சிறந்த வளித்தர முகாமைத்துவம், சுற்றாடல் ஒலி மாசுறுதல் முகாமைத்துவம் என்பவை இந்த அலகின் பிரதான தொழிற்பாடுகளாகும். நாட்டில் அத்தியாவசியமாக சிறந்த வளி தரத்தை முகாமை செய்வதற்கு தேவையான நியமங்களையும் ஒழுங்குவிதிகளையும் உருவாக்கல் மற்றும் இந்த அலகானது நாட்டில் வளி மாசுறுல் மற்றும் ஒலி மாசுறுதலின் காரணமாக சுற்றாடல் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பரந்த வளித்தர நியமங்கள், வாகன புகை வெளியேற்றுகை நியமங்கள், தொழில்துறையின் மூல வெளிப்பாடுகளின் நியமங்கள், தொழில்துறை ஒலி நியமங்கள், வாகன ஒலி எழுப்பியின் ஒலி நியமங்கள் மற்றும் அதிர்வு நியமங்கள் போன்றவற்றை மீளாய்வு செய்து தயாரிப்பதில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
இந்த அலகில் பணி புரிகின்ற விஞ்ஞானசார் பதவியினர் அதிகாரசபையின் ஏனைய பிரிவுகளுக்கும், ஏனைய நிறுவனங்களுக்கும் இணக்க கண்காணிப்பு அறிக்கைகளை வெளியிடுவதன் ஊடாக மேற்படி ஒழுங்குவிதிகளின் அமுலாக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு மேலதிகமாக அந்த அலுவலர்கள் நீதிமன்றங்களுக்கு நிபுணத்துவ சான்று, மற்றும் பரிசோதனை அறிக்கைகளையும் வழங்குகின்றனர்.
சுற்றுச் சூழல் வளித்தர கண்காணிப்பானது 1998 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு கோட்டை வளித்தர கண்காணிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, 1998 ஆம் ஆண்டிலிருந்து திரட்டப்பட்ட சிறந்த வளித்தர தரவுத்தளத்தையும் இந்த அலகு கொண்டுள்ளது.
வாகன புகை வெளியேற்றுகை பரிசோதனை நிகழ்ச்சித்திட்டமானது வாகனங்களினால் ஏற்படுத்தப்படுகின்ற வளி மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்படுவதோடு, இந்த பிரிவின் அலுவர்களால் வாகன புகை வெளியேற்றுகை பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தையும், வாகன புகை வெளியேற்றுகை நிலையங்களையும் வாகனங்களினால் ஏற்படுத்தப்படுகின்ற வளி மாசுறுதலை கட்டுப்படுத்துவதனூடாக பொதுமக்களுக்கு நன்மையளிக்கின்ற நிகழ்ச்சித்திட்டமாக மாற்றுவதற்கு ஒழுங்குமுறையில் கூர்மையாக அவதானித்து வருகின்றனர்.
அதேவேளையில் இந்த அலகானது போக்குவரத்து துறை, சக்தி பிறப்பாக்கிகள் மற்றும் தொழில்துறை செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற குறைந்த தரமுள்ள உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் வளி மாசுறுதலின் பிரதான மூலமொன்றாக இருப்பதனால் உயிர்ச்சுவட்டு எரிபொருட்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான பரிசோதனை வசதிகளையும் விஸ்தரிப்பதற்கும் திட்டமிடுகின்றது. பரிசோதனை வசதிகளின் விஸ்தரிப்பானது, தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட நியமங்கள் தொடர்புடைய தற்போதுள்ள எரிபொருள் புகை வெளியெற்ற தரத்தின் இணக்கப்பாட்டை பரிசோதிப்பதற்கு எமக்கு உதவியளிக்கும்.
மேற்படி பிரதான செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இவ்வலகானது மாலே பிரகடனச் சட்டத்தின் கீழ் வருகின்ற செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் எல்லை கடந்த வளி மாசுறுதல் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இதன் நோக்கம் யாதெனில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நகருகின்ற வளி மாசுறுதல் பொருட்களின் நகர்வை அடையாளங்கண்டு, கட்டுப்படுத்துவதாகும். இலங்கையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வளித்தர கண்காணிப்பு அலகானது ஏனைய நாடுகளிலிருந்து வருகின்ற வளி மாசுறுப் பொருட்களை தொடராக கண்காணிப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்த கண்காணிப்பு இடம் மிஹிந்தலையில் தொரமடலாவ எனும் இடத்தில் அமைந்துள்ளது.
ம.சு.அ. சபையின் ஏனைய பிரிவுகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் சுற்றாடல் ஒழுங்குபடுத்துகை நோக்கங்கள் தொடர்பில் இணக்க மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குதல்.
நீதிமன்றங்களினால் கோரப்படுகின்ற வளி மற்றும் ஒலி அளவீடுகள் தொடர்பில் அறிக்கைகளை தயாரித்தல்.
சு.தா.ம./ ஆ.சு.ப. செயன்முறையில் குறித்துரைக்கப்பட்ட பிரதான கருத்திட்டங்கள் தொடர்பில் தொழிநுட்ப உள்ளீடுகளை வழங்குதல்.
வளித்தர கண்காணிப்பு, ஒலி அளவீடுகள் தொடர்பில் பொதுமக்கள், அரசாங்கம், அல்லது தனியார் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற கோரிக்கைகள் தொடர்பில் தொழில்நுட்ப சார் விரிவுரைகளை நிகழ்த்துதல்.
பொருளாதார அபிவிருத்தியில் கொள்கை ஒதுக்கம்/ தீர்மானம் எடுத்தல் அத்துடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நோக்கத்திற்காக சுற்றாடல் கண்காணிப்பு தரவுகளை வழங்குதல்.
இலங்கையில் சுற்றுச் சூழல் வளித்தர கண்காணிப்பு செயற்பாடுகளை அமுல்படுத்தலும் கண்காணித்தலும்.
வளி/ஒலி தொடர்பான சுற்றாடல் ஒழுங்குவிதிகளை வடிவமைத்தலும் மீளாய்வு செய்தலும்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999