ்தல், குளித்தல், உள்ளூர் கழிவுகளை வெளியேற்றுதல் என்பனவும் ஒப்பீட்டு ரீதியில் குறைவானதாக இருப்பதோடு, குறைவான நீர்த் தரம், குறைந்த நீர் தர சுட்டெண் பெறுமதி என்பவற்றுக்கும் பங்களிப்பு செய்கின்றன. கலங்கல் தன்மை அனைத்து நேரங்களிலும் அதிகரித்த அளவீடுகள் கொண்டதாகவும் ஏனைய அளவீடுகள் சில சமயம் அதிகரிக்கத்தக்கதாகவும் உள்ளன. (33.3% COD, 16.7%BOD, 16.7%FC)
கொட்டதெனியவ பாலத்திற்கான நடு நீரோட்ட இடம், அதன் மேல் நீரோட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்தளவு நீர்த் தர தன்மையுடையதாக உள்ளது. நீர் தர சுட்டெண் கண்காணிக்கப்பட்ட எட்டு இடங்களில் ஆறாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, மேல் நீரோட்டத்தின் பெறுமதியை விட குறைந்ததாக உள்ளது. இந்த இடமானது படல்கம நகரத்திற்கு அப்பால் அமைந்துள்ளதோடு, ஒப்பீட்டு ரீதியில் சமவெளியான ஓரளவு மலைப்பாங்கான பிரதேசத்தினூடாக ஓடுகின்றது. ஆதலால் ஆற்றுடன் கலக்கும் விகிதம் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகும். இந்த இடப் பரப்பு உயர் மற்றும் நடுத்தர தொழில்துறை செயற்பாடுகள், விவசாய செயற்பாடுகளிலிருந்தான வெளியேற்றங்கள் மூலம் கணிசமான அளவு நீரை பெறுகின்றன. இப்பரப்பு நகரமயமல்லா இடத்தினூடாக செல்வதனாலும் மானுடவியல் செயற்பாடுகளான மணல் அகழ்தல், குளித்தல், உள்ளூர் கழிவுகளை வெளியேற்றுதல் என்பனவும் ஒப்பீட்டு ரீதியில் குறைவானதாக உள்ளது. தொழில்துறைசெயற்பாடும் மணல் அகழ்வும் பிரதானமாக குறைவான நீர்த் தரம், குறைந்த நீர் தர சுட்டெண் பெறுமதி என்பவற்றுக்கும் பங்களிப்பு செய்கின்றன. கலங்கல் தன்மை அனைத்து நேரங்களிலும் அதிகரித்த அளவீடுகள் கொண்டதாகவும் ஏனைய அளவீடுகள் சில சமயம் அதிகரிக்கத்தக்கதாகவும் உள்ளன. (33.3% COD, 33.3% BOD, 16.7%FC).
படல்கம பாலத்திற்கு அருகிலுள்ள கீழ் நீரோட்ட பகுதி, மற்றைய அனைத்து பகுதிகளுடனும் ஒப்பிடுமபோது நீர்த் தரம் மிகவும் மோசமாக உள்ளது. நீர் தர சுட்டெண் அவதானிக்கப்பட்ட எட்டு இடங்களிலும் எட்டாவதாகவும், மிகவும் குறைந்ததாகவும் தரமிடப்பட்டுள்ளது. இந்த இடம் கொழும்பு – சிலாபம் பிரதான வீதிக்கு குறுக்காக அமைந்துள்ளது. ஒப்பீட்டு ரீதியில் சமவெளியான பகுதியினூடாக நீர் பாய்ந்தோடுகிறது. ஆதலால் காற்றோட்டம் குறைவானதாகும். ஆற்றின் இந்த பரப்பு பகுதி உயர் மற்றும் நடுத்தர தொழில்துறை செயற்பாடுகள் மூலம் கணிசமான அளவு கழிவு நீரை பெறுவதோடு விவசாய செயற்பாடுகள் காரணமான உர கழிவுகளையும் பெறுகிறது. இந்த ஆற்றுப் பகுதி நகரமயப்படுத்தல் பிரதேசத்தில் பாய்ந்தோடுவதனால் கழுவுதல், மணல் அகழ்வு, உள்ளூர் கழிவு நீரை வெளியேற்றுதல், திண்ம கழிவு போன்ற மானுடவியல் செயற்பாடுகள் மிகவும் உயர்வாக உள்ளன. ஆற்றுமுகத்திற்கு இது அருகாமையில் உள்ளதால் உப்புக் கரைசல் உள்ளடக்கம் வழமையாக இடம்பெறுவதோடு, பெப்ரவரி – மார்ச் காலப்பகுதியில் அதிகமானதாக உள்ளது. தொழில்துறை செயற்பாடுகள், ஏனைய மாசுறுதல் செயற்பாடுகள் குறைந்த தர நீருக்கு உப்பு கரைசல் சார்ந்த தலையீடு பிரதான பங்களிக்கும் காரணியாக உள்ளது. குறைவான நீர்த் தர சுட்டெண் பெறுமதிக்கும் காரணமாக உள்ளன. அனைத்து காலங்களும் கலங்கல் தன்மை அளவீடு மிகையானதாகவும் ஏனைய அளவீடுகள் சந்தர்ப்ப ரீதியாக மிகையாகவும் உள்ளன. (16.7%DO, 50.0% COD, 33.3% CD, 66.7% FC)
மேல் ஓட்டத்தினது கீழ் ஓட்டம் வரையான நீர் தரத்தின் மோசமடைந்து செல்கின்ற இட ரீதியான தன்மை மகா ஓயாவில் ஓர் ஆச்சரியமிக்க நிலையல்ல. இந்த தன்மைக்கான பிரதான காரணம், ஆற்றின் நடு மற்றும் கீழ் ஓட்ட பகுதிகளில் கணிசமான அளவு இடம்பெறுகின்ற மானுடவியல் செயற்பாடுகளும், முனையஸ்லா இயற்கை நிகழ்வுகள் இடம் பெறுவதால் ஏற்படுகின்ற மாசுறுதல்கள் போன்றவற்றினாலாகும். ஆதலால் இது புன்னி மாசுறுதலாக கருதப்பட முடியும். இதற்கு மேலாக ஆற்றின் கீழ் ஓட்ட பகுதியானது ஆற்றின் கீழ் நீரோட்ட பரப்பில் அமைந்துள்ள கைத்தொழில்கள் மூலம் கணிசமான அளவு விடுவிக்கப்பட்ட கழிவு நீரையும் பெறுகின்றது.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999