தேசிய சுற்றாடல் சட்டத்தின் மீறல்களான சுற்றாடல் மாசுறுதல்/ சுற்றாடல் சார் பிரச்சினைகளின் நிமித்தம் அதிக ஒலி, அதிர்வு ஏற்படுத்துதல், கழிவு நீர் வெளியேற்றம், வளி மாசுறுதல், திண்ம மற்றும் அபாயகரமான கழிவை உருவாக்குதல் போன்றவை பற்றிய பொதுமக்கள் முறைப்பாடுகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அனுப்பி வைக்கப்பட முடியும்.
முதலீட்டு சபை அங்கீகாரித்த தொழில்துறை செயற்பாடுகளினால் சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படுகின்ற சுற்றாடல் மாசுறுதல் தொடர்பான தமது முறைப்பாடுகளை பொதுமக்கள் சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு அலகுக்கு அனுப்பி வைக்கலாம். ம.சு.அ. சபையின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற முறைப்பாடுகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் முதலீட்டு சபை என்பவற்றின் உத்தயோகத்தர்களின் மூலம் கூட்டாக பரிசீலிக்கப்படும்.
முதலீட்டு சபை அங்கீகரித்த தொழில்துறைகள் தொடர்பான முறைப்பாடுகள் பின்வரும் விலாசத்திற்கு அனுப்பப்பட முடியும்.
| பணிப்பாளர் (சு.மா.க) | பணிப்பாளர் (சுற்றாடல் திணைக்களம்), | |
சு.மா.க. பிரிவு, |
அல்லது | முதலீட்டுச் சபை, 6ஆம் மாடி, மேற்கு கோபுரம், உலக வர்த்தக மையம், கொழும்பு 01. |
| தொ.பே.: 011 2873452 | தொ.பே.: 011 2543863 |
அநேகமாக நாடுகளைப் போல இலங்கையும் தொழில்துறை மாசுறுதல் கட்டுப்பாடு தொடர்பில் மரபு ரீதியான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அணுகுமுறையொன்றையே (CAC) பின்பற்றுகிறது. மாசுறுதலை கட்டுப்படுத்தப்படுகின்ற பிரதான கருவியாக இருப்பது சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமாகும். கழிவு நீர் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றுவதற்கான நியமங்கள் ம.சு.அ. இனால் குறித்துரைக்கப்பட்டுள்ளது. தொழிற்பாட்டுக்காக சு.பா.அ. பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய தொழில்துறைகளின் பட்டியலும் குறித்துரைக்கப்பட்டிருக்கின்றன.
சு.பா.அ. திட்டத்தின் ஊடாக கழிவுநீர் அகற்றலின் கட்டுப்பாடு இருக்கின்ற போதிலும் இலங்கையின் அநேகமான பிராந்தியங்களில் பல நீர் நிலைகளின் தரம் தொடர்ந்தும் மோசமாகி வருகின்றது. இதற்கான காரணம் குறித்துரைக்கப்பட்டுள்ள நியமங்கள் கவனக் குவிப்பு அடிப்படையில் அமைந்திருப்பதோடு, சுற்றாடலுக்கு விடப்படுகின்ற மாசுறுதல் பொருள் அளவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.
சுத்தமான உற்பத்தி செயன்முறை (CP) ஊடாக தொழில்துறைகள் வெளியிடப்படுகின்ற கழிவுகளின் அளவை குறைக்க முடியும். அதனூடாக இறுதி தொழிற்படல் சுத்திகரிப்பு செலவுகளை குறைக்கலாம். சுத்தமான உற்பத்தி உத்திகளை பின்பற்றுவதானது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகும். ஏனெனில் தொழில்துறையானது, அதன் இலாபங்களை அதிகரித்து கொள்கின்ற அதேவேளை ம.சு.அ. சபையின் கட்டுப்பாட்டு தேவைப்பாடுகளை நிறைவேற்றவும் முடியும்.
துரதிஷ்டவசமாக, இலங்கையில் சுத்தமான உற்பத்திக் கோட்பாடு அநேகமான தொழில்துறைகளை இதுவரை சென்றடையவில்லை. ஆதலால் மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது தொழில்துறைகள் தமது செயன்முறையில் சுத்தமான உற்பத்தி கோட்பாட்டை உள்ளடக்குவதோடு விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
செலவு வினைத்திறன்மிக்க முறையில் கழிவு பிறப்பாக்கத்தை குறைப்பதற்கு சுத்தமான உற்பத்தி உத்திகள் தொழிலதிபர்களுக்கு உதவுகின்றன. சுத்தமான உற்பத்தி உத்திகளை பின்பற்றவதன் மூலம் சுற்றாடலுக்கான மாசுறுதல் அளவு குறைக்கப்படும் என்பது இதன் மற்றுமொரு பெறுமானமாகும். ஆதலால் சுத்தமான உற்பத்தியை கடைப்பிடிப்பதானது, மாசுறுதல் அளவை குறைப்பதற்கு தொழிலதிபர்களுக்கு நன்மை பயக்கும் ஓர் விடயமாகும்.
கோட்பாடு
தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய சுற்றாடலுக்கு வெளியிடப்படும் தொழில்துறை சார் கழிவுகளை கட்டுப்படுத்துவதற்கான பிரதான சட்டரீதியான கருவியாக இருப்பது தற்போதுள்ள சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமாகும். அது கட்டளை மற்றும் கட்டுப்பாடு முறையொன்றாக அமுல்படுத்தப்படுகின்றது. மறுபுறத்தில் சுற்றாடல் தாக்க மதிப்பீடானது (சு.தா.ம.) அபிவிருத்தி கருத்திட்டங்களிலிருந்து இயற்கை சுற்றாடலை பாதுகாத்து, முகாமை செய்வதற்கான சட்டமுறையான கருவியாகும். இரண்டு சட்ட வினைப்படுத்துகை நடைமுறைகளுக்கும் அப்பால் ம.சு.அ. சபையானது நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் கல்வி, மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றது.
எவ்வாறாயிலுனம் மேற்படி மூன்று முறைமைகளும், சுற்றாடலுக்கான மாசுறுதல் பதார்த்தங்களை கட்டுப்படுத்துவதில் ம.சு.அ. இலக்குகளை அடைவதற்கு போதியதாக இல்லை. களத்தில் மேற்படி முறைமையை அமுல்படுத்துவதிலுள்ள ம.சு.அ. நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. ஆதலால் பல்வேறுபட்ட செயற்பாடுகளிலிருந்து மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்ட கருவிகளுடன் ஏனைய நிருவாக சார் கருவிகளையும் பிரயோகிக்க வேண்டிய முக்கியத்துவமும் தேவைப்பாடும் உள்ளது.
மறுபுறத்தில் ம.சு.அ. சபையானது சுற்றாடலுக்கு மாசுப் பொருட்களை வெளியேற்றுகின்ற அல்லது அகற்றுகின்ற செயற்பாடுகளுக்கிடையே அமுல்படுத்துவதற்கான சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாடு, மற்றும் முகாமைத்துவத்திற்கான உபாயமுறையொன்றாக தேசிய பசுமை விருது வழங்கல் திட்டத்தை அடையாளங் கண்டுள்ளது. பசுமை விருது வழங்கல் திட்டமானது சுற்றாடலை பசுமையாக்குதல், மாசுறுதலை தவிர்த்தலில் சிறந்த நடைமுறைகளை பிரயோகிப்பதற்கு பல்வேறு துறைகளுக்குமிடையே போட்டித்தன்மை சார் மன்றமொன்றை உருவாக்கின்றது. அதனூடாக இலங்கையில் சுற்றாடலின் தரத்தை மேம்படுத்துகின்றது.
இந்த விருதுகள் தொழில்துறைகளின், அவற்றின் தொழில்துறை செயன்முறை, சுற்றாடலை பசுமையாகவும் சுத்தமாகவும் பேணுவதற்கான அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு, தொடர்பாடல் என்பவற்றுக்கான முயற்சிகளுக்கான அங்கீகாரமொன்றாக கருதப்படுகின்றன. இது வெற்றிபெற்றோர்களினால் கையாளப்பட்ட சிறந்த தெரிவுகளை, கண்டுபிடித்து, கலந்துரையாடி பரப்புவதற்கான அரங்கமொன்றாக இருக்கின்ற அதேவேளை மொத்தத்தில் குறித்த தொழில்துறை செயற்பாட்டிலும் செயன்முறைகளிலும் அவர்களது முயற்சிகளை பாராட்டுவதாகவும் அமைகின்றது. இது தொழில் முயற்சியாளர்களும். சேவை வழங்குநர்களும் சுற்றாடலை பசுமையாகவும் சுத்தமாகவும் வைப்பதற்கு ஊக்குவிப்பதற்கான மிகச் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.
இலக்கும் நோக்கங்களும்
தொழில்துறைசார் விருது வழங்கல் திட்டமானது அதன் முன்னேற்றத்தில் பின்வரும் இலக்குகளையும் நோக்கங்களையும் மையப்படுத்தியதாக அமைகின்றது.
இலங்கையில் உயர் தரத்திலான சுற்றாடல் நடைமுறைகளைக் கொண்ட தொழில்துறை சார்/ நிறுவனங்களுக்கு அரசாங்க அங்கீகாரத்தை வழங்குதல்.
நியமங்கள், ஒழுங்குவிதிகளுடன் இணக்கப்பாட்டுக்கான மாசுறுதல் கட்டுப்பாடு, சுற்றாடல் முகாமைத்துவ முறைமை அடிப்படையிலான சுய கண்காணிப்பு ஊக்குவித்தலும், சுற்றாடலின் பேணத்தகு பேணுதலும்.
திருத்தச் சட்டங்களினால் திருத்தப்பட்டவாறு (1980 இன் 43 ஆம் இலக்கம், 1983 இன் 21 ஆம் இலக்கம், 1992 இன் 49 ஆம் இலக்கம், 2002 இன் 9 ஆம் இலக்கம்) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 17(2) இன் கீழ், மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் இலங்கை முதலீட்டுச் சபையும் 1996 இல் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன.
இந்த உடன்படிக்கையின் கீழ் முதலீட்டுச் சபை அங்கீகரித்த கருத்திட்டங்களிலிருந்து வெளிவருகின்ற தொழில்துறை சார் மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு ம.சு.அ. முதலீட்டு சபையுடன் ஒர் ஒருங்கிணைப்பை செய்கின்றது.
இதன் பிரகாரம், சுற்றாடல் மாசுக் கட்டுப்பட்டு பிரிவினால் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன;
இணக்கப்பாட்டு கண்காண
குறித்துரைக்கப்பட்ட சுற்றாடல் நியமங்களை நிறைவு செய்வதற்கான கழிவு நீர் வெளியேற்றுகை, ஒலி வெளியேற்றங்கள் தொடர்பில் மாசுறுவதை கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கைகளை விண்ணப்பதாரர் மேற்கொள்ள வேண்டும். இந்த மூன்று வித அனைத்து சுற்றாடல் சார் ஊடகங்களிலும் (வளி, நீர், நிலம்) தாக்கங்களை குறைப்பதற்கு ஏற்றவகையில் கழிவு நீக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவது விண்ணப்பதாரிகளின் பொறுப்பாக இருப்பதோடு, இதன் மூலம் சிறந்த நடைமுறைச் சாத்தியமான சுற்றாடல் தெரிவு (Best Practicable Environmental Option - BPEO) மற்றும் காணப்படுகின்ற சிறந்த தொழில்நுட்பம் (Best Available Technology - BAT) என்பவற்றின் ஊடாக முழுதுமளாவிய, உச்சமட்ட சுற்றாடல் சார் தீர்வை அடைந்து கொள்வதாகும்.
இந்த நோக்கத்திற்காக சு.பா.அனுமதிபத்திரம் தேவைப்படும் விண்ணப்பதாரியொருவர் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடமொன்றிலிருந்து அத்தகைய கழிவுகளையும் வெளியேற்றங்களையும் அளவிடுவதன் மூலம் அத்தகைய தொழில்துறை செயற்பாட்டின் காரணமாக நிகழ்கின்ற மாசுறுதல் மட்டங்களை மதிப்பிட வேண்டிய தேவையை கொண்டுள்ளார்.
மாசுறுதல் மட்டங்களை ம.சு.அ. சபையினால் குறித்துரைக்கப்பட்ட நியமங்களுக்கு இயைந்து செல்வதை நிரூபிப்பதற்காக தொழிலதிபர்களினால் மேற்கொள்ளப்பட்ட சில சுற்றாடல் சார் அளவீடுகள் அல்லது மதிப்பீட்டின் அளவீடு, கழிவுகள், அல்லது வெளியேற்ற மட்டங்கள் குறித்துரைக்கப்பட்ட நியமங்களை விஞ்சினால், விண்ணப்பதாரி பொருத்தமான மாசுறுதல் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுற்றாடல் மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல், ஆலோசனை/ உசாவுகையை பெற்றுக் கொள்வதற்கு வசதியளிக்கும் பொருட்டு, ம.சு. அதிகாரசபையினால் விசேட நிபுணர்கள்/ ஆலோசகர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ம.சு.அதிகாரசபையின் நியமங்களுக்கு இயைவான தமது கழிவு அல்லது வாயு மாதிரிகளை எங்கு பரிசோதிக்க முடியும் என்பதை தொழிலதிபர்கள் அறிந்து கொள்வதற்காக ஆய்வுகூடங்களின் பட்டியலொன்றும் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
சில ஆலோசகர்கள்/ விசேட நிபுணர்களினால் வழங்கப்படுகின்ற உசாவுகையில் சில தொழிலதிபர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனா என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய சிலர் சுற்றாடல் அளவீடுகளின் சரியான, தரமான அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சினைகளை தொழிலதிபர்கள் வெற்றி கொள்வதற்கு ஏற்றதாகவும் தொழில்துறை சமூகத்திற்கு சிறந்த சேவைகளை வழங்குமுகமாக ம.சு. அதிகாரசபையானது தற்போதுள்ள உசாவுணர், மற்றும் ஆய்வுகூடங்களின் பட்டியல், அவற்றின் செயலாற்றுகை காலத்திற்கு காலம் மதிப்பிடுவதற்காக அவற்றை மீளாய்வு செய்து இற்றைப்படுத்துகின்றது.
எவராவது விசேட நிபுணர் அல்லது ஆய்வுகூட ம.சு.அ. தம்மை பதிவு செய்து கொள்ள விரும்பினால் அவர்கள் பின்வனவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.
வியாபாரப் பதிவு
கம்பனி சுயவிபரம்
வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட 3 கருத்திட்டங்களிலிருந்து வாடிக்கையாளர் திருப்தி கடிதங்கள்
உசாவுநர்/ விசேட நிபுணர்/ ஆய்வுகூடமொன்றின் பதிவுக் கட்டணம் ரூபா. 7,500/= ஆகும் என்பதுடன் வருடாந்த சந்தா ரூபா. 10,000/= ஆகும்.
தொழில்துறை பேட்டைகள், ஏற்றுமதி பதனிடல் வலயங்களுக்கு வெளியே உயர் மற்றும் நடுத்தர மாசுறுதல் தொழில்துறைகளின் அமைவிடம் குறித்து தீர்மானிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றாடல் மாசு கட்டுப்பாட்டு அலகின் மிக முக்கியமாதொரு தீர்மானம் எடுக்கும் குழுவாகும். இக்குழு முதலீட்டுச் சபை. உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, தொழில்துறை அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை என்பவற்றின் உறுப்பினர்களைக் கொண்டமைந்துள்ளது.
இந்தக் குழுவின் பிரதான நோக்கம் யாதெனில் பாரிய கொழும்பு பகுதியில் நீர்த்தேவையின் 75% மேற்பட்ட பகுதியை வழங்கல் செய்வதற்கு அம்பத்தலையிலிருந்து அடிப்படை நீரை வழங்குகின்ற களனி கங்கைக்கு பிரதானமாக தொழில்துறை கழிவுகளினால் ஏற்படுகின்ற நீர் மாசுறுதலை குறைப்பதாகும். ஆனால் தற்போது குழு ஏனைய சில உள்ளூர் நீர் நிலைகளுடன் உயர் மற்றும் நடுத்தர தொழில்துறைகளையும் கருத்திற் கொள்கின்றது.
களனி ஆற்றின் அருகில் தொழில்துறைகளின் இடவமைப்புக்கான அமைச்சரவை விஞ்ஞாபன வழிகாட்டல் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
சூழல் நட்புடைய கால்நடை பண்ணை தொடர்பான ஆலோசனைக் குழு
கால்நடை பண்ணைகளினால் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள் தினமும் அதிகரித்து வருகின்றன. இவற்றினால் குடிநீர் மூலங்களில் விசேடமாக அசுத்தப்படுத்தும் துர்நாற்றத்தையும் கழிவுகளையும் வெளியிடுவதாக அவை குற்றம் சுமத்தப்படுகின்றன.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஒரு உயர் சபை என்ற வகையில் கால்நடை கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு என்பவற்றுடன் இணைந்து சூழல் தொடர்பான விடயங்கள் குறித்த கொள்கை சிபாரிசுகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கி உதவியளிக்கும் நோக்கத்துடன் ஆலோசனை குழுவொன்றை தாபித்துள்ளது.
இலங்கையில் சுற்றாடல் நட்புறவான கால்நடை வளர்ப்பு தொழில்துறைகளின் அணுகுமுறை குறித்த கருத்தை பரப்புவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்போர் கூடத்தில் 2010 நவம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று விழிப்புணர்வு செயலமர்வொன்றும் நடாத்தப்பட்டது.
பிரதான குறிக்கோள்கள்:
குறிப்பிட்ட சுற்றாடல், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார அம்சங்களின் சாத்தியமான உயர் நியமங்களை பேணுவதற்கு கால்நடை வளர்ப்பு தொழில்துறை, சுற்றாடல் மற்றும் சுகாதாரத் துறை என்பன ஒன்றுடன் ஒன்று இணைத்து செயற்படுதை உறுதிப்படுத்தல்.
மாவட்ட குழுக்களை அமைத்து கால்நடை பண்ணை துறையை அபிவிருத்தி செய்வதில் அனைத்து தரப்பினருக்குமிடையே முறையான ஒருங்கிணைப்பொன்றை விருத்தி செய்தல். அத்தகைய ஒரு குழு மேல் மாகாணத்திற்காக தாபிக்கப்பட்டிருக்கின்றது.
கால்நடை வளர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொறுப்பு வாய்ந்த முகவராண்மை மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான வழிகாட்டல் புத்தகமொன்றை தயாரித்து, தொழில்நுட்ப வழிகாட்டல்களை தரப்படுத்துதல். வழிகாட்டல் புத்தகத்திற்கான கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெறுவதோடு, புத்தகம் விரைவில் வெளியிடப்படும்
கால்நடை துறை தொடர்பாக தொழில்நுட்ப உத்தயோகத்தர்கள்/ சுற்றாடல் உத்தயோகத்தர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்
பல்வேறுபட்ட காரணங்களினால், மாசுறுதல் கட்டுப்பாடானது பெரும்பாலான நடுத்தர மற்றும் சிறிய அளவு தொழில்துறைகளினால் சிறப்பாக முகாமை செய்யப்படவில்லை என்பதை ம.சு.அ. எடுத்துக் காட்டுகிறது. மாசுறுதல் கட்டுப்பாட்டில் அதனுடன் தொடர்பான செலவு முக்கிய காரணமாக இனங்காணப்பட்டுள்ளது. பிரதானமாக நிபுணத்துவம் மற்றும் நிர்மாண செலவாகும்.
இவ்விடயத்தை கவனத்திற்கொண்டு இணக்கப்பாட்டு ஒத்துழைப்பு நிலையத்தை தாபிப்பதை அதற்கு தீர்வொன்றாக அமையும் என சுற்றாடல் மாசு கட்டுப்பாட்டுப் (சு.மா.க.) பிரிவு கருதுகின்றது.
ம.சு.அதிகாரபையிலுள்ள இணக்கப்பாட்டு ஒத்துழைப்பு நிலையங்களை முன்னெடுப்பதற்கு, தொழில்நுட்ப முகவராண்மைகளிடமிருந்து தொழில்நுட்ப உதவி பெறப்பட வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாக NERD, ITI, IDB, NCPC மற்றும் சுவிட் ஏசியா நிகழ்ச்சித்திட்டம் என்பவற்றுடன் சு.மா.க. பிரிவு பல தொடர் கூட்டங்களை நடாத்தியது. இந்த நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்துறைகளுக்கு குறைந்த செலவுள்ள உத்திகளின் செயல் திட்டங்களை ம.சு.அ. அறிமுகப்படுத்துகிறது.
தற்போது மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் தமது சேவை நிறுவனங்களால் இந்த முறைமையை கையாண்டு வருவதோடு, அவற்றில் பல வளர்ந்துவரும் கட்டத்தில் உள்ளன.
தொழில்துறைகளின் தேவையான தகவல்களை இலகுவாக பெறுவதற்கு உதவியளிக்கும் முகமாக வலைமைப்பொன்றை விருத்தி செய்தை சு.மா.க பிரிவு கருத்திற்கொன்டுள்ளது.
சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்துரைக்கப்படாத செயற்பாடுகளுக்காக ம.சு.அ (CEA) இனால் பின்பற்றப்பட்ட மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றுதான் இட பொருத்தப்பாட்டை மதிப்பிடுதலாகும். பொது கழிவு நீர் சுத்திகரிப்பு முறைமைகள் போன்ற உரிய சுற்றாடல் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்ட தேசிய சுற்றாடல் சட்டத்தின் பகுதி IV C இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பேட்டைகளுக்கு வெளியே அமைக்கப்படவுள்ள அனைத்து உத்தேச தொழில்துறை செயற்பாடுகளும் அவற்றின் தொழிற்பாட்டு கட்டத்திற்கு முன்னர் சுற்றாடல் திறன் சார்ந்த மாசுறுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு முகாமை செய்வதற்கு தேவைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதலால் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்துறைகள் (SMIS) சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு உட்படாத அனைத்து சாத்தியமான எதிர்கால தொழில்துறை இடங்களும் அல்லது புதிய தொழில்துறை செயற்பாடுகளை கொண்ட தாபனங்கள் உத்தேச இடத்துக்காக ம.சு.அ (CEA) சபையிடமிருந்து சுற்றாடல் சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகின்றன.
பொருத்தப்பாட்டை கவனத்திற் கொள்ளும்போது, சுற்றுப் புறச் சூழல், காணிப் பயன்பாடு தொடர்பில் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களை வலயமிடல் திட்டங்கள் குறித்த அதன் இணக்கப்பாடு, இடைத்தாங்கலுக்காக காணப்படுகின்ற காணித் தேவை, மேலதிக மாசுறுதல் சுமையை பெறுவதற்கும், கழிவுளை அகற்றுவதற்கு தேவைப்பாடும் இடத்தின் கொள்ளளவு போன்ற நியதிகளின் அடிப்படையில் உத்தேச இடங்கள் மதிப்பிடப்படுகின்றன.
சுற்றாடல் சிபாரிசு நடைமுறைகளின் பிரதான நோக்கம் யாதெனில் உத்தேச தொழில்துறை செயற்பாட்டிலிருந்து எழத்தக்கதான, எதிர்பார்க்கத்தக்க சுற்றாடல் மாசுறுதலை முன்கூட்டியே இல்லாமல் செய்வதற்கு அல்லது குறைப்பதற்கான போதிய தணிப்பு நடவடிக்கை எடுப்பதாகும்.
சுற்றாடலுக்கு கழிவுகளை/ மேலதிக பொருட்கள் விடுவிக்கக்கூடிய, படிவுசெய்யக்கூடிய, அல்லது சுற்றாடலுக்கு இரைச்சல் அல்லது வாயுக்களை வெளிப்படுத்தக்கூடிய தற்போதுள்ள தொழில்துறைகளிடமிருந்து மாசுறுதலை குறைப்பதற்கு ம.சு.அ. (CEA) இனால் குறித்துரைக்கப்பட்ட நியமங்களுக்கு இணைந்து செல்கின்ற தொழில்துறைகளுக்கு சு.பா. அனுமதிப்பத்திரமானது வழங்கப்படுகின்றது. ஆனால், ஆரம்பத்தில் தணிப்பு நடவடிக்கைகளை ஒன்றிணைக்காது ஆபத்தான அமைப்பில் தமது தொழில்துறைகளை அமைத்து நியமங்களுடன் இணைந்து செல்வதற்கு சிரமமான சில தொழில்துறைகள் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
இந்த பிரச்சினையை வெற்றி கொள்வதற்கும் ஆரம்ப கட்டத்திலுள்ள சாத்தியமான மாசுறுதலை கட்டுப்படுத்துவதற்கும் ம.சு.அதிகாரசபையினால் சுற்றாடல் சிபாரிசுகள் வழங்கப்படுகின்றன. இது ம.சு.அதிகாரசபைக்கும் பல்வேறு துறைகளிலுமுள்ள தொழிலதிபர்களுக்கும் நன்மை பயக்கத்தக்கதாகும். ம.சு.அ. ஆரம்ப கட்டத்தில் சாத்தியான மாசுறுதலை கட்டுப்படுத்துவதன் ஊடாக நன்மை அடைவதோடு தொழில்துறைகள் சுற்றாடல் சார் சிபாரிசுகளில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அவர்களும் அதன் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
சுற்றாடல் சிபாரிசை பெறுவதற்கான நடைமுறைகள்
ம.சு.அ. தலைமை அலுவலகம் மற்றும் ம.சு.அ. மாகாண/ மாவட்ட அலுவலகங்களிலிருந்துவிண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளுதல்.
தேவையான, பொருத்தமான ஆவணங்களுடன் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ம.சு.அ. சபைக்கு சமர்ப்பித்தல் (இடத்தின் நிலஅளவை வரைபடம், ஏதாவது கட்டிட வரைபடம், அருகிலுள்ள நகரத்திலிருந்து உத்தேச இடத்தின் பாதைவழி அமைப்பு)
விண்ணப்பம் உரிய முறையில் நிரப்பப்பட்டு பொருத்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் பரிசோதனை கட்டணத்தை செலுத்தும் படி விண்ணப்பதாரருக்கு ஒரு எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்படும் (தற்போது ஆகக் குறைந்த தொகை ரூபா. 3,360/- ஆகக் கூடிய தொகை ரூபா. 11,200/- (அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க வரிகளுடன்)
பரிசோதனை கட்டணத்தை செலுத்தியதன் பின்னர், ம.சு.அ. அலுவலர்கள் குழுவொன்றினால் ஒரு களப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இடம் சிபாரிசு செய்யப்பட முடியுமாயின் சுற்றாடல் சிபாரிசை வழங்குவதற்கு, சாத்தியமான சுற்றாடல் மாசுறுதலை தணிப்பதற்கான நிபந்தனைகளுடன் மாநகர ஆணையாளர்/ தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபையின் தலைவருக்கு சிபாரிசு செய்யப்படும். சுற்றாடல் சிபாரிசின் பிரதியொன்று விண்ணப்பதாரிக்கும், தொடர்புடையதாயின் ஏதாவது ஏனைய நிறுவனங்களுக்கும், அமைப்புக்களுக்கும் அனுப்பப்படும்.
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




