SinhalaSriLankaEnglish (UK)

சு.பா. அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் யாவை?

சு.பா.அ. வைத்திருப்பவர், ம.சு. அதிகாரசபையினால் குறித்துரைக்கப்பட்ட தகுதிறன்கள் மற்றும் நியமங்களுக்கு ஏற்ப சுற்றாடலுக்கு கழிவுகளை, வெளியேற்றங்கள்/ புகை / வாயு, ஒலி/ அதிர்வு என்பவற்றை வெளியேற்றுவதற்கான ஒரு சட்ட ரீதியான அதிகாரமாகும். இது தொழில்துறை செயற்பாட்டின் மூலம் சுற்றாடலுக்கு சு.பா.அ. வைத்திருப்பவர் கழிவுகளையும் வெளியேற்றங்களையும் வெளியேறுவதை தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு உதவியாக அமையும்.

அருகில் உள்ளவர்கள், எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கான சாத்தியப்பாடு குறைக்கப்படும்.

தொழில்துறை குறித்து பொதுமக்கள் நம்பகத்தன்மை கட்டியெழுப்பப்பட்டு, தொழில்துறையை நோக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது கொள்வனவாளர்களை உற்பத்தி கவரக்கூடியதாக இருக்கும்.

தொழில்துறையின் செயன்முறையை மேலும் மேம்படுத்துவதற்கு வங்கிகளிலிருந்து கடன்களை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு சு.பா.அ. வைத்திருப்பவர் தகுதியுடையவராக மாறுகின்றார்.

சு.பா.அ. வைத்திருப்பவர், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறை பெறுவதற்கான ISO சான்றிதழை நோக்கி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் ஏன் இரத்துச் செய்யப்பட/ இடைநிறுத்தப்பட முடியும்?

  • பின்வரும் நிலைமைகளின் கீழ் சு.பா.அ. இடைநிறுத்தப்பட அல்லது இரத்துச் செய்யப்பட முடியும்.

  • அனுமதிப்பத்திரத்திற்குரிய ஏதாவது நியதி, நியமம் மற்றும் நிபந்தனைகளை மீறுதல்.

  • அனுமதிப்பத்திரம் வழங்கியதிலிருந்து காணப்படும் சுற்றாடல், இயற்கை காரணிகள் அல்லது பிறவற்றால் சுற்றாடல் மாற்றப்பட்டு அல்லது மாற்றமடைந்து இருத்தல்.

  • அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சுற்றாடலுக்கு தொடரான கழிவுகளின் நீக்கம், வெளியெற்றும் அல்லது புகை வெளியேற்றம் அல்லது ஏதாவது நன்மையளிக்கும் பயன்பாடு சுற்றாடலை மோசமாக பாதிக்கின்றபோது

சு.பா.அ. புதுப்பிப்பது எவ்வாறு?

  • சு.பா.அ. புதுப்பிக்கப்பட வேண்டியிருத்தால்

  • சு.பா.அ. காலவதியாகும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்

  • செயற்பாடுக்கு ஏதாவது மாற்றங்கள், மாற்றீடுகள் அல்லது விஸ்தரிப்புகளை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்

  • சு.பா.அ. புதுப்பித்தல் விண்ணப்பப் படிவங்கள் ம.சு.அ. தலைமை அலுவலகம்,,மாகாண / மாவட்ட அலுவலகங்களிலிருந்து.பெற்றுக் கொள்ள முடியும். அதை ம.சு.அ. இணையத்தளமான www.cea.lk  இலிருந்து தரவிறக்கம் செய்யப்பட முடியும்.

சு.பா.அனுமதிபத்திரத்தை புதுப்பிக்கும்போது பரிசோதனை கட்டணம் வழங்கப்பட வேண்டியுள்ளதா?

முதலாவது சு.பா.அனுமதிபத்திரத்தை விண்ணப்பிக்கும் போது மட்டுமே பரிசோதனை கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஆதலால் சு.பா.அ. புதுப்பிக்கும் போது பரிசோதனை கட்டணத்தை செலுத்தவேண்டிய தேவை இல்லை. எவ்வாறாயினும் புதுப்பித்தல் விண்ணப்பத்தை உரிய நேரத்திற்கு சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரி தவறும் பட்சத்தில் அவர் சு.பா.அ. புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கு பதிலாக புதிய சு.பா.அ. மீண்டும் சமர்ப்பித்தல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் பரிசோதனை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திர கட்டணம் எப்போது செலுத்தப்பட வேண்டும்?

அதிகாரமளிக்கப்பட்ட அலுவரினால் சு.பா.அ. வழங்குதல் பற்றி தீர்மானம் எட்டப்பட்டதன் பின்னர் சு.பா.அனுமதிபத்திரத்திற்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகள் தயாரிக்கப்பட்டு சட்ட அங்கீகாரத்திற்காக சட்ட அலகிற்கு சமர்ப்பிக்கப்படும். சட்ட பிரிவின் அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர், சு.பா.அ. கொடுப்பனவை செலுத்தும்படி விண்ணப்பதாரிக்கு எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்படும். அனுமதிப்பத்திர கட்டணம் செலுத்தப்பட்டவுடன் அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்