பின்வரும் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பின்வரும் முகவராண்மைகள் பொறுப்பாக உள்ளன.
அனைத்து தாவர ஹோமோன்கள் மற்றும் உரங்கள் – பணிப்பாளர் நாயகம், விவசாயத் திணைக்களம்.
நச்சுத்தடை மருந்துகள், ஏனைய நுளம்புகளின் மட்டுப்படுத்திகள் – ம.சு.அ.
மனித உடலுக்கு பிரயோகிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரசாயணப் பொருட்கள் (அழகுசாதனப்பொருட்கள்) - அழகுசாதனப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாடு அதிகாரசபை, சுகாதார அமைச்சு
தொழில்துறை இரசாயணங்கள் – அரச வர்த்தக கூட்டுத்தாபனம்
இரசாயண ஆயுதங்கள் – இரசாயண ஆயுதங்கள் அதிகாரசபை
முன்னோடி இரசாயணப் பொருட்கள் – முன்னோடி இரசாயணப் பொருள் அதிகாரசபை
உள்ளூர் கிருமிநாசினிகள் – கிருமிநாசினிகள் பதிவாளர்
தாவரங்கள், அல்லது தொடர்புடைய பொருட்கள் – தாவர தடுப்புக் காப்பு நிறுவகம்
உள்ளூர் கிருமிகளை பிடிப்பதற்கான ஏனைய உற்பத்திகள், ஏனைய நுளம்பு மட்டுப்படுத்திகள் மற்றும் நச்சுத்தடை மருந்துகளின் இறக்குமதி
தேவைப்பாடுகள்
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் “ஆட்சேபனை இல்லை” கடிதங்களின் வழங்குகையை கருத்திற் கொள்வதற்காக இறக்குமதியாளர் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
இரசாயணப் பெயர், வர்த்தகப் பெயர், உத்தேச பாவணை, அளவு, இறக்குமதி செய்யும் நாடு போன்ற பொருத்தமான அனைத்து தகவல்களையும் விளக்குகின்ற இறக்குமதியாளரின் கோரிக்கை கடிதம்
CUSDEC அல்லது புரோபோமா கட்டளை/ வர்த்தக கட்டளை/ பற்றுச்சீட்டு
இறக்குமதி செய்யும் பொருளின் MSDS
தேவையானபோது ஏனைய பொருத்தமான ஆவணங்கள் (பொருளின் இரசாயணக் கட்டமைப்பை அடையாளங் காண்பதற்கான பகுப்பாய்வு அறிக்கைகள்)
இடப் பரிசோதனை
தேவையேற்படின் இறக்குமதியாளர்கள்/ களஞ்சியங்கள் அல்லது இறுதி பாவனையாளர்/ கழிவு நீக்கம் என்வற்றின் சம்பந்தப்பட்ட வசதிகளை ம.சு.அ. பரிசோதனை செய்யும்.
வழங்கப்பட்ட தகவல்களும், பொருத்தமான ஆவணங்களும் திருப்திகரமானதாயின் பொருத்தமான நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக “ஆட்சேபனை இல்லை” கடிதம் பின்வரும் முகவரிக்கு இறக்குமதியாளருக்கு ஒரு பிரதியுடன் அனுப்பி வைக்கப்படும்.
கட்டுப்பாட்டாளர், இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், இல. 75 1/3, முதலாம் மாடி, ஹேமாஸ் கட்டிடம், கொழும்பு -01
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999