ஒரு நாடு என்ற வகையில், நாளாந்தம் சுற்றாடலின் அழிவு காரணமாக காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு பலியாகிவருகிறோம். இந்நிலைமையைக் கட்டுப்படுத்தாவிடின், நமது சுற்றாடல் கட்டமைப்பு கடுமையான அழிவை நோக்கிச்செல்லும். அதனால் மனிதகுலத்தின் இருப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே, சுற்றாடலைப் பாதுகாப்பதில் குடிமக்களாகிய நமது பொறுப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. மேலும், காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்தும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
அதற்குத் தேவையான சட்டம் மற்றும் நிறுவன ஏற்பாடுகளை உருவாக்க அரசாங்கம் அர்பணிப்புடன் செயலாற்றுகிறது. மேலும், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பொதுச்சட்டமொன்றையும் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டிப் பொருளாதாரத்துக்கு மேலாக 2050 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும். அதன்படி பசுமைப் பொருளாதார திட்டங்களைத் தயாரிக்கும் போது, காலநிலை மாற்றச் சட்டம் மற்றும் உயிரியல் கட்மைப்புச் சட்டம் என்பனவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் சிங்கராஜ, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ், மகாவலி போன்ற முக்கிய சுற்றாடல் அமைப்புகளை பாதுகாக்கும் வகையில் அந்தச் சட்டம் அமையும்.
காடுவளர்ப்பு, முத்துராஜவெல பாதுகாப்பு மற்றும் நாட்டிலிருக்கும் ஏனைய இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான சட்ட மூலங்களையும் விரைவில் தயாரித்து நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது மட்டுமன்றி, காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகள் குறைந்த சுற்றாடலுக்கு உகந்த நாடாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையோடு “பயனுள்ள நிலப்பயன்பாட்டின் ஊடாக ஆரோக்கியமான சுற்றாடல்" என்ற தொனிப்பொருளில் இம் முறை நடத்தப்படவிருக்கும் சுற்றாடல் தின நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்!
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
04 ஜூன் 2024
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999