SinhalaSriLankaEnglish (UK)

இரசாயன விபரத்துக்களை தடுத்தலும் இலங்கைக்கான தயார் நிலை நிகழ்ச்சித்திட்ட கருத்திட்டமும் (CAPP-SL)

பின்னணி

தொழில்துறை என்பது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியை அளிக்கின்ற, இலங்கைக்கு பெறுமதிமிக்க பொருளாதார, சமூக நன்மைகளை வழங்கி, பேணத்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கொன்றை ஆற்றுகின்றது. எவ்வாறாயினும் பல தொழில்துறை செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள ஆபத்துமிக்க இரசாயண பொருட்களுடன் மூலமான விபத்துக்கள், தீப்பற்றுதல், வெடிப்புகள் என்பன மக்களுக்கும் சுற்றாடலுக்கும் உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.

இரசாயன விபத்து தடுப்பு, மற்றும் இலங்கைக்கான தயார் நிலை நிகழ்ச்சித்திட்ட கருத்திட்டமானது (CAPP-SL) சர்வதேச இரசாயனங்கள் முகாமைத்துவத்திற்கான உபாயமுறை அணுகுமுறை (SAICM) இன் நிதி ஆதரவுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் (UNEP) நிறைவேற்று முகவராண்மையாக இருப்பதோடு, தாய்லாந்து, பெங்கொக்கை தளமாக கொண்டு இயங்கும் ஆசிய அனர்த்த தயார்நிலை நிலையம் தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது.

நோக்கம்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான பல்வேறு அரசாங்க முன்னெடுப்புகளுடன் இலங்கையின் இரசாயன தொழில்துறை துரிதமாக விரிவடைந்து வருகிறது. இந்த கருத்திட்டமானது CAPP நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான உபாயமுறையொன்றை உருவாக்குவதை நோக்காக கொண்டுள்ளது. இது இரசாயன விபத்துக்களை தடுப்பதற்கும் ஏற்படக்கூடிய விபத்துக்களின் தாக்கங்களை வரையறை செய்யவும் உதவுகின்றது. அதன்மூலம் மக்களுக்கான தீங்கையும் சுற்றாடல் சொத்துக்களுக்கான தீங்கையும் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு வழியமைக்கின்றது.

குறிக்கோள்கள்

  • இரசாயன விபத்து தடுப்பு மற்றும் தயார் நிலை தொடர்பான விடயங்களின் புரிந்துணர்வை அதிகரித்தல் (CAPP).

  • இரசாயன விபத்துக்களின் ஆபத்துக்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கையினுள் தொடர்புடைய நிறுவனங்கள், முகவராண்மைகள், நிபுணர்களின் ஆற்றல்களை மேம்படுத்துதல்.

  • இரசாயண விபத்து ஆபத்துகள், தீங்குகளின் தன்மை, அமைவிடத்தை அடையாளங் காணுதல்.

  • ஏற்படக்கூடிய எந்தவொரு விபத்தினதும் மோசமான தாக்கங்களை குறைப்பதற்கும் இரசாயன கசிவு, நெருப்பு அல்லது வெடிப்பு என்பவற்றை தணித்து பதிலான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ளுதல்.

  • இலங்கைக்கு அதன் தேவைகள் மற்றும் ஆற்றல்களை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட பொருத்தமான CAPP நிகழ்ச்சித் திட்டமொன்றை விருத்தி செய்து நடைமுறைப்படுத்தல்.

கருத்திட்ட செயற்பாடுகள்

கருத்திட்டத்தின் தற்போதைய செயற்பாடுகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய அங்குரார்ப்பன செயலமர்வு பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் இல் 2013 சனவரி 17 ஆம் திகதியன்று நாட்டில் இரசாயண விபத்து தடுப்பு மற்றும் தயார்நிலையில் தொடர்புடைய அனைத்து பங்காளர்களினதும் பரவலான பிரதிநிதித்துவத்துடன் இடம்பெற்றது. CAPP செயலணி தாபிக்கப்பட்டு நாட்டு நிலைமை அறிக்கை, வீதி வரைபடம் என்பவற்றை தயார் செய்தல் உள்ளிட்ட முன்னைய கருத்திட்டத்திற்கு அவர்கள் பொறுப்பாக இருக்கவும் செயலமர்வில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ம.சு.அ. கருத்திட்டத்தின் அடுத்த கட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக செயலணிகள் அங்கத்துவர்களை தெரிவு செய்தது. செயலணியானது தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்வி சார் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. எதிர்வரும் கருத்திட்ட செயற்பாடுகள்:

  • செயலணிக்கான முதலாவது பயிற்சி அமர்வு

  • நாட்டு நிலைமை அறிக்கையை விருத்தி செய்தல்

  • CAPP நிகழ்ச்சித்திட்டத்திற்கான தேவை மதிப்பீடு, வீதி வரைபடம் என்பவற்றினை விருத்தி செய்தல்

  • பிரதான பன்முக பங்காளர்களுக்கான இரண்டாவது பயிற்சி அமர்வு

  • CAPP அங்குரார்ப்பண செயலமர்வு

SAICM கருத்திட்டம்

உலக சுகாதார அமைப்பின் “சர்வதேச இரசாயன முகாமைத்துவத்திற்கான திறமுறை அணுகுமுறையின் நிதி உதவியின் கீழ்” இலங்கையில் இரசாயனங்களின் முகாமைத்துவத்திற்கான சிறந்த செயல்திட்டம் தயார் நிலை மற்றும் இலங்கையின் தேசிய இரசாயன விபரக்குறிப்பு இற்றைப்படுத்துதல் பற்றிய விசேட கருத்திட்டம் தற்போது செயற்பாட்டில் உள்ளது. கருத்திட்டத்தின் நோக்கம் யாதெனில் இலங்கையில் தேசிய இரசாயண விபரக்குறிப்பை இற்றைப்படுத்துவதும் இரசாயனங்களின் சிறந்த முகாமைத்துவத்திற்கான தேசிய அமுலாக்கல் திட்டமொன்றை தயார்படுத்துவதுமாகும்.

மாளிகாவத்தை, தொம்பேயில் ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ முறையின் நிர்மாணம்

அறிமுகம்

2008 ஏப்ரல் 24ஆம் திகதியன்று சுற்றாடல் மற்றும் இயறகை வளங்கள் அமைச்சின் செயலாளருக்கும் கொரிய சர்வதேச கூட்டுறவு முகவராண்மையின் வதிவிட பிரதிநிதிக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட கலந்துரையாடல் பதிவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கும் கொரிய அரசாங்கத்திற்குமிடையே உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையின் பிரகாரம் கொரிய அரசாங்கமானது தொம்பேயில் சுகாதார முறைப்படியிலான கழிவு நிரப்பல் இடமொன்றை விருத்தி செய்வதற்கு ரூ. 450 மில்லியன் நிதி உதவியையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு, உடன்படிக்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ரூ. 150 மில்லியன் பங்களிப்பொன்றையும் வழங்குகின்றது.

 

இந்த காணி நிரப்பலானது நாளாந்தம் 10 தொன் கழிவுகளை முகாமை செய்யும் விதத்தில் தொம்போ பிரதேச சபைக்கு இறுதி நீக்கல் இடமாக இருப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த இடம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானதாக இருந்ததோடு (LRC) வர்த்தக ரீதியாக காட்டு பெருந்தோட்டமொன்றை தாபிப்பதற்கு வனவளத் திணைக்களத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவானது ம.சு.அதிகாரசபைக்கு 68 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கும் (நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு) அவற்றில் 6 ஹெக்டயர் கழிவு நிரப்பல் இடத்தை நிர்மாணிப்பதற்கான முக்கிய பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறிக்கோள்கள்

கருத்திட்டத்தின் குறிக்கோள்களாவை:

  • கழிவு முகாமைத்துவத்திற்கு பொறுப்பான கொள்கை வகுப்பாளர்கள், அரசாங்க அதிகாரிகளின் திறனை மேம்படுத்தல்;

  • ஆதரவு கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ முறைமை தாபித்தலும் முறைமையின் வெற்றிகரமான அமுலாக்கமும்;

  • வளங்கள், பிறப்பாக்கல் தொகுதி, திரட்டல் மற்றும் அல்லது வீட்டுக் கழிவு நீக்கம் என்பன பற்றிய பட்டியல் சார் அளவாய்வொன்றை நடத்துதல்;

  • மேற்குறிப்பிட்ட பிராந்தியங்களில் பிறப்பிக்கப்படுகின்ற வீட்டு கழிவுகளுக்கு பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க திரட்டல் முறைமையொன்றை வடிவமைத்து அமுல்படுத்தல்;

  • துப்பரவு கழிவு காணி நிரப்பல் இடம் மற்றும் தொடர்புடைய ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளினை நிர்மாணித்தல்.

 

இலங்கை அரசாங்கத்தின் கலந்துரையாடல் பதிவின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் சிறந்த கட்டமைப்பு தொடர்புடைய எஞ்சிய நிர்மாண பணியை தொடர KOICA இயலச் செய்யும் வகையில் சுகாதார முறைப்படியிலான கழிவு நிரப்பல் நிலப் பணியை மேற்கொள்வதற்கு தேவைப்படுத்துகிறது.

அதன் பிரகாரம் ம.சு.அ. கருத்திட்ட நிறைவேற்று முகவராண்மையாக செயற்பட்டு, நலப் பணிகளின் செயற்பாட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதொரு, கௌரவ சுற்றாடல் அமைச்சர், அதிமேதகு கொரிய குடியரசு தூதுவர் ஆகியோரின் பங்கேற்புடன் ம.சு. அதிகாரசபையில் இடம்பெற்ற வைபவமொன்றில் 2012 யூன் 07ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் KOICA விற்கு இந்த இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, எஞ்சிய நிர்மாணப் பணி தொடர்கின்றது.

கழிவு நிரப்புப்பகுதிக்கான உள்ளகக் காப்புறைகள், கழிவு நீர் திரட்டல் குழாய்கள், வடிகால் பாதைகள், வாயு திரட்டல் குழாய்கள் என்பவற்றின் பொருத்துகைகளை காணி நிரப்பல் பகுதியில் KOICA வினால் வேலைக்கமர்த்தப்பட்ட வரையறுக்கப்பட்ட சம்கி நிர்மாணக் கம்பனியினால் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக கட்டிடத்தின் நிர்மாணமும், கழிவு நீர் சுத்திகரிப்பு தொகுதியின் நிர்மாணமும் இடம்பெற்று வருகின்றன.

Landfill area once earth work was completed Leachate treatment area after completion of earth work Construction of Superstructure of Landfill area Sanitary Landfill Area after completion of the Construction

 

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்