ஆபத்து விளைவிக்கத்தக்க கழிவானது 01.02.2008 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.
2008 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (பாதுகாப்பு மற்றும் தரம்) ஒழுங்குவிதிகளின் பகுதி II இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் பிரகாரம் ஒழுங்குவிதியின் VIII ஆம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவை கையாள்வதில் சம்பந்தப்பட்டுள்ள (பிறப்பித்தல், சேகரித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்தல், மீட்டல், மீள்சுழற்சி செய்தல், கழிவு நீக்கம் அல்லது ஏதாவது இடத்த தாபித்தல் அல்லது நீக்கத்திற்கான வசதி) அனைத்து நபர்களும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதிப்பத்திர வழங்கல் நடைமுறை
தேவையான ஆவணங்கள்/ ஆதரவு ஆவணங்கள்
வியாபார பதிவு
இட வரைபடம்
கழிவு முகாமைத்துவ திட்டமும் தொடர்புடைய உடன்படிக்கைகளும்
இடத்திற்கான பாதை அமைப்பு வரைபடம்
ேறு ஏதாவது தொடர்புடைய அங்கீகாரங்களும் ஆவணங்களும்
பரிசோதனைக் கட்டணமானது ஆரம்ப பரிசோதனைக்கு மட்டுமே அறவிடப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருக்கின்ற தொழில்துறைகள் பரிசோதனை கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.
கழிவு முகாமைத்துவ அலகின்/ ம.சு.அ. அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொள்வர்.
ஆபத்திற்குரிய கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் திருப்பதிகரமானதாயின், அனுமதிப்பத்திர கட்டண கொடுப்பனவின் பின்னர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது.
அனுமதிப்பத்திர கட்டணம்:
பிறப்பிப்பவர் |
ரூபா. 1,000.00 |
சேகரிப்பவர் |
ரூபா. 1,000.00 |
களஞ்சியப்படுத்துபவர் |
ரூபா.10,000.00 |
எடுத்துச்செல்பவர் |
ரூபா. 2,000.00 |
மீள்சுழற்சியாளர் |
ரூபா. 5,000.00 |
மீளப்பெறுபவர் |
ரூபா. 5,000.00 |
அகற்றுபவர் |
ரூபா.10,000.00 |
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999