SinhalaSriLankaEnglish (UK)

கருத்திட்ட பிரேரணையாளர் சு.தா.ம. செயன்முறை பற்றிய மேலதிக விபரங்களை எங்கு பெற்றுக் கொள்ளலாம்?

பத்தரமுல்லை, இல. 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் முகாமைத்துவ மதிப்பீட்டு பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.

தொலைபேசி : 011-2872419, 011-2876643
தொலைநகல் : 011-2872296

மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பின்வரும் ஆவணங்கள் பயனுள்ளவையாகும்.

  • சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல் – இல.1 கருத்திட்ட அங்கீகார முகவராண்மைக்கான ஒரு பொது வழிகாட்டல்

  • சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல் – இல.2 சுற்றாடல் சார் நோக்கெல்லையை நடத்துவதற்கான ஒரு பொது வழிகாட்டல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலுள்ள நூலகங்கள் சு.தா.ம. பற்றிய பின்னணியை கொண்ட பல நல்ல திரட்டல்களை கொண்டுள்ளன. உசாவுகைக்காக கடந்த கால சு.தா.ம. அறிக்கைகளின் பிரதிகளை ம.சு.அ. சபையின் நூலகம் கொண்டுள்ளது.

  1. புதிய கருத்திட்டம்/ தொழில்துறையை ஆரம்பிப்பதற்கான சுற்றாடல் தேவைப்பாடுகள்

  2. கருத்திட்டம் / தொழில்துறை ஒன்றின் தொழிற்பாட்டுக்கான சுற்றாடல் தேவைப்பாடுகள்

  3. ஆபத்துமிக்க பொருட்களை இறக்குமதி/ ஏற்றுமதி செய்வதற்கான சுற்றாடல் தேவைப்பாடுகள்

அங்கீகாரத்தை பெற முன்னர் கருத்திட்ட பிரேரணையாளர் என்ன செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்?

இடத்தில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாத செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ள முடியும். கருத்திட்ட பிரேரணையாளர் மக்களுக்கும் கருத்திட்டத்திலும் அதன் விளைவுகளிலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கும் கருத்திட்டம் பற்றி விளக்கமளிக்க முடியும். உண்மையில், கருத்திட்ட பிரேரணையாளர்கள் இந்த நோக்கத்திற்காக தொழில்சார் மக்கள் தொடர்பு உசாவலர்களை ஈடுபடுத்தும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.

காணி நில அளவை மற்றும் களப் பரிசோதனை போன்ற அத்தகைய செயற்பாடுகளையும் நீங்கள் மேற்கொள்ள முடியும்.

கருத்திட்ட பிரேரணையாளர் தீர்மானத்திற்கு இணங்காவிடின்?

சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு செய்வதற்கு அவாகளுக்கு உரிமை உண்டு. செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும்.

சு.தா.ம. அனுமதியை பெற்றதன் பின்னரும் வேறு ஏதாவது அனுமதிகள் கருத்திட்ட பிரேரணையாளருக்கு அவசியமானதா?

ஆம்.
உத்தேச இடத்தின் மீது உள்ளூர் மட்டத்தில் நியாயாதிக்கத்தை கொண்டுள்ள தொடர்புடைய அரசாங்க நிறுவனத்திடமிருந்தும் கருத்திட்டத்திற்காக நீங்கள் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவேண்டி இருக்கும். அங்கு ஏனைய சில அனுமதித் தேவைப்பாடுகளும் காணப்படலாம். சு.தா.ம. அங்கீகாரமானது சுற்றாடல் அனுமதியை மட்டுமே வழங்குகின்றது என்பதை நினைவிற் கொள்க. சு.தா.ம. செயன்முறைக்கு செல்ல முன்னர் கருத்திட்ட பிரேரணையாளர் உரிய அதிகாரிகளிடமிருந்து காணி அனுமதிகள் போன்ற ஏனைய அனுமதிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

அங்கீகாரம் எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும்?

பொதுவாக அங்கீகாரம் 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். கருத்திட்ட பிரேரணையாளர் தீர்மானத்தின் 3 வருடங்களுக்குள் பணியை ஆரம்பிக்காவிடின் கருத்திட்ட அங்கீகார முகவராண்மையிடமிருந்து அங்கீகாரத்தை புதுப்பித்தல் அவசியமானதாகும். செல்லுபடியாகும் காலம் வழமையாக அங்கீகார கடிதத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றது.

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்