SinhalaSriLankaEnglish (UK)

ஆழ்ந்த ஆய்வு EIA பயிற்சிநெறி

சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, சுற்றாடல் மத்தியஸ்தத்திற்கான மையம் (CEJ), இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் கற்கைகளுக்கான மையம் என்பன மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் (CEA) ஒருங்கிணைந்து சர்வதேச ஆழ்ந்த ஆய்வு சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) பயிற்சிக்கான நிகழ்ச்சித்திட்டத்தை நடத்த உள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டம் வதிவிட பயிற்சியாக 10 நாட்களுக்கு கண்டி ரீ ஒப் லைப் ஹோட்டலில் (Hotel Tree of Life) 2014 அக்டோபர் 25 முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அரச அதிகாரிகள், கருத்திட்ட முன்மொழிவாளர்கள், EIA தயாரிப்பில் ஈடுபடும் உசாவலர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் அலுவலகர்களுக்காக இந்த கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதுடன் விண்ணப்ப இறுதி நாள் 2014 செப்டம்பர் 25 ஆம் திகதி ஆகும். இதில் ஆர்வம் உள்ளவர்கள் பத்தரமுல்லை 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) பிரிவின் பணிப்பாளருக்கு தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. . என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

இயக்குநர் ஜெனரல் டாக்டர் முஹம்மது குர்ஷித் சந்தித்து

pkm2

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சாரங்க அழகப்பெரும அவர்கள் பாக்கிஸ்தானின் சுற்றாடல் பாதுகாப்பு முகமையகத்தின் பணிப்பாளர் நாயகமான டாக்டர் முஹம்மது குர்ஷித் அவர்களை பத்தரமுல்லையிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை(CEA)  தலைமையகத்தில் 2014 செப்டம்பர் 10 ம் திகதியன்று சந்தித்தார். இரண்டு பணிப்பாளர் நாயகங்களும் அவர்களின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள், மற்றும் தற்போதைய முக்கிய சுற்றாடல் பிரச்சினைகளை பற்றி பரிமாற்றம் செய்ததோடு குறிப்பாக அனுபவங்கள், பயிற்சி வாய்ப்புகள் முதலியனவற்றை பகிர்வதற்காக இருதரப்பு உறவுகளையும் கட்டியெழுப்புவதற்கு சம்மதித்தனர். இதனை தொடங்கிவைப்பதன் நிமித்தம், கண்டி ரீ ஒப் லைப் ஹோட்டலில் (Hotel Tree of Life) 2014 அக்டோபர் 25 முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஆழ்ந்த அறிவு பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக பாக்கிஸ்தானின் சுற்றாடல் பாதுகாப்பு முகமையகத்தின் உத்தியோகத்தர்களை அழைக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை தயாராகவுள்ளது.

pkm1

 

சுற்றாடல் பாதுகாப்பு குறித்து "சமுர்த்தி” பெறுபவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

வெற்றிகரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறைகளுக்காக மக்கள் விழிப்பூட்டப்படுவது அவசியமாகும். இதன் அடிப்படையில், கௌரவ சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் மேற்பார்வையின் கீழ் சமுர்த்தி பெறுபவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பத்தரமுல்லையிலுள்ள “அப்பே கம” கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள இவ்வகையான தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் இது முதல் திட்டமாக இருந்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கெளரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள் “கிராம மட்டத்தில் சமுர்த்தி பெறுபவர்களுக்காக பல்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் பல நிகழ்ச்சித்திட்டங்களை நடத்த உள்ளதாகவும், சமுதாய மட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஒரு சமூக அக்கறை உணர்வு தற்பொழுது இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

“திவநெகும” அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி ஆர்.பி. பந்துல, இலங்கை மன்ற நிறுவனத்தின் பயிற்சிநெறிகளுக்கான தலைவர் திரு. அஜித் ஜயவர்தன மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர் திரு. சத்துர மல்வான ஆகியோர்களால் சுற்றாடல் பாதுகாப்பு, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் பற்றிய விரிவுரைகள் நடாத்தப்பட்டது. தேசிய டெங்கு ஒழிப்பு அலகின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த திசேர அவர்களால் டெங்கு தடுப்பு தொடர்பான விரிவுரையும் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு கௌரவ சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர், திரு டி.டபிள்யு. பிரதாப்சிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் சாரங்க அழகப்பெரும, “திவநெகும” அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், கடுவெல பிரதேச செயலக பிரிவு அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுபவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும்  "திவிநெகும 'அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

samurdhipro1

samurdhipro2

samurdhipro3

samurdhipro4

samurdhipro5

samurdhipro6

samurdhipro7

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோலிய துறையினருக்கான ஒரு விழிப்புணர்வு பயிற்சி

மத்திய சுற்றாடல் அதிகாரசபை எப்போதும் சமூகத்திற்காக தூய்மையான மற்றும் பசமையான சுற்றாடலை பராமரிக்க முயல்கின்றது. ஒவ்வொரு அரசு துறைகளுக்கும் சுற்றாடலை பாதுகாப்பதில் பொறுப்பு உள்ளது. அரசு துறைகள் மத்தியில் பெற்றோலிய துறையினருக்கு சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய அறிவை மேம்படுத்துவதற்காக வேண்டி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, மற்றும் பெற்றோலிய துறை அமைச்சு என்பன ஒன்றாக இணைந்து பெற்றோலிய துறை அதிகாரிகளுக்காக சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிநெறியை ஏற்பாடு செய்தன.
.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு. டி.டபிள்யு.  பிரதாப்சிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் 2014 செப்டம்பர் 2 ம் திகதி இடம்பெற்றது. சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் திரு. ஜயவிலால் பெர்னாண்டோ மற்றும் அப்பிரிவின் பணிப்பாளர் திரு. நீல் பெரேரா, மற்றும் பெற்றோலிய துறை அமைச்சின் (நிர்வாகம்) மேலதிக செயலாளர் திருமதி. சந்தியா விஜயபண்டார ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு. டி.டபிள்யு.  பிரதாப்சிங்க அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் பெற்றோலிய துறை அமைச்சின் (நிர்வாகம்) மேலதிக செயலாளர் திருமதி. சந்தியா விஜயபண்டார அவர்களால் விளக்கப்பட்டது.
 
எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தேசிய சுற்றாடல் சட்டம் மற்றும் பெற்றோலிய துறைக்கு தொடர்புடைய விதிமுறைகள், வளி தர முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச கட்டுப்பாடுகள், சுற்றாடல் நேயமுள்ள பேண்தகு போக்குவரத்து முறைகள், மற்றும் இலங்கை கரையோர வலய  முகாமைத்துவத்திற்குரிய கரையோரம் பேணல் அபிவிருத்தி தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கான பொறிமுறைகள் என பல விரிவுரைகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் அடங்கியிருந்தன.

 

petrolium1

petrolium2

petrolium3

petrolium4

petrolium5

petrolium6

டெங்கு தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

தற்போது டெங்கு ஒரு தொற்று நோயாக மாறிவிட்டது. நாடளாவிய ரீதியில் வெவ்வேறு தரப்பினரால் பல டெங்கு தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றது. பொறுப்புள்ள அரசாங்க நிறுவனம் என்ற வகையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை டெங்கு தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை ஆண்டுதோறும் நடாத்துகிறது. இந்த முறையும் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமான விழிப்பூட்டல் மற்றும் கண்கானிப்பு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அருகாமையிலுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து பங்கேற்றன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தலங்கம பொலீஸ் நிலையம், தென்னை பயிர்ச்செய்கை சபை, நவலோக கட்டுமான பணிகள் (பிரைவேட்) லிமிட்டட், பதிவாளர் நாயகம் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கடுவெல்ல மாநகர சபை, கார்ல்டன் ஸ்போட்ஸ் நெட்வொர்க் (CSN), சீல்ட் மெடிக்கல் (பிரைவேட்) லிமிட்டட், ஹவாய் ரெஸ்டுரண்ட், மாவட்ட மருத்துவ பரிசோதகர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான இலங்கை பணியகம் என்பன முக்கிய பங்குதாரர்களாக பங்குபற்றினர்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு. டி.டபிள்யு.  பிரதாப்சிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சாரங்க அழகப்பெரும, சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் திரு. ஜயவிலால் பெர்னாண்டோ மற்றும் அப்பிரிவின் பணிப்பாளர் திரு. நீல் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அவ்வேளையில் உரையாற்றிய மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் “இலங்கையிலிருந்து நாங்கள் மலேரியா நோயை ஒதுக்கியது போல் டெங்கு நோயையும் அகற்ற இவ்வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் நாம் முயற்சி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

den1

den2

den3

den4

den5
                                                                                                                                                                                                                                         

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்