1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்கச் சட்டம், 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழ் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் (சு.பா.அ.) ஒரு முறைப்பத்தும்/ சட்ட கருவியாக உள்ளது. சு.பா.அ. தேவைப்படுத்தப்பட்ட தொழில்துறைகள் மற்றும் செயற்பாடுகள் 2008.01.25 ஆம் திகதியிடப்பட்ட, 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தொழில்துறைகளின் மூலம் ஏற்படும் மாசுறுதல் வாய்ப்பின் அடிப்படையில், பட்டியல் "ஏ","பீ" மற்றும் "சி" என 3 பட்டியல்களின் கீழ் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பகுதி “ஏ” குறிப்பாக 80 உயர் மாசுறுதல் தொழில்துறை செயற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதோடு, பகுதி “பீ” 33 நடுத்தர மட்ட மாசுறல் செயற்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. “ஏ” மற்றும் “பீ” பட்டியலிலுள்ள தொழில்துறைகளுக்கான சு.பா.அ. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தொடர்புடைய மாகாண அலுவலகங்கள் அல்லது மாவட்ட அலுவலகங்களிலிருந்து பெறப்படுதல் வேண்டும்.
பகுதி “சி” ஆனது 25 குறைந்த மாசுறுதல் தொழில்துறை செயற்பாடுகளை உள்ளடக்கி இருப்பதோடு, அவை மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் போன்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டவையாக இருக்கின்றன. பட்டியல் “சி” இல் உள்ள கைத்தொழில்களுக்கான சு.பா.அ. உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து பெறப்படுதல் வேண்டும். உள்ளூர் அதிகாரசபைகள் சு.பா.அ. வழங்குதல், பின்தொடர் நடவடிக்கை கண்காணிப்பு மற்றும் சட்ட வினைப்படுத்துகை போன்ற தொடர்புடைய பணிகளையும் மேற்கொள்கின்றன.
சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் (சு.பா.அ.) நோக்கங்கள்
தேசிய கழிவகற்றல் மற்றும் புகை வெளியேற்றல் தராதரங்களுக்கு இயைந்த வகையில் குறித்துரைக்கப்பட்ட (தொழில்துறை) செயற்பாடுகளிலிருந்து சுற்றாடலுக்கு வெளியிடப்படுகின்ற கழிவுகள் வெளியேற்றங்களை தடுத்தல் அல்லது குறைத்தல்..
சுற்றாடல் மீதான தாக்கத்தின் பின்னணியில் அனைத்து ஊடகங்களுக்கும் (வளி, காற்று, நிலம்) குறித்துரைக்கப்பட்ட (தொழில்துறை) செயன்முறைகளிலிருந்து கழிவுகளை வெளியிடுகின்றவை என கருதப்படுபவற்றுக்கு மாசுறுதல் கட்டுப்பாட்டு அனுகுமுறையொன்றை விருத்தி செய்தல்.
குறிப்பாக மாசுறுதல் செயன்முறைகளுக்கு மாசுபடுத்தல் கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டலை வழங்கி தொழில்துறை மீது பொறுப்பை காட்டுதல்.
முறைமையானதும் மாறுகின்ற மாசு தணிப்பு தொழில்நுட்பம் மற்றும் தூய உற்பத்தி, கழிவு குறைத்தல் போன்ற புதிய அறிவு ஆகிய இரண்டுக்கும் நெகிழ்ச்சித் தன்மையுடன் பதிலளிக்கின்றது என்பதை உறுதிப்படுத்தல்.
சு.பா.அ. ஒன்றின் செல்லுபடியாகும் காலம்
பட்டியல் “ஏ” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை செயற்பாடுகளை உடையவை – அனுமதிப்பத்திரத்திம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து செல்லுபடியாகும் காலமனது ஆகக் கூடியது ஒரு வருடம்
பட்டியல் “பீ” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை செயற்பாடுகளை உடையவை – அனுமதிப்பத்திரத்திம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து செல்லுபடியாகும் காலமனது ஆகக் கூடியது மூன்று வருடங்கள்
பட்டியல் “சி” இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட தொழில்துறை செயற்பாடுகளை உடையவை – அனுமதிப்பத்திரத்திம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து செல்லுபடியாகும் காலமனது ஆகக் கூடியது மூன்று வருடங்கள்
தரங்களும் நியமங்களும்
தேசிய சுற்றாடல் சட்டத்தின் (தே.சு.ச.) பிரிவு 23 ஏ இன் கீழான அதிகாரத்துடன் அச்சட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய நியமங்கள் மற்றும் கட்ளைவிதிகளுக்கு இயைந்தாகவும், ம.சு.அதிகாரபையின் சு.பா.அனுமதிப்பத்திரம் அன்றி எந்தவொரு நபரும் குறித்துரைக்கப்பட்ட அத்தகைய செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது என தெளிவாக குறிப்பிடுகின்றது.
2008 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (பாதுகாப்பு மற்றம் தரம்) ஒழுங்குவிதிகள் என வரையறுக்கப்பட்டு 2008/02/01 ஆம் திகதியிட்ட 1534/18 ஆம் இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தலில் சுற்றாடலுக்கு கழிவு நீரை வெளியேற்றுவதற்கான நியமங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கழிவுநீர் வெளியேற்றுகைக்கான நியமங்கள்
1996 ஆம் ஆண்டின் 01 இலக்க தேசிய சுற்றாடல் (ஒலி கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகள் என வரையறுக்கப்பட்டு 1996.05.23 ஆம் திகதியிடப்பட்ட 924/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலினால் தொழில்துறைகளிலிருந்து ஒலி வெளியிடுகைகளின் கட்டுப்பாட்டுக்கான நியமங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய சுற்றாடல் (ஒலிக் கட்டுப்பாடு) ஒழுங்குவிதிகள் 1996
இறுதி அதிர்வு கட்டுப்பாட்டு நியமங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படும் அத்தகைய காலம் வரை பின்வரும் அதிர்வூட்டல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அதிர்வு கட்டுப்பாடு சம்பந்தமான இடைக்கால நியமங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இயந்திர நடவடிக்கைகள், நிர்மாண செயற்பாடுகள் மற்றும் நகர்வுள்ள வாகனப் போக்குவரத்து செயற்பாட்டின் அதிர்வுக்கான இடைக்கால நியமங்கள்
அழுத்தத்தின் மீதான காற்று வெடிப்பு மற்றும் நில அதிர்வுக்கான வெடிப்பு செயற்பாடுகளுக்கள் தொடர்பான இடைக்கால நியமங்கள்
கட்டடங்களில் குடியிருப்போரின் அசௌகரியங்களுக்கான நியமங்கள்
குறிப்பு:
ம.சு.அ. எதிர்பார்க்கும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான தேவை தொடர்பில் எந்தவொரு குறிப்பான தொழில்துறை, தொழிற்பாடு, அல்லது செயன்முறை தொடர்பிலும் தற்போது குறித்துரைக்கப்பட்டுள்ளவற்றை விட மிகவும் கடுமையான நியமங்கள் மற்றும் கட்டளைவிதிகள் ஒரு பணிப்புரையின் மூலம் விதிக்கப்படலாம்.
தொழில்துறை செயற்பாடுகளுக்கான சு.பா.அ. வழங்குவதற்கான நடைமுறைகள்
2008.01.25 ஆம் திகதியிடப்பட்ட 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் “ஏ” பட்டியல் மற்றும் “பி” பட்டியல் என்பவற்றில் உள்ள தொழில்துறைகளுக்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தொடர்புடைய மாகாண/மாவட்ட அலுவலகங்களினால் வழங்கப்படுவதோடு, பட்டியல் “சி” உள்ளவற்றிற்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபையினால் வழங்கப்படுகின்றன.
“ஏ” பட்டியல் மற்றும் “பீ” பட்டியல் உள்ள கைத்தொழில் நடவடிக்களுக்காக சு.பா.அ. வழங்குவதற்கான நடைமுறை.
சு.பா.அ. விண்ணப்பமானது, 2008/02/01 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் அட்டவணை II இன் “ஏ” படிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை ம.சு.அ. தலைமையகம் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். அது ம.சு.அ. இணையத்தளமான www.cea.lk இலிருந்து தரவிறக்கம் செய்யவும் முடியும்.
ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுக்குமாக உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ம.சு.அ. தொடர்புடைய மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்.
விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விபரங்களையும் விண்ணப்பதாரி கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுடன் பின்வரும் சான்று ஆவணங்களுடன் ம.சு.அதிகாரசபையின் மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
வியாபார பதிவுக்கான சான்றிதழ்
குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கு காணியை பயன்படுத்துவதற்கான சட்ட அதிகாரமளிப்பு (காணி உறுதியின் பிரதி, குத்தகை உடன்படிக்கையின் பிரதி முதலியன)
இடத்தின் நில அளவை வரைபடத்தின் பிரதி.
குறிப்பிட்ட இடத்தில் தொழில்துறையை தாபிப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரமளிப்பு (தொடர்புடைய உள்ளூராட்சி அதிகாரசபையிடமிருந்தான இணக்கப்பாட்டு சான்றிதழ் / வர்த்தக அனுமதிப்பத்திரம் அல்லது இணக்க பத்திரம்)
குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான உற்பத்திச் சான்றிதழ் (குடிபான வகைகள், மருந்துப் பொருட்கள், கிருமிநாசினி உற்பத்தி முதலியன)
மாசுறுதல் பொருட்களை குறைத்தலுக்கான பிரேரணை
அதிகாரசபையினால் கோரப்பட்ட வேறு ஏதாவது விபரங்கள்/ ஆவணங்கள்
ம.சு.அ. பொருத்தமான மாகாண/ மாவட்ட அலுவலகம் சு.பா.அ. வழங்குவதன் பொருத்தப்பாட்டை சரிபார்ப்பதற்கு முன் கூட்டியான மதிப்பீடொன்றை செய்யும் என்பதோடு தரப்பட்டுள்ள விபரங்களின் போதிய தன்மை என்பவற்றின் நிமித்தம் மதிப்பீடு கோரப்பட வேண்டிய பரீட்சிப்பு கட்டணத்தை தீர்மானித்த பின்னர் விண்ணப்பம் 3வது படிமுறைக்கு தொடர்ந்து செல்லும் அல்லது முதலாவது படிமுறைக்கு மீண்டும் செல்லும்.
தொழிலதிபரினால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய பரிசோதனை கட்டணத்தின் தொகையை சம்பந்தப்பட்ட மாகாண / மாவட்ட அலுவலகம் தீர்மானிப்பதோடு, தொழிலதிபருக்கு ஒரு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்படும். தற்போது குறைந்தது ரூபா. 3,360/- உம் ஆகக் கூடியது ரூபா. 11,200/- (அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட வரியுடன்) உம் பரிசோதனை கட்டணமாக உள்ளது.
தொழிலதிபர்கள் அத்தகைய கட்டணத்தை ம.சு.அ. சபையின் பொருத்தமான மாகாண/ மாவட்ட அலுவலகம், தலைமை அலுவலகம் அல்லது பிற ஏதாவது மாகாண/ மாவட்ட அலுவலகத்திற்கு செலுத்துதல் வேண்டும். கொடுப்பனவு செய்யப்பட்டதன் பின்னர் பற்றுச்சீட்டு தொடர்புடைய மாகாண/ மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். பற்றுச்சீட்டு கிடைக்கப்பெற்றவுடன் 4வது படிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.
தொழில்துறை தொடர்பில் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தரவுகளை மதிப்பிட்டுக் கொள்வதற்கும் மற்றும் மாசுறுதல் கட்டுப்பாட்டுடன் அத்தகைய தொழில்துறை இயங்குவதற்கான சாத்தியப்பாட்டை தீர்மானிக்கவும் அலுவலர்கள் குழுவொன்று களப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளும்.
சமூக தாக்கங்களையும் அவற்றிற்கான சிபாரிசுகளுடனும் மற்றும் விண்ணப்பதாரரினால் வழங்கப்பட்ட தொழில்துறை, தொழில்நுட்ப அறிக்கை தொடர்பில் களப் பரிசோதனை விபரங்களின் அடிப்படையிலும் பரிசோதனை குழுவானது அறிக்கை ஒன்றை தயாரிக்கும். இவ் அமைவிடம் சிபாரிசு செய்யப்படுமானால் 6வது படிமுறை தொடர்ந்துசெல்லும்.
சிபாரிசு செய்யப்பட்ட முன்மொழிவு மேலதிக மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரேரணை ஒன்றை கோரினால் தொழிலதிபர் அத்தகைய வேண்டுகோளை நிறைவேற்றும் படி அறிவிக்கப்படுவார். விண்ணப்பதாரியினால் வழங்கப்பட்ட மேலதிக விபரங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் சு.பா.அ. வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுவதோடு 6வது படிமுறை தொடரும்.
அனுமதிப்பத்திரத்தை வழங்குவதை அல்லது மறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால், அதன்நிமித்தம் விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, அனுமதிப் பத்திரமொன்றை பெறுவதற்கு அதிகாரசபையினால் நிராகரிப்படுவதானால் பாதிக்கப்பட்ட எந்தவொரு விண்ணப்பதாரியும் அவருக்கு / அவளுக்கு அத்தகைய தீர்மானம் அறிவிக்கப்பட்ட திகதியின் பின்னர் முப்பது (30) நாட்களுக்குள் அத்தகைய தீர்மானத்திற்கு எதிராக சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலமான ஒரு மேன்முறையீட்டை செய்யலாம்.
பரிசோதனை குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் சு.பா. அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கான ம.சு.அ. சபையின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வழங்குவதோடு, சு.பா. அனுமதிப்பத்திரத்திற்குரிய வரைவு நிபந்தனைகளுக்குக்கான சட்ட அங்கீகாரத்தை ம.சு.அ. சட்டப்பிரிவு வழங்குகின்றது.
சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், தொழில்துறை செயற்பாட்டுக்கான சு.பா.அ. வழங்குவதற்குகாக ம.சு. அதிகாரசபையைக்கு கிடைக்கக்கூட்டிய வகையில் தொழிலதிபர் அனுமதிப்பத்திர கட்டணத்தை செலுத்தும் படி கோரப்படுகின்றனர்.
அனுமதிப் பத்திர கட்டண விபரங்கள்
பட்டியல் “ஏ” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகள் – ரூபா.: 7,500.00 தலா அனுமதிப்பத்திரத்திற்கு / ஒரு வருடத்திற்கு மேற்படாதது.
பட்டியல் “பீ” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகள் – ரூபா.:-6,000.00 தலா அனுமதிப்பத்திரத்திற்கு / மூன்று வருடங்களுக்கு மேற்படாதது.
அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தியவுடன், அதிகாரமளிக்கப்பட்ட ஒப்பதாரரின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் குறித்துரைக்கப்பட்ட காலப் பிரிவை விட விஞ்ஞாத காலப் பிரிவுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். பட்டியல் “ஏ” ஒரு வருடம், பட்டியல் “பீ” மற்றும் பட்டியல் “சி” மூன்று வருடங்களாகும்.
பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகளுக்கான சு.பா.அ. வழங்குவது தொடர்பான நடைமுறைகள்.
பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகளுக்கான சு.பா.அ. வழங்குதலானது 2008.02.14 இல் இருந்து அமுலாகும் வண்ணம் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. (மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை)
பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகளுக்கு சு.பா.அ. ஒன்றை வழங்கும் போது கீழ் குறிப்பிட்ட நடைமுறை பிரயோகிக்கப்படுகிறது.
படிமுறை 1: விண்ணப்ப நடைமுறை
சு.பா.அ. விண்ணப்பமானது, 2008/02/01 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் அட்டவணை II இன் ஏ படிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை ம.சு.அ. தலைமையகம் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் ம.சு.அ. இணையத்தளமான www.cea.lk இலிருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.
விண்ணப்பிக்கும் நோக்கத்திற்காக ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுக்கும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தொழில்துறை அமைந்துள்ள உள்ளுராட்சி அதிகாரபையிடம் சமர்ப்பிக்வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விபரங்களையும் விண்ணப்பதாரி கட்டாயம் வழங்க வேண்டும்.
வியாபார பதிவுக்கான சான்றிதழ்
குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கு காணியை பயன்படுத்துவதற்கான சட்ட அதிகாரமளிப்பு (காணி உறுதியின் பிரதி, குத்தகை உடன்படிக்கையின் பிரதி முதலியன)
இடத்தின் நில அளவை வரைபடத்தின் பிரதி.
குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான உற்பத்திச் சான்றிதழ் (குடிபான வகைகள், மருந்துப் பொருட்கள், கிருமிநாசினி உற்பத்தி முதலியன)
மாசுறுதல் பொருட்களை குறைத்தலுக்கான பிரேரணை
சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபை சு.பா. அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பொருத்தப்பாடு, தரப்பட்டுள்ள விபரங்களின் போதிய தன்மை, என்பவற்றை முன் மதிப்பீடொன்றை செய்து, செலுத்தப்பட வேண்டிய பரீட்சிப்பு கட்டணத்தை தீர்மானிக்கும்.
தொழிலதிபரினால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய பரிசோதனை கட்டணத்தின் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபை தீர்மானிப்பதோடு, தொழிலதிபருக்கு அத்தகைய கொடுப்பனவை செய்ய ஒரு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்படும். கொடுப்பனவு உள்ளூராட்சி அதிகாரசபைக்கு செலுத்தப்படும். கொடுப்பனவு செய்யப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி அதிகாரசபையிடமிருந்து ஒரு பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும். பற்றுச்சீட்டு கிடைக்கப்பெற்றவுடன் 4வது படிமுறை மேளகொள்ளப்படும்.
படிமுறை4: களப் பரிசோதனை
உத்தேச தொழில்துறை தொடர்பில் விண்ணப்பத்தில் உள்ள தரவுகளை அனுகுவற்காக ஒரு பரிசோதனைக் குழுவொன்று களப் பரிசோதனை ஒன்றை மேற்கொண்ட்டு குறிப்பிட்ட தொழில்துறை செயற்பாட்டுக்கான இடத்தின் பொருத்தப்பாட்டை தீர்மானிக்கும்.
பரிசோதனை குழுவானது விண்ணப்பதாரரினால் வழங்கப்பட்ட களப் பரிசோதனை, சம்பந்தப்பட்ட ஆவணம், தொழில்நுட்ப அறிக்கை மற்றும் அவர்களது ஆலோசனைகள் உள்ளிட்ட தொடர்பில் சமூகசார் அம்சங்களின் அறிக்கை ஒன்றை தயாரிக்கின்றது. பரிசோதனை குழுவினால் தயாரிக்கப்பட்ட அறி்க்கை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. குழு தொடர்புடைய உள்ளூராட்சி அதிகாரசபையினால் நியமிக்கப்படுகின்றது. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பொறுப்பு யாதெனில் அனுமதிப்பத்திர வழங்கல் நடைமுறை பற்றி உள்ளுராட்சி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்குவதாகும். குறித்த உள்ளுராட்சி அதிகாரசபைக்கு குறித்துரைக்கப்பட்ட ம.சு.அதிகாரசபையின் மாகாண/ மாவட்ட அலுவலகத்தின் பிரதேச சுற்றாடல் உத்தயோகத்தர் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கான செயலாளராக தொழிற்படுகின்றார்.
பரிசோதனைக்குழு மற்றும் தொழில்துறையோடு தொடர்புடைய சம்பந்தப்பட்ட ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவானது தனது சிபாரிசுகளை செய்கின்றது.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு சுயமாக கள பரிசோதனையொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கலாம்: அடுத்த நடவடிக்கை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிசோதனையின் அடிப்படையில் எடுக்கப்படும்.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுகள் மேலதிக மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான பிரேரணை ஒன்றை கோரினால் தொழிலதிபர் அத்தகைய வேண்டுகோளை நிறைவேற்றும் படி அறிவிக்கப்படுவார். விண்ணப்பதாரியினால் வழங்கப்பட்ட மேலதிக அறிக்கைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7வது படிமுறையை தொடருவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்படும் .
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை வழங்குவதை மறுப்பதற்கு சிபாரிசுசெய்தால் அதன்படி விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும். தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, அனுமதிப் பத்திரமொன்றை பெறுவதற்கு அதிகாரசபையினால் நிராகரிப்பதனால் பாதிக்கப்பட்ட எந்தவொரு விண்ணப்பதாரியும் அவருக்கு / அவளுக்கு அத்தகைய தீர்மானம் அறிவிக்கப்பட்ட திகதியின் பின்னர் முப்பது (30) நாட்களுக்குள் அத்தகைய தீர்மானத்திற்கு எதிராக எழுத்துமூலமான ஒரு மேன்முறையீட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு செய்யலாம்.
பரிசோதனை குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு என்பவற்றினால் செய்யப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் சு.பா. அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கான உள்ளூராட்சி அதிகாரசபையின் அதிகாரமளிக்கப்பட்ட நபருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.
அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், தொழில்துறை செயற்பாட்டுக்கான சு.பா.அ. வழங்குவதற்கு உள்ளூராட்சி அதிகாரசபையை இயலச் செய்யும் வகையில் தொழிலதிபர் அனுமதிப்பத்திர கட்டணத்தை செலுத்தும் படி கோரப்படுகின்றனர்.
பட்டியல் “சி” இல் உள்ள தொழில்துறை செயற்பாடுகள் – ரூபா: 4,000.00 தலா அனுமதிப்பத்திரத்திற்கு / மூன்று (03) வருடங்களுக்கு மேற்படாதது.
படிமுறை9: சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்
அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தியவுடன், அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பத்துடன் ஆகக்கூடியது மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுகின்றது
சு.பா. அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்
(அ) பட்டியல் "A" மற்றும் பட்டியல் "B" இல் உள்ள செயற்பாடுகளுக்கு சு.பா.அ. புதுப்பித்தல்
குறித்துரைக்கப்பட்ட ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் சு.பா.அ. புதுப்பித்தல் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
சு.பா.அ. காலவாதித் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்
செயற்பாட்டுக்கு ஏதாவது மாற்றங்கள், திருத்தங்கள் அல்லது விஸ்தரிப்புக்கள் ஒரு மாதத்திற்கு முன்னர்
படிமுறை1: விண்ணப்ப நடைமுறை
சு.பா.அ. விண்ணப்பமானது, 2008/02/01ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு விண்ணப்ப படிவத்தை ம.சு.அ. தலைமையகம் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். அது ம.சு.அ. இணையத்தளமான www.cea.lk இலிருந்து தரவிறக்கம் செய்யவும் முடியும்.
உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டுக்குமாக ம.சு.அ. தொடர்புடைய மாகாண அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படலாம்.
முன்னைய சு.பா. அனுமதிப்பத்திரத்தில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு ம.சு.அதிகாரபை அதிகாரிகள் குழுவொன்று கள பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளும்.
சு.பா.அ. புதுப்பித்தலுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைக்கு பரிசோதனைக் கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
நிபந்தனைகளினை மீறப்பட்டமை அவதானிக்கப்பட்டால், பொருத்தமான மாசுறுதல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து விண்ணப்பதாரி/ தொழிலதிபருக்கு அறிவிப்படும்.
எந்தவொரு சு.பா. அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான கட்டணமானது முன்னைய சு.பா.அ. கட்டணத்தை போன்றதாகும். புதுப்பித்தலின் செல்லுபடியாகும் காலப்பிரிவு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.
சு.பா.அ. கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் அனுமதிப்பத்திர வழங்குவது கவனத்திற் கொள்ளப்படும்.
(ஆ) உள்ளூராட்சி அதிகாரசபையினல் (உ.அ)வழங்கப்பட்ட சு.ப.அ. புதுப்பித்தல் – பட்டியல் "C" உள்ள செயற்பாடுகள்
தொழில்துறை செயற்பாடுகளின் பின்தொடர் கண்காணிப்பு பின்வருவனவற்றை மேற்கொள்கின்றன;
தொழில்துறைகளில் தாபிக்கப்பட்டுள்ள மாசுறுதல் கட்டுப்பாடு முறைமைகளின் செயலாற்றுகையை சோதனை செய்தல்.
சு.பா.அ. குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுடன் தொழில்துறை இணங்கிச் செல்கின்றதா என்பதை சோதனை செய்தல்.
தொழில்துறை செயற்பாட்டில் ஏதாவது மாற்றம், விரிவாக்கம், திருத்தம் உள்ளதா என்பதை சரிபார்த்தல்.
கண்காணிப்பு செயற்பாடுகள் பின்வருமாறு மேற்கொள்ளப்படுகின்றன;
சீரான இடைவெளிகளில் தொழில்துறைகளை பரிசோதனை செய்தல்.
கழிவுநீர் பகுப்பாய்வு, ஒலி/ அதிர்வு அளவுகளின் அறிக்கைகளை கண்காணித்தலும் தொழில்துறை செயற்பாட்டில் மாசுறுதல் கட்டுப்பாட்டு முறைமைகளின் வினைத்திறன் / மதிப்பீடு குறித்த அறிக்கைகள்.
இந்த செயன்முறைகளில் தொழிலதிபர்கள், சு.பா.அ. சுட்டிக்காட்டியுள்ளவாறு அத்தகைய சோதனை அறிக்கைகளை கால ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு பிரபல ஆய்வு கூடங்களை உசாவுகை செய்யும் படி வேண்டப்படுவர்.
தொழில்துறைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்
சட்ட நடவடிக்கைகமுறைகள் தே.சு.சட்டத்தின் பகுதி IV A இன் கீழ் பின்வரும் சந்தர்ப்பங்களில் கையாளப்படுகின்றது :
அனுமதிப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது நியதிகள், நிபந்தனைகள், நியமங்கள் என்பவற்றினை மீறிச்செயற்படும் தொழில்துறை செயற்பாடுகள்/ செயன்முறை நடவடிக்கைகள்.
சு.பா.அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளாத குறித்துரைக்கப்பட்ட தொழில்துறைகள்.
குறிக்கப்பட்ட நியமங்களுக்கு இயைபற்ற வகையில் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள் மூலம் கழிவுளை சுற்றாடலுக்கு வெளியேற்றுதல்.
தொழில்துறைகளினால் தொடர்ந்து நிபந்தனைகள் மீறப்படுவதனால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
சட்ட நடவடிக்கை முறை பின்வரும் செயற்பாடுகளை உள்ளடக்கும்
சு.பா.அனுமதிப்பத்திரத்தினை இரத்துச் செய்தல் / இடைநிறுத்துதல்.
சு.பா.அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தை நிராகரித்தல்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் மேன்முறையீடுகளை விசாரித்தல்.
சட்டரீதியான அறிவித்தல்களை அனுப்புதல்.
வழக்குகளை தொடருதல்.
இலங்கையில் அபிவிருத்தி திட்டமிடல் சுற்றாடல் கவனங்களை ஒருங்கிணைப்பதற்கான நோக்கத்திற்காக வினைத்திறன்மிக்க கருவியொன்றாக சுற்றாடல் தாக்க மதிப்பீட்டின் முக்கியத்துவம் வெகுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சு.தா.மதிப்பீடானது ஆரம்ப கட்டத்தில் சுற்றாடல் மீதான குறிப்பிட்ட கருத்திட்டத்தின் ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பிடுவதற்கு உதவுகின்றது. அது ஏற்றுக் கொள்ள முடியாத தாக்கங்களை தணிப்பதற்கும், கருத்திட்டத்தை வடிவமைப்பதற்கும் நிதியளிப்பதன் மூலம் உள்ளூர் சுற்றாடலுக்கு பொருத்தமானதாக அமைக்கின்றது. கருத்திட்டங்கள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அது உத்தியோகத்தர்களுக்கு உதவுகிறதோடு கருத்திட்ட கூறுகள் அவற்றின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைவதற்கும் உதவுகிறது. இந்த வைகயில் சு.தா. மதிப்பீடானது பிரதானமாக திட்டமிடல் கருவியொன்றாகவும் பேணிதகு அபிவிருத்தியை அடைவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்றாகவும் கருதப்பட முடியும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீடானது, தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் ஏனைய சில சட்டங்களின் கீழ் இலங்கையில் அபிவிருத்தி கருத்திட்டங்களின் தாபிப்பதற்கு கட்டாயமான தேவைப்பாடொன்றாக மாறியுள்ளது.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்துரைக்கப்படாத செயற்பாடுகளுக்காக ம.சு.அ (CEA) இனால் பின்பற்றப்பட்ட மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றுதான் இட பொருத்தப்பாட்டை மதிப்பிடுதலாகும். பொது கழிவு நீர் சுத்திகரிப்பு முறைமைகள் போன்ற உரிய சுற்றாடல் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்ட தேசிய சுற்றாடல் சட்டத்தின் பகுதி IV C இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பேட்டைகளுக்கு வெளியே அமைக்கப்படவுள்ள அனைத்து உத்தேச தொழில்துறை செயற்பாடுகளும் அவற்றின் தொழிற்பாட்டு கட்டத்திற்கு முன்னர் சுற்றாடல் திறன் சார்ந்த மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு முகாமை செய்வதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதலால் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்துறைகள் (SMIS) சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு உட்படாத அனைத்து சாத்தியமான எதிர்கால தொழில்துறை இடங்களும் அல்லது புதிய தொழில்துறை செயற்பாடுகளை கொண்ட தாபனங்கள் உத்தேச இடத்துக்காக ம.சு.அ (CEA) சபையிடமிருந்து சுற்றாடல் சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகின்றன.
பொருத்தப்பாட்டை கவனத்திற் கொள்ளும்போது, சுற்றுப் புறச் சூழல், காணிப் பயன்பாடு தொடர்பில் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களை வலயமிடல் திட்டங்கள் குறித்த அதன் இணக்கப்பாடு, இடைத்தாங்கலுக்காக காணப்படுகின்ற காணித் தேவை, மேலதிக மாசுறுதல் சுமையை பெறுவதற்கும், கழிவுளை அகற்றுவதற்கு தேவைப்பாடும் இடத்தின் கொள்ளளவு போன்ற நியதிகளின் அடிப்படையில் உத்தேச இடங்கள் மதிப்பிடப்படுகின்றன.
சுற்றாடல் சிபாரிசு நடைமுறைகளின் பிரதான நோக்கம் யாதெனில் உத்தேச தொழில்துறை செயற்பாட்டிலிருந்து எழத்தக்கதான, எதிர்பார்க்கத்தக்க சுற்றாடல் மாசுறுதலை முன்கூட்டியே இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான போதிய தணிப்பு நடவடிக்கை எடுப்பதாகும்.
சுற்றாடலுக்கு கழிவுகளை/ மேலதிக பொருட்கள் விடுவிக்கக்கூடிய, படிவுசெய்யக்கூடிய, அல்லது சுற்றாடலுக்கு இரைச்சல் அல்லது வாயுக்களை வெளிப்படுத்தக்கூடிய தற்போதுள்ள தொழில்துறைகளிடமிருந்து மாசுறுதலை குறைப்பதற்கு ம.சு.அ. (CEA) இனால் குறித்துரைக்கப்பட்ட நியமங்களுக்கு இணைந்து செல்கின்ற தொழில்துறைகளுக்கு சு.பா. அனுமதிப்பத்திரமானது வழங்கப்படுகின்றது. ஆனால், ஆரம்பத்தில் தணிப்பு நடவடிக்கைகளை ஒன்றிணைக்காது ஆபத்தான அமைப்பில் தமது தொழில்துறைகளை அமைத்து நியமங்களுடன் இணைந்து செல்வதற்கு சிரமமான சில தொழில்துறைகள் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
இந்த பிரச்சினையை வெற்றி கொள்வதற்கும் ஆரம்ப கட்டத்திலுள்ள சாத்தியமான மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கும் ம.சு.அதிகாரசபையினால் சுற்றாடல் சிபாரிசுகள் வழங்கப்படுகின்றன. இது ம.சு.அதிகாரசபைக்கும் பல்வேறு துறைகளிலுமுள்ள தொழிலதிபர்களுக்கும் நன்மை பயக்கத்தக்கதாகும். ம.சு.அ. ஆரம்ப கட்டத்தில் சாத்தியான மாசுறுதலை கட்டுப்படுத்துவதன் ஊடாக நன்மை அடைவதோடு தொழில்துறைகள் சுற்றாடல் சார் சிபாரிசுகளில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அவர்களும் அதன் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
சுற்றாடல் சிபாரிசை பெறுவதற்கான நடைமுறைகள்
ம.சு.அ. தலைமை அலுவலகம் மற்றும் ம.சு.அ. மாகாண/ மாவட்ட அலுவலகங்களிலிருந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளுதல்.
தேவையான, பொருத்தமான ஆவணங்களுடன் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ம.சு.அ. சபைக்கு சமர்ப்பித்தல் (இடத்தின் நிலஅளவை வரைபடம், ஏதாவது கட்டிட வரைபடம், அருகிலுள்ள நகரத்திலிருந்து உத்தேச இடத்தின் பாதைவழி அமைப்பு)
விண்ணப்பம் உரிய முறையில் நிரப்பப்பட்டு பொருத்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் பரிசோதனை கட்டணத்தை செலுத்தும் படி விண்ணப்பதாரருக்கு ஒரு எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்படும் (தற்போது ஆகக் குறைந்த தொகை ரூபா. 3,360/- ஆகக் கூடிய தொகை ரூபா. 11,200/- (அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க வரிகளுடன்)
பரிசோதனை கட்டணத்தை செலுத்தியதன் பின்னர், ம.சு.அ. அலுவலர்கள் குழுவொன்றினால் ஒரு களப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இடம் சிபாரிசு செய்யப்பட முடியுமாயின் சுற்றாடல் சிபாரிசை வழங்குவதற்கு, சாத்தியமான சுற்றாடல் மாசுறுதலை தணிப்பதற்கான நிபந்தனைகளுடன் மாநகர ஆணையாளர்/ தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபையின் தலைவருக்கு சிபாரிசு செய்யப்படும். சுற்றாடல் சிபாரிசின் பிரதியொன்று விண்ணப்பதாரிக்கும், தொடர்புடையதாயின் ஏதாவது ஏனைய நிறுவனங்களுக்கும், அமைப்புக்களுக்கும் அனுப்பப்படும்.
விசாரணை சேவைகள்
வாசகர்களுக்கான/ வாடிக்கையாளர்களுக்கான விசாரணை சேவைகளை வழங்குவதற்காக இந்நிலையம் தொழிற்படுகின்றது. விசாரணைகளை தொலைபேசியூடாகவோ எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மேற்கொள்ளமுடியும். அறிவு ஆராய்ச்சிகளுக்கு நூலகத்தில் காணப்படுகின்ற மூலவளங்களிலிருந்து வாசகர்கள் தேடல்களை மேற்கொள்ளலாம்.
உசாத்துணை சேவைகள்
நிலையமானது வேலை நேரங்களில் உசாத்துணைகளுக்காக திறந்து காணப்படுகின்றது. தேவைப்படும் சந்தர்ப்பத்தில் புகைப்பட பிரதி எடுத்தல் சேவைகளும் வழங்கப்படும்.
தற்போதைய விழிப்புணர்வு சேவைகள்
நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, நூலகத்தில் அவர்களது குறிப்பான துறைசார் பகுதிகளில் காணப்படுகின்ற தகவல்கள் குறித்து ம.சு.அ. சபையின் உத்தயோகத்தர்களினால் அறிவிக்கப்படுகின்றது. சுற்றாடல் இணக்க சேவை, புதிய வாய்ப்புக்கள், செய்திப் பத்திரிகை/ சஞ்சிகை சுட்டிகள் என்பன இந்த சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இணைய தேடுதல் சேவைகள்
நிலையத்தின் அனைத்து சேவைப்பட்டியலும் இணையத்தில் காணப்படுகின்றது.
நிலையத்தில், சுற்றாடலுடன் தொடர்பான பெரும் எண்ணிக்கையிலான செய்திப் பத்திரிகை, சஞ்சிகை கட்டுரைகளின் திரட்டும் காணப்படுகின்றது. செய்திப் பத்திரிகை, சஞ்சிகையுடன் தொடர்பான தகவல்களான ஆசிரியர், தலைப்பு தொகுதி, இதழ், திகதி போன்ற விபரங்களுடன் சுற்றாடல் விபர பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அது இணையத்திலும் காணப்படுகிறது.
இணைய வாய்ப்பு
நிலையமானது அதன் அங்கத்தவர்களுக்கு இணையத்தின் ஊடாக தரவுத் தளத்திற்கான வாய்ப்பு வசதியை வழங்குகிறது.
விசேட திரட்டல்கள்
உசாத்துணைகளுக்காக பின்வரும் விடயங்களின் தகவல் திரட்டலும் காணப்படுகின்றது.
சு.தா.ம. (EIA) / ஆ.சு.ம (IEE) அறிக்கைகள்
ம.சு.அதிகாரசபையின் வருடாந்த அறிக்கைகள்
வரைபடங்கள்
சுற்றாடலுடன் தொடர்பான சட்டங்கள், ஒழுங்குவிதிகள்
கல்விசார் தகவல்கள்
துண்டுப் பிரசுரங்கள், செய்தி மடல்கள்
ம.சு.அதிகாரசபையின் வெளியீடுகள் (அநேகமாக ம.சு.அ. வெளியீடுகள் விற்பனைக்கு உள்ளன)
சேவை நேரங்கள்
நிலையமானது ஆர்வமுள்ள பொதுமக்களுக்காக வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.00 வரை திறந்திருக்கும்
|
வர்த்தக அடிப்படையில் ஒலி, மற்றும் வளி தரங்களுக்கான சோதனை வசதிகள் காணப்படுகின்றன. மேலதிக தகவல்களுக்கு தயவு செய்து எம்மை தொடர்பு கொள்க.
|
|
ம.சு.அ. ஆய்வுகூடம் வர்த்தக ரீதியில் பின்வரும் ஆய்வுகூட பரிசோதனைகள் பெறுபேற்கின்றது.
அளவீடு |
கட்டணம் |
அளவீடுகள் |
கட்டணம் |
ஒரு மணித்தியாலத்திற்கு கலவை மாதிரியின் திரட்டல் (ஆறு மணித்தியாலங்கள் வரை) 1-6 மணித்தியாலங்கள் பாய்ச்சல் விகிதத்துடன் |
600/மணி |
BOD மனோமெற்ரிக் |
550 |
BOD அங்கிகள் |
700 |
||
ஒரு மணித்தியாலத்திற்கு கலவை மாதிரியின் திரட்டல் (6 மணித்தியாலங்களுக்கு குறைவாக) |
800 /மணி |
எண்ணெய் மற்றும் மசகு |
1000 |
அமோனியா |
500 |
||
வெப்பநிலை/ pH/ மின்சார தொடர்புநிலை/ உப்புத்தன்மை/ கலங்கல்நிலை |
400 |
நைட்ரேட் (Colouirmetric method) |
500 |
மொத்த திண்மங்கள் |
600 |
நைட்ரேட் (Colorirmetric method) |
350 |
மொத்த மிதக்கும் திடப்பொருட்கள் |
400 |
மொத்த நைட்ரஜன் |
500 |
மானியால் கரைக்கப்பட்ட மொத்த திண்மங்கள் |
400 |
பொசுபேட் (Colorirmetric method) |
500 |
மொத்த கரைக்கப்பட்ட திண்மங்கள் |
400 |
குலோரைட் (Titrametric method) |
350 |
கரைக்கப்பட்ட ஒட்சிசன் |
250 |
இருகாபனேட் |
250 |
சல்பைட் |
450 |
மொத்த கணதிணிவு (Titrametric method) |
300 |
சல்பேட் (Gravemetric method) |
450 |
மெக்னீசியம் |
250 |
எஞ்சிய குளோரீன் |
300 |
கல்சியம் |
250 |
கரைக்கப்பட்ட ஒட்சிசன் |
250 |
மொத்தகொலிபோம் |
500 |
COD (திறந்த மீள்இணைப்பு மற்றும் Titrametric method) |
700 |
பீகல் கொலிபோம் |
500 |
பார உலோகம் /ஏனைய உலோகங்கள் | 900 - 1250 |
மேலே குறிப்பிட்டதற்கு மேலதிகமாக 15% மேந்தலைகள் மற்றும் அரசாங்க வரிகள் (2% தேசத்தை கட்யெழுப்புதல் வரி மற்றும் 12% வெட்) உள்ளடங்கலாக மொத்த தொகைக்கு சேர்க்கப்படும்.
ஆபத்து விளைவிக்கத்தக்க கழிவானது 01.02.2008 ஆம் திகதியிடப்பட்ட 1534/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.
2008 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (பாதுகாப்பு மற்றும் தரம்) ஒழுங்குவிதிகளின் பகுதி II இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் பிரகாரம் ஒழுங்குவிதியின் VIII ஆம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவை கையாள்வதில் சம்பந்தப்பட்டுள்ள (பிறப்பித்தல், சேகரித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்தல், மீட்டல், மீள்சுழற்சி செய்தல், கழிவு நீக்கம் அல்லது ஏதாவது இடத்த தாபித்தல் அல்லது நீக்கத்திற்கான வசதி) அனைத்து நபர்களும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
அட்டவணைப்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதிப்பத்திர வழங்கல் நடைமுறை
தேவையான ஆவணங்கள்/ ஆதரவு ஆவணங்கள்
பரிசோதனைக் கட்டணமானது ஆரம்ப பரிசோதனைக்கு மட்டுமே அறவிடப்படுகின்றது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடமிருந்து சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருக்கின்ற தொழில்துறைகள் பரிசோதனை கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.
கழிவு முகாமைத்துவ அலகின்/ ம.சு.அ. அதிகாரிகள் பரிசோதனையை மேற்கொள்வர்.
ஆபத்திற்குரிய கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் திருப்பதிகரமானதாயின், அனுமதிப்பத்திர கட்டண கொடுப்பனவின் பின்னர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது.
அனுமதிப்பத்திர கட்டணம்:
பிறப்பிப்பவர் | Rs 1 000.00 |
சேகரிப்பவர் | Rs 1 000.00 |
களஞ்சியப்படுத்துபவர் | Rs 10 000.00 |
எடுத்துச்செல்பவர் | Rs 2 000.00 |
மீள்சுழற்சியாளர் | Rs 5 000.00 |
மீளப்பெறுபவர் | Rs 5 000.00 |
அகற்றுபவர் | Rs 100 000.00 |
2008/01/28 ஆம் திகதிய 1533/16 ஆம் இலக்க வர்த்தமானியில்; வெளியிடப்பட்ட ‘ஏ’ மற்றும் ‘பி’ வகை செயற்பாடுகளின் கீழ் வருகின்ற சுற்றாடல் மாசுறுதல் பற்றிய முறைப்பாடுகள் எமக்கு அறிக்கை செய்யப்படல் வேண்டும். திருத்தப்பட்டவாறு 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ம.சு.அதிகாரபையின் அதிகாரத்தின் கீழ் வராத ஏனைய முறைப்பாடுகள் பற்றி அலசி ஆராய்வதற்கு ம.சு.அ. முடியுமான நிலையில் இல்லை என்பதை தயவு செய்து கருத்திற்கொள்க. ம.சு.அதிகாரசபையின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற சுற்றாடல் முகாமைத்துவம் விடயங்கள் பற்றிய மாசுறுதல் சம்பவங்களும், முறைப்பாடுகளும் நிகழ்வு இடம்பெற்ற ம.சு.அ. சபையின் தொடர்புடைய மாகாண/ மாவட்ட அலுவலகங்களுக்கு முதலில் அறிக்கை செய்யப்படல் வேண்டும். நீங்கள் மாகாண/ மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் போது விடயம் ஆராய்வு செய்யப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும்.
உள்ளூர் அதிகாரசபையிளால் தீர்க்கப்படக்கூடியதான விடயங்கள் யாவை ?
2008/01/25 ஆம் தேதியிட்ட 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறவித்தலினால் வெளியிடப்பட்ட “சி” வகை செயற்பாடுகளின் கீழ் வருகின்ற அவற்றின் தொழிற்பாட்டு பகுதிகளிலுள்ள சுற்றாடல் முகாமைத்துவ விடயங்கள் மற்றும் மாசுறுதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஆராய்வதற்கும் தீர்த்து வைப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளுக்கு (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள்) அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றது.
உள்ளூர் அதிகாரசபையின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற சுற்றாடல் விடயமொன்று தொடர்பில் நீங்கள் உரிய அதிகாரசபைக்கு முறைப்பாடொன்றை செய்கின்றபோது உங்களது முறைப்பாட்டுக்கு உள்ளூர் அதிகாரசபை பதிலளிக்க தவறுமாயின், அத்துடன் சுற்றாடல் மாசுறுதல் பிரச்சினை தொடர்ந்தும் இருக்குமாயின் குறிப்பிட்ட மாகாணத்தில் உள்ளூர் உள்ளூராட்சி ஆணையாளரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். உள்ளூர் அதிகாரசபைக்கும் உங்களுக்கும் இடையிலான அனைத்து கடித தொடர்புகளின் பிரதிகளும் உங்களுக்கு முறைப்பாட்டின் விபரங்களுடன் உள்ளூர் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
உங்களுக்கு உதவ முடியுமான ஏனைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் யாவை?
|
முறைப்பாட்டின் தன்மை |
எங்கு முறைப்பாடுசெய்தல்/ பொறுப்புவாய்ந்த நிறுவனம் |
01. |
மண் அகழ்தல், கல் உடைத்தல் மற்றும் நிலத்தை தோண்டுதல் போன்ற அகழ்வு நடவடிக்கைகள் |
புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு பணியகம் (GSMB) |
02. |
தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைத்தல் |
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) |
03. |
காணிகளை நிரப்புதல் |
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLRDC) |
04. |
வனசீவராசி மற்றும் வாழ்விட பாதுகாப்பு விடயங்கள் |
வனசீவராசிகள் திணைக்களம் |
05. |
முதலீட்டு சபை அங்கீகரித்த தொழில்துறைகளுக்கான தொடர்புடைய ஏதாவது முறைப்பாடுகள் |
முதலீட்டு சபை (BOI) |
06 |
கரையோரம் தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் |
கரையோர பாதுகாப்பு திணைக்களம் |
07. |
வயற்காணிகளை நிரப்புதல் |
கமநல சேவைகள் ஆணைக்குழு |
08. |
மாநகர கழிவுளை கொட்டல் |
உள்ளூர் அதிகாரசபைகள் |
உங்களது முறைப்பாட்டை எங்களுக்கு எழுத்து மூலமாக அறியத்தருவது விரும்பத்தக்கது. உங்களது தொலைபேசி முறைப்பாட்டை தொடர்ந்து முறைப்பாட்டு படிவத்துடன் எழுத்து மூலமான முறைப்பாட்டை செய்வீர்களாயின் அது எமக்கு வினைத்திறனுள்ள, விரிவான விசாரணயொன்றை செய்வதற்கு உதவியாக அமையும்.
அனாமதேய முறைப்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதை தயவு செய்து கவனிக்கவும். பல விடயங்களில் குறைவான அல்லது தெளிவற்ற விதத்தில் வழங்கப்பட்ட விபரங்கள் விசாரணயை மிகவும் வினைத்திறன் அற்றதாகவும், சிலவேளைகளில் சாத்தியம் அற்றதாகவும் ஆக்கி விடுகின்றன. மேலும் முறைப்பாட்டாளரின் விபரங்கள் போதாமை என்பதன் மூலம் நாம் கருதுவது யாதெனில், ம.சு.அதிகாரசபையின் விசாரணயை மீள உங்களுக்கு அறிக்கை செய்ய முடியாது என்பதாகும்.
எவ்வாறாயினும், நீங்கள் விரும்புகின்றபோது உங்களது பெயரும் தொடர்பு விபரங்களும் இரகசியமானதாக பேணப்படும் என்பதோடு, அது மதிக்கப்பட்டு ஏனையோருக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது.
*வழங்கப்படுகின்ற சேவைகளுக்கான கட்டணங்கள் பணியின் தன்மையைப் பொருத்தும், வாடிக்கையாளருக்கு தேவைப்படுகின்ற வெளியீடுகள் அடிப்படையிலும் அமைந்து காணப்படும்.
பணிப்பாளர் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு)
திரு. எம்.ஏ.ஏ.என். ஹேமாகுமார
தொலைபேசி /தொலைநகல் - 0112867263
மின்னஞ்சல் -
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999