இலங்கை சு.தா.ம. செயற்பாட்டில் பொதுமக்கள் பங்கேற்பு ஒரு முக்கிய அம்சமாகும். பொதுமக்கள் பங்கேற்றலுக்கான ஏற்பாடு, தேசிய சுற்றாடல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒரு சு.தா.ம. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் 30 தினங்களுக்குரிய கட்டாயமான காலப்பகுதியில் சு.தா.ம. அறிக்கை தொடர்பான பொதுமக்கள் பரிசீலனை மற்றும் கருத்துரைக்காக தேசிய சுற்றாடல் சட்டமானது ஏற்பாடு செய்துகொடுக்கின்றது. சு.தா.ம. அறிக்கையானது பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப, சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் காணப்படுகிறது. இந்த அறிக்கைகள் பொதுவாக பொதுமக்கள் பரிசீலனைக்காக ம.சு.அ. தலைமையக நூலகம், தொடர்புடைய பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச சபையில் வைக்கப்படுகின்றது. 30 நாட்களுக்குள் ம.சு.அதிகாரசபைக்கு அல்லது தொடர்புடைய கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு தமது கருத்துக்களை பொதுமக்களில் எவரெனும் தெரிவிக்க முடியும். கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மை சு.தா.ம. அறிக்கை தொடர்பில் 30 நாட்களுக்குள் பரிசீலனை மற்றும் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பொதுமக்களை அழைத்து தேசிய பத்திரிகைகளில் அறிவித்தல்களை வெளியிடும். சு.தா.ம. அறிக்கையை எங்கு, எப்போது பரிசீலிக்கப்பட முடியும் என்பதை அறிவித்தல் குறிப்பிட்டுரைக்கும். பிரதிபண்ணல் கட்டணங்களை செலுத்தி கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மையிடமிருந்து சு.தா.ம. அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு. பொதுமக்கள் விசாரணையை பொதுமக்கள் ஆர்வமொன்றாக க.அ. முகவராண்மை கருதுகின்றபோது அவ்வாறான விசாரணையை நடத்துவதற்கு அது தற்றுணிவு கொண்டுள்ளது.
பெற்றுக் கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்துரை பதிலுக்காக கருத்திட்ட பிரேரணையாளருக்கு அனுப்பப்படல் வேண்டும். கருத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகள் ஊடாகவும் கருத்திட்ட பிரேரணையாளர் பதில் அளித்தல் வேண்டும்.
கட்டாயமான 30 நாட்களுக்கு பொதுமக்கள் கருத்துக்களுக்காக ஆ.சு.ப. அறிக்கைகளை வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இல்லை. எவ்வாறாயினும் ஆ.சு.ப. அறிக்கை பொதுமக்கள் ஆவணமொன்றாக கருதப்படும் என்பதோடு, பொதுமக்களின் பரிசீலனைக்காக வெளிப்படையாக வைக்கப்படும்.
மேற்படி கட்டாய தேவைப்பாட்டுக்கு மேலதிகமாக கருத்திட்ட பிரேரணையாளர்கள்சு.தா.ம. ஆய்வு காலப் பகுதியில் உள்ளூர் பொதுமக்களுடன் முறை சாரா கலந்துரையாடல்/ ஆலோசனைகளை மேற் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். கருத்திட்டம் பற்றிய சரியான தகவல்களை உள்ளூர் மக்கள் பெறுகின்றனர் என்பதை கருத்திட்ட பிரேரணையாளர் உறுதிப்படுத்தல் வேண்டும். கருத்திட்டத்தினால் உள்ளூர் மக்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டால், கருத்திட்ட பிரேரணையாளர் அவர்களுடன் கலந்துரையாடி தாக்கங்களை குறைப்பதற்கு தணிப்பு நடவடிக்கைகளை பிரேரிப்பதில் அவர்களது ஆதரவை பெற்றுக் கொள்வது முக்கியமானதாகும்.
1995.02.23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மற்றும் 2004.12.29 ஆம் திகதிய 1373/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிட்டவாறு ஆ.சு.ப./ சு.தா.ம. என்பற்றுக்கான அங்கீகாரம் வழங்கக்கூடிய கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. பின்வரும் பணிகள் குறித்துரைக்கப்பட்டுள்ள தொடர்புடைய அமைச்சுக்கள்:-
a) தேசிய திட்டமிடல்
b) நீர்ப்பாசனம்
c) சக்தி
d) விவசாயம்
e) காணிகள்
f) வனங்கள்
g) தொழில்துறைகள்
h) வீடமைப்பு
i) நிர்மாணத்துறை
j) போக்குவரத்து
k) நெடுஞ்சாலைகள்
l) கடற்றொழில்
m) நீரக வளங்கள்
n) பெருந்தோட்டக் தொழில்துறைகள்
2. கரையோர பாதுகாப்பு திணைக்களம்
3. வனசீவராசிகள் பேணல் திணைக்களம்
4. வனத் திணைக்களம்
5. மத்திய சுற்றாடல் அதிகாரசபை
6. நகர அபிவிருத்தி அதிகாரசபை
7. புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகம்
8. இலங்கை சுற்றுலா சபை
9. இலங்கை மகாவலி அதிகாரசபை
10. இலங்கை முதலீட்டு சபை
1. ஆரம்பநிலை தகவல்களை சமர்ப்பித்தல்
சு.தா.ம. / ஆ.சு.ப. ஒன்றுக்கு தேவைப்படுகின்ற உத்தேச கருத்திட்டமொன்றின் இயற்கை தன்மை, அமைவிடம், தாக்கங்கள் தொடர்பான தகவல்களை கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கு கருத்திட்ட முன்மொழிவாளர் சமர்ப்பித்தல் வேண்டும்.
கருத்திட்ட அமைவிடம் தீர்மானிக்கப்பட்டு மற்றும் கருத்திட்ட கோட்பாடு பூர்த்தி செய்யப்பட்டவுடன் கருத்திட்ட முன்மொழிவாளர் ஒருவரியால் உத்தேச கருத்திட்டம் பற்றிய ஆரம்பநிலை தகவல்களை சமர்ப்பிப்பதற்கான சிறந்த காலமாகும்.
2. ஆரம்பநலைத்தகவல்ளை வடிகட்டல்
ஆரம்பநலைத்தகவல்ளை வடிகட்டல் செயற்பாடானது பின்வரும் தீர்மானங்ளை மேறகொள்ள உதவுகின்றது
குறித்த உத்தேசகருத்திட்டத்தின் அங்கீகாரமானது தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு IV இ இன் கீழா அல்லது சு.தா.ம ற்கான வேறுபொருத்தமான சட்டத்தின்கீழா அமையவேண்டும்.
திட்ட ஒப்புதல் நிறுவனமானது போதுமானஅளவு ஆரம்பநலைத்தகவல்கள் திரட்டப்பட்டதும் சு.தா.ம நடவடிக்கையின் நோக்கெல்லையை வரையறுத்தல் செயன்முறையை ஆரம்பித்துவிடும்.
3. சுற்றாடல் சார் நோக்கெல்லையை வரையறுத்தல்
சுற்றாடல்சார் நோக்கெல்லை வரையறையானது, உத்தேச செயற்பாட்டுடன் தொடர்பான முக்கிய விடயங்களை அடையாளங் காண்பதற்கும் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களின் எல்லையை தீர்மானிப்பதற்குமான ஆரம்பநிலை மற்றும் திறந்த செயன்முறையாகும். க.அ. முகவராண்மையானது நோக்கெல்லையை வரையறுத்தல் செயற்பாட்டிற்காக சம்பந்தப்பட்ட அனைத்து முகவராண்மைகள், கருத்திட்ட முன்மொழிவாளர்கள், ஏனைய ஆர்வமுடைய ஆட்கள் (தேவையாயின்) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கும் நோக்கெல்லை வரையறை செயன்முறையின் பின்னர் சு.தா.ம. / ஆ.சு. பரிசோதனைகளுக்கான ஆய்வெல்லையை (ToR) க.அ.மு. வெளியிடும்.
4. சு.தா.ம. / ஆ.சு.ப. அறிக்கை தயாரித்தல்
சு.தா.ம/ ஆ.சு.ப. அறிக்கை என்பவற்றை தயாரிப்பதும், மதிப்பிடலுக்காக க.அ.மு. சமர்ப்பிப்பதும் கருத்திட்ட பிரேரணையாளரின் பொறுப்பாகும். சு.தா.ம. அறிக்கைகளின் தயாரிப்பில் பல விசேட துறைகள் உள்ளடக்கப்பட வேண்டியுள்ளதால் உசாவுநர்கள் குழுவொன்றின் சேவைகளையும் வேண்டி நிற்கலாம். சு.தா.ம. அறிக்கைகளை தயாரிக்கின்ற ஆலோசனை நிறுவனங்களின் பட்டியலொன்று ம.சு. அதிகாரசபையில் காணப்படுகிறது. ம.சு.அதிகாரசபை பதிவு செய்திராத பொருத்தமான, தகைமையுள்ள ஆலோசகர்களின் சேவைகளையும் கருத்திட்ட பிரேரணையாளர் இதற்கு மேலதிகமாக பயன்படுத்த முடியும். சு.தா.ம. அறிக்கைகள் தேவையான தராதரத்தை கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்புடைய துறையில் நம்பகமான, போதிய தகைமைகளையுடைய நிபுணர்களின் சேவைகளையும் கருத்திட்ட பிரேரணையாளர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
5. பொதுமக்கள் பங்கேற்பும் அறிக்கையின் மதிப்பீடும்
சு.தா.ம. அறிக்கையை பெற்றதன் பின்னர் க.அ. முகவராண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்த நியதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக போதிய சரிபார்த்தலுக்கு உட்படுத்தப்படும். பின்னர் அது 30 வேலை நாட்களுக்கு, பொதுமக்கள் கருத்துக்கள்/ பரிசோதனை என்பவற்றுக்காக வெளிப்படையாக வைக்கப்படும்.
சு.தா.ம. அறிக்கை தொடர்பாக ஏதாவது பொதுமக்கள் கருத்துரை காணப்படுமாயின், அவை பதிலுக்காக கருத்திட்ட பிரேரணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுமக்கள் கருத்துரை காலத்தை தொடர்ந்து, சு.தா.ம. அறிக்கையை மதிப்பீட செய்து தனது சிபாரிசுகளை செய்வதற்காக தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்றை (TEC) க.அ.மு. நியமிக்கும்.
ஆ.சு.ப. அறிக்கைகள் பொதுமக்கள் கருத்திற்கு வெளிப்டையாக வைக்கப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லை. எனவே தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு மட்டுமே உட்படுத்தப்படும்.
6. தீர்மானம் எடுத்தல்
தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் கருத்திட்டமொன்றுக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி க.அ.மு. அதன் தீர்மானத்தை மேற்கொள்ளும். க.அ.மு என்பது ம.சுஅ. இல்லாவிட்டால், அது அங்கீகரித்த வழங்குவதற்கு முன்னர் ம.சு. அதிகாரசபையால் அங்கீகரித்தை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
கருத்திட்ட பிரேரணையாளர் தீர்மானத்தை சம்மதிக்காவிட்டால், சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு மேல்முறையீடு செய்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரது தீர்மானமே இறுதியானதாக இருக்கும்.
7. கண்காணிப்பு இணக்கப்பாடு
சு.தா.ம./ ஆ.சு.ப. அங்கீகாரம் என்பன கருத்திட்ட பிரேரணையில் நிறைவேற்ற எதிர்பார்க்கின்ற நிபந்தனைகளுடன் இயைந்ததாகவே பொதுவாக வழங்கப்படுகின்றது. அமுலாக்கப்படும் நிபந்தனைகள்/ தணிப்பு நடவடிக்கைகளை ம.சு.அ. அல்லது க.சு.மு. கண்காணிக்கும். கருத்திட்ட பிரேரணையாளர் நிபந்தனைகளை மீறுவராயின் அங்கீகாரம் மீள் பெற்றுக் கொள்ளப்படும். சு.தா.ம. ஒழுங்குவிதிகள் பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.
• 1993.06.24 ஆம் திகதிய 772/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
• 1995.02.23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
• 1999.11.05 ஆம் திகதிய 1104/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
- 1993.06.24 ஆம் திகதிய 772/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி{தேசிய சுற்றாடல் (சட்டதிட்டங்ளை அங்கீகரிப்பதற்கான செயன்முறை)}ஒழுங்குவிதி 01 ற்கமைவாக திட்ட ஆதரவாளரிடமிருந்து நிர்வாக கட்டணங்களை வசூலிப்பதற்கான திட்டம் காணப்படுகின்றது.
-திட்டம் நிறைவடைய முன்னமே சுற்றாடல் அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றதாகி காலாவதியாகும் பட்சத்தில் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்துக்கான நீட்டிப்பு தேவையானது.
- திட்ட ஆதரவாளர் சரியான நேரத்தில் கோரிக்கை விடுக்காத பட்சத்தில் காலாவதியான சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை மீள செல்லுபடியானதாக்கும் செயன்முறை பின்பற்றப்படவேண்டும்.
- குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் / விரிவுபடுத்தப்படும் அல்லது கைவிடப்படும் சந்தர்ப்பத்தில், திட்ட ஆதரவாளர், திட்ட ஒப்புதல் நிறுவனத்திற்கு அறிவிக்கக்கடமைப்பட்டவராவார்.
கீழ் ஆ.சு.ப. / சு.தா.ம. தேவைப்படுகின்ற குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பகுதி I
1981 ஆம் ஆண்டின் 57 ஆம்“குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள்” மட்டுமே, ஆ.சு.ப./ சு.தா.ம. உட்படுத்தப்பட வேண்டி தேவைப்படுத்தப்படுகின்றன. தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் இலக்க கரையோர பாதுகாப்பு சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறான கரையோர வலையத்திற்கு வெளியே பூரணமாகவா அல்லது பகுதியாகவா கருத்திட்டங்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் அமையுமாகவிருந்தால்,
1. சிறிய நீர்ப்பாசன பணிகள் நீங்கலாக அனைத்து ஆற்றுப் பெருநில அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன கருத்திட்டங்கள் (நீர்ப்பாசன கட்டளை சட்டத்தின் அத்தியாயம் 453 இனால் வரையறுக்கப்பட்டவாறு).
2. 4 ஹெக்டயர்களுக்கும் அதிக பரப்புடைய ஈரநிலங்கள் மற்றும் காணிகள் மீட்பு.
3. அரிமர பிரித்தெடுப்புக்குரிய 5 ஹெக்டயர்களுக்கு மேற்பட்ட காணிகள்.
4. காடல்லாத பயன்பாட்டுக்காக 1 ஹெக்டயருக்கு அதிகமான பரப்பைக் கொண்ட வனப் பாதுகாப்பு
5. 50 ஹெக்டயருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை சுத்தப்படுத்தல்
6. சுரங்க வேலை மற்றும் கனிப்பொருள் அகழ்வு
• 25 மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்துடன் சம்பந்தப்படுகின்ற உள்நில ஆழ் சுரங்க வேலை மற்றும் கனிப்பொருள் அகழ்வு.
• ஒட்டுமொத்த 10 ஹெக்டயருக்கு மேற்பட்ட நிலப்பரப்பிற்குரிய உள்ளக மேற்பரப்பு சுரங்க வேலை.
• அனைத்து தொலைகடல் சுரங்க வேலை மற்றும் கனிப்பொருள் அகழ்வு
• எந்தவொரு வதிவிட அல்லது வர்த்தக பகுதியின் 1 கிலோ மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் பளிங்கு, சுண்ணாம்புக்கல், சிலிக்கா,குவாட்ஸ் மற்றும் அழங்கார கற்கள் போன்றவற்றின் மொத்த கற்சுரங்க தொழிற்பாடுகள் மற்றும் இயந்திரமயப்படுத்தப்பட்ட அகழ்வு.
7. போக்குவரத்து முறைமைகள்
• 10 கி.மீ. மேற்பட்ட நீளமுடைய தேசிய மற்றும் மாகாண மட்ட நெடுஞ்சாலைகளின் நிர்மாணம்
• புகையிரத தண்டவாள நிர்மாணம்
• விமான நிலையங்களின் நிர்மாணம்
• விமான ஓடு பாதைகளின் நிர்மாணம்
• 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் அதிகரித்த விமான நிலையங்கள் அல்லது விமான ஓடு பாதைகளின் விரிவாக்கம்
8. துறைமுகங்கள், இறங்குதுறைகள் அபிவிருத்தி
• துறைமுகங்களின் நிர்மாணம்
• இறங்குதுறைகளின் நிர்மாணம்
• வருடாந்தம் 50% அதிகரிப்பு அல்லது தலா வருடத்திற்கு கையாளப்படுகின்ற அளவை அதற்கு மேற்பட்டதாக அதிகரித்தலுடன் தொடர்பான துறைமுகை விரிவாக்கம்
9. வலு உற்பத்தி மற்றும் மின்இணைப்புக்கள்
• 50 மெகாவாட்களுக்கு அதிகமான நீர் மின்சார நிலையங்களின் நிர்மாணம்
• தனியான இடமொன்றில் 25 மெகாவோற்களை மிஞ்சிய மின்பிறப்பாக்கு திறன் கொண்ட அல்லது தற்போதுள்ள நிலையங்களில் 25 மெகாவோற்களுக்கு மேலதிகமான கொள்ளவை அதிகரிப்பதற்கான அனல்மின் நிலையங்களின் நிர்மாணம்
• அணுக்கருத்திறன் மின்நிலையத்தின் நிர்மாணம்.
• அனைத்து புதுப்பிக்கத்தக்க சக்தியை அடிப்டையாகக்கொண்ட 50 மெகாவோற்களுக்கு அதிகமான மின்பிறப்பாக்கி நிலையங்கள்.
10. மின்செலுத்துகைக் கம்பிகளை பொருத்துதல்
• 50 கிலோவோற்களுக்கு அதிகமான உவோற்றளவு மற்றும் 10 கிலோமீற்றர் நீளத்திற்கு அதிகமான மேலசெல்லும் மின்செலுத்துகைக் கம்பிகளின் பொருத்துகை.
11. வீடமைப்பும் கட்டிடங்களும்
• 10 ஹெக்டயர்களுக்கு மேற்பட்ட காணிப் பரப்பை உள்ளடக்கியதாக வீடமைப்பு, தொழில்துறை, வர்த்தக உட்கட்டமைப்பு போன்றவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைக்கப்பட்ட பன்முக அபிவிருத்தி செயற்பாடுகள்.
12. மீள்குடியேற்றம்
• அவசர நிலைமைகளின் கீழ் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றம் தவிர 100 குடும்பங்களுக்கு மேற்பட்ட தன்னிச்சையான மீள்குடியேற்றம்.
13. நீர் வழங்கல்
• தினமொன்றுக்கு ½ மில்லியன் கன மீற்றர்களுக்கு மேற்பட்ட கொள்ளவுடைய நிலக் கீழ் நீர் எடுத்தல் கருத்திட்டங்கள்.
• ½ மில்லியன் கன மீற்றர்களுக்கு மேற்பட்ட கொள்ளவுடைய நீர் சுத்திகரிப்பு தொகுதிகளின் நிர்மாணம்.
14. குழாய்வழி வசதிகள்
• 1 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட நீளத்தில் வாயு மற்றும் திரவ (நீர் நீங்கலாக) மாற்றல் குழாய்வழிகளை அமைத்தல்.
15. ஹோட்டல்கள்
• 99 அறைகளுக்கு மேற்பட்ட அல்லது 40 ஹெக்டயர்களுக்கு அதிகமான பரப்பில் பொழுதுபோக்கு வசதிகளை வழங்குவதற்கான ஹோட்டல்கள் அல்லது விடுமுறை விடுதிகள் அல்லது கருத்திட்டங்கள் என்பவற்றின் நிர்மாணம்.
16. மீன்பிடித்துறை
• 4 ஹெக்டயருக்கு அதிகமான பரப்பில் நீரக வாழ் உயிரின விருத்தி கருத்திட்டங்கள்.
• மீன்பிடித் துறைமுகங்களின் நிர்மாணம்
• 50% அதிகரிப்புக்கு உட்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுக விரிவாக்கல் கருத்திட்டங்கள் அல்லது ஆண்டொன்றுக்கு அதற்கு மேற்பட்ட மீன் கையாளுதல் கொள்ளளவு.
17. சகல சுரங்கத்தொழில்களும்
18. கழிவு அகற்றல்
• நாளொன்றுக்கு 100 தொன் கொள்ளளவு அதிகரிப்பை கொண்டுள்ள எந்தவொரு திண்ம கழிவு அகற்றல் வசதியொன்றை நிர்மாணித்தல்
• நஞ்சு அல்லது அபாயகரமான கழிவை கையாளத்தக்கதாக கழிவு கருத்திட்ட தொகுதியின் நிர்மாணம்.
19. 10 ஹெக்டயருக்கு அதிகமான அளவுடைய அனைத்து தொழில்துறை பேட்டைகள் மற்றும் பூங்காக்களை அபிவிருத்தி செய்தல்.
20. இரும்பு மற்றும் உருக்கு தொழில்துறைகள்
• இரும்பை மூலப் பொருளாக பயன்படுத்தி நாளொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட அளவில் இரும்பு மற்றும் உருக்கு பொருட்ளை உற்பத்திசெய்தல்.
• கழிவிரும்பு உலோகத்தாதுக்களை மூலப் பொருளாக பயன்படுத்தி நாளொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட அளவில் இரும்பு மற்றும் உருக்கு பொருட்ளை உற்பத்திசெய்தல்.
21. இரும்பல்லாத அடிப்படை உலோக தொழில்துறைகள்
• தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு அதிகமான உற்பத்தி கொள்திறனுடைய அலுமினியம் அல்லது செம்பு அல்லது ஈயத்தை உருக்கியெடுத்தல்.
22. அடிப்படை தொழில்துறை இரசாயனங்கள்
• தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட உற்பத்தி கொள்திறனுடைய நச்சு இரசாயன பொருட்ளை சூத்திரமாக்கல்.
• தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு மேற்பட்ட உற்பத்தி கொள்திறனுடைய நச்சு இரசாயன பொருட்ளை உற்பத்திசெய்தல்.
23. பூச்சிகொல்லிகள் மற்றும் உரம்
• தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய பூச்சிகொல்லிளை சூத்திரமாக்கல்.
• தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய பூச்சிகொல்லிளை உற்பத்திசெய்தல்.
24. பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய இரசாயனங்கள்
• மசகு எண்ணெயிலிருந்து பெற்றோல், எரிபொருள் எண்ணெய்கள், ஒளியெற்றல் எண்ணெய்கள், உராய்வு நீக்கி எண்ணெய் மற்றும் மசகு, வான் மற்றும் கடல்சார் எரிபொருள் மற்றும் திரவ பெற்றோலிய வாயு என்பவற்றை உண்டாக்கும் பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையங்கள்.
• எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து தினமொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய பெற்றோலிய இரசாயனங்ளை உற்பத்திசெய்தல் அல்லது இயற்கை வாயு பிரிப்பு.
25. டயர் மற்றும் டியுப் தொழில்துறைகள்
• இயற்கை மற்றும் செயற்கைச்சேர்மமான இறப்பரிலிருந்து தினமொன்றுக்கு 100 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய டயர் மற்றும் டியுப் பொருட்களின் உற்பத்தி.
26. சீனித் தொழிற்சாலைகள்
• தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய சுத்தப்படுத்திய/ விளக்கிய சீனி உற்பத்தி
27. சீமெந்து மற்றும் சுண்ணாம்பு
• கிளிங்கர் (clinker) தயரிப்பினூடாக சீமெந்து உற்பத்தி.
• தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கொள்ளளவுடைய சூளையில் சுண்ணாம்பு தயாரித்தல்
28. கடதாசி மற்றும் காகிதக் கூழ்
• தினமொன்றுக்கு 50 தொன் மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய கடதாசி அல்லது காகிதக் கூழ் உற்பத்தி.
29. நூற்றல், நெய்தல் மற்றும் புடைவை வகைகளின் நிறைவாக்கம்
• தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய நூற்றல், நெய்தல், சாயமிடல் மற்றும் அச்சிடல் தொழிற்பாடுகள் ஒன்றிணைந்த பருத்தி அல்லது செயற்கைச்சேர்மமான புடைவை ஆலைகள்.
30. தோல் பதனிடும் ஆலைகள் மற்றும் தோல் உற்பத்தி பொருட்களின் நிறைவாக்கம்
• தினமொன்றுக்கு 25 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய குரோமிய உலோகப்பூச்சு தோல் பதனிடும் ஆலைகள்.
• தினமொன்றுக்கு 50 தொன்னுக்கு மேற்பட்ட கூட்டு உற்பத்தி கொள்திறனுடைய தாவரச்சாய (பட்டை) தோல் பதனிடும் ஆலைகள்.
எவ்வாறாயினும், மேலே (19) இல் விபரிக்கப்பட்டவாறு தொழில்துறை பேட்டைகள் மற்றும் பூங்காக்களினுள்அமைகின்ற 20-30 வரையிலான குறிப்பிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சட்டத்தின் பகுதி IV C இன் ஏற்பாடுகளின் கீழ் அங்கீகாரம் தேவையற்றதாகும்.
31. 1969 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அணுசக்தி அதிகாரசபை சட்டத்தில் விபரிக்கப்பட்டவாறு கதிர் இயக்கப் பொருட்களின் உற்பத்தி, பாவனை அல்லது களஞ்சியப்படுத்துகையுடன் தொடர்புடைய அல்லது தேசிய பாதுகாப்பு காரணங்கள் நீங்கலாக, 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிபொருட்கள் சட்டத்தின் வரையறுக்கப்பட்ட வெடிபொருட்கள் சம்பந்தமான தொழில்துறைகள்.
பகுதி II
32. பகுதி I இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து கருத்திட்டங்கள் மற்றும் பொறுப்புகள் என்பவற்றின் அளவை பொருட்படுத்தாமலே மற்றும் அவை கரையோர வலயத்தில் அமைந்துள்ளதா அல்லது இல்லையா என்பதையும் பொருட்படுத்தாமலே, அது அட்டவணையின் பகுதி III இல் குறிப்பிட்ட பகுதியினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்திருந்தல்.
32. (அ).1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தினால் வரையறுக்கப்பட்டவாறான அனைத்து வர்த்தக கட்டிடங்களினதும் நிர்மாணம் மற்றும் வதிவிட வீட்டு கூறுகளின் நிர்மாணம் என்பவற்றின் அளவை பொருட்படுத்தாமலே மற்றும் அவை கரையோர வலயத்தில் அமைந்துள்ளதா அல்லது இல்லையா என்பதையும் பொருட்படுத்தாமலே, அது அட்டவணையின் பகுதி III இல் குறிப்பிட்ட பகுதியினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமைந்திருந்தல்.
33. இரும்பு மற்றும் உருக்கு
34. இரும்பல்லாத அடிப்படை உலோகம்
35. அடிப்படை தொழிலதுறை இரசாயனங்கள்
36. பூச்சிகொல்லிகள் மற்றும் உரங்கள்
37. செயற்கைச்சேர்மமான பிசின்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மனிதனால் தயரிக்கப்பட்ட நார் வகைகள்
38. ஏனைய இரசாயனப் பொருட்கள்
39. பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய-இரசாயனப் பொருட்கள்
40. டயர் மற்றும் டியுப்கள்
41. சீனித் தயாரிப்பும் சுத்தப்படுத்தலும்
42. மதுசாரவகைகள்
43. மோல்ட் வாசனைமது மற்றும் மோல்ட்
44. சீமெந்து, கிளின்கர் மற்றும் சுண்ணாம்புக்கல்
45. உலோகமல்லாத கனிப்பொருட்கள்
46. கடதாசி, கடதாசி கூழ் மற்றும் கடதாசி பலகைகள்
47. நூற்றல், நெய்தல் மற்றும் புடைவை வகைகளின் நிறைவாக்கம்
48. தோல் பதனிடும் ஆலைகள் மற்றும் தோல் உற்பத்தி பொருட்களின் நிறைவாக்கம்
49. கப்பல் கட்டுதல் மற்றும் திருத்த வேலைகள்
50. புகையிரதப் பாதை உபகரணங்கள்
51. மோட்டார் வாகனங்கள்
52. வானூர்தி
பகுதி III
1. 1988 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேசிய மரபுரிமை வனச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது பகுதியினுள் அல்லது எல்லைகளிலிருந்து 100 மீட்டர் தூரத்தினுள்;
வன கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 451). 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோர பாதுகாப்பு சட்டத்தின் வரையறுக்கப்பட்டவாறு கரையோர வலயத்தினுள் அத்தகைய பகுதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்.
2. பின்வரும் பகுதிகளில் அத்தகைய பகுதிகள் கரையோர வலயத்தினுள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்,
• மண் பாதுகாப்பு சட்டத்தின் (அத்தியாயம் 540) கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது அரிப்பு ஏற்படக்கூடிய பிரதேசம்.
• வெள்ள பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 449) கீழ் பிரகடனப்படுத்தப்பட்டவாறு வெள்ளம் ஏற்படும் ஏதாவது பிரதேசம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தியமைக்கப்பட்டவாறு 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது வெள்ள பாதுகாப்பு பிரதேசங்கள்.
• முடியரசு காணி கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 454) கீழ் பிரகடனப்படுத்தப்பட்டவாறு பொது கால்வாய்களின் கரையோரம் குளத்தின் 60 மீற்றர் தூரத்தில் இருந்தும் மற்றும் அதன் செல்வழியின் ஏதாவது நோக்கு இடத்திலிருந்து 25 மீற்றர்களுக்கு கூடுதலான அகலத்தை கொண்டிருத்தல்.
• ஒரு நீர்த்தேக்கத்தின் முழு வழங்கல் மட்டத்திற்க அப்பால் உள்ளது ஏதாவது ஒதுக்கு இடம்.
• தொல்பொருள் கட்டளை சட்டத்தின் (அத்தியாயம் 188) இன் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட ஏதாவது தொல்பொருளியல் சார் ஒதுக்கு, பண்டைய அல்லது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்.
• தாவரவியல் பூங்கா கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 446) பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது இடம்.
• தாவர, விலங்கின பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 469) எல்லைகளிலிருந்து 100 மீற்றர் இடப்பரப்பினுள் அல்லது அப்பிரதேசத்தினுள் ஏதாவது பகுதி சரணாலயம் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டது.
• உயர் வெள்ள மட்ட சமஉயரக்கோட்டிலிருந்து 100 மீட்டர் இடப்பரப்பினுள் அல்லது அப்பிரதேசத்தினுள்ள பொது ஏரி/ வாவியாக முடியரசு காணி கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 454) வரையறுக்கப்பட்டவாறு மற்றும் சொல்லப்பட்ட கட்டளைச் சட்டத்தின் 71 ஆம் பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டது.
குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள் பின்வரும் வர்த்தமானி அறிவித்தல்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.
1993 ஆம் ஆண்டின் யூன் 24 ஆம் திகதிய 772/22
1999 ஆம் ஆண்டின் நவம்பர் 5 ஆம் திகதிய 1104/22
1999 ஆம் ஆண்டின் நவம்பர் 29 ஆம் திகதிய 1108/1
ம.சு.அ. உறுதிப்படுத்திய “குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்கள்” எனும் பட்டியலினுள் கருத்திட்ட பிரேரணைகள் வருகின்றதா அல்லது 1993.06.24 ஆம் திகதிய 772/22, 1995.02.23 ஆம் திகதிய 859/14, 1999.11.06 ஆம் திகதிய 1104/22, மற்றும் 1999.11.29 ஆம் திகதிய 1108/1 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுடன் தொடர்புடையதா என்பதை கருத்திட்டத்தை முன்மொழிபவர் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ம.சு.அ. மேற்படி தீர்மானத்திற்காக ம.சு.அதிகாரசபைக்கு கருத்திட்டத்தின் அத்தியாவசிய தகவல்கள் சமர்ப்பிப்பதற்காக அடிப்படை தகவல் வினாக்கொத்தொன்று கருத்திட்ட முன்மொழிவாளருக்கு வழங்கப்படும் (ம.சு.அதிகாரசபை தலைமை அலுவலகத்தின் சு.தா.ம. அலகு அல்லது ம.சு.அ. மாகாண/ மாவட்ட அலுவலகங்களில் இருந்து அடிப்படை தகவல் வினாக்கொத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதனை ம.சு.அ. இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.) கருத்திட்டமானது சு.தா.ம. / ஆ.சு.ப. ஆகியவற்றை தேவைப்படுத்துகின்ற குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டமொன்றாக இருப்பின், ம.சு.அதிகாரசபையானது சு.தா.ம./ ஆ.சு.ப. செயற்பாட்டை நிருவகிப்பதற்கான பொருத்தமான கருத்திட்ட அங்கீகார முகவராண்மையை தீர்மானிக்கும். சு.தா.ம/ அ.சு.ப. ஒன்றினை தயாரிப்பதில் கருத்திட்ட அங்கீகார முகவராண்மை கருத்திட்ட முன்மொழிவாளரை வழிப்படுத்தும்.
கருத்திட்டமானது கரையோர வலயத்தினுள் அமைவதானால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை கருத்திட்ட முன்மொழிவாளர் தொடர்பு கொள்ளல் வேண்டும்.
கருத்திட்டமானது தேசிய ஒதுக்குகள் ஒன்று காணப்படுகின்ற எல்லையினது ஒரு மைல் பரப்பினுள் காணப்படுமாயின், கருத்திட்ட முன்மொழிவாளர் வனசீவராசிகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




