SinhalaSriLankaEnglish (UK)

உயிரியல் சூழலியல், வரலாற்று சார் முக்கியத்துவமான மரங்களின் பாதுகாப்பு, இலங்கையிலுள்ள கலாசார ரீதியாக முக்கியத்துவமிக்க தனித்துவமான அல்லது அரிய இடங்களை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புக்கள்

காலோசிதமான தேவைப்பாடாக அடையாளங் காணப்பட்ட அத்தகைய இடங்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்பூட்டலானது சுருக்க விபரத்தை வழங்கும் அடையாளப் பதாகைகளின் நிர்மாணம் மற்றும் இடங்கள் மற்றும் மரங்கள் பற்றிய படங்கள் மூலமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு நோக்கம் யாதெனில் இலங்கையின் இயற்கை வளங்களின் பாதுகாப்பில் பொதுமக்கள், தனியார் துறை மற்றும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதுமாகும்.

இலங்கையின் நீர்வீழ்ச்சிகளின் பேணுகைக்கான நடவடிக்கை

நீர் வீழ்ச்சிகளின் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 383 நீர் வீழ்ச்சிகைளில் சிறிய நீர் மின்சார பிறப்பாக்க கருத்திட்டங்களுக்கான அங்கீகரித்தலை வழங்குவதில்லை என ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

குறித்துரைக்கப்படாத செயற்பாடுகள்/ கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் சிபாரிசுகளை வழங்குதல்

தே.சு. சட்டத்தின் பகுதி IV C இல் ஏற்பாடுகளின் கீழ் குறித்துரைக்கப்படாத தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை நிர்மாணித்தல், 99 அறைகளுக்கு குறைவான ஹோட்டல்களை அமைத்தல், ஆதன அபிவிருத்திக்கான காணிகளை துண்டு பிரித்தல், மரங்களை வெட்டுதல், ஆற்றங்கரை அகழ்வு, கனிப்பொருள் மூலவளங்களின் அகழ்வாரச்சி, அத்தகைய சிபாரிசுகளை வழங்குவதற்கான காணி அதிகாரம் போன்ற செயற்பாடுகளுக்கு சுற்றாடல் சிபாரிசுகளை வழங்குதல் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாகாண அலுவலகங்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது

இயற்கை மூலவளங்களின் முகாமைத்துவம் தொடர்பான வழிகாட்டல்களின் விருத்தி

இயற்கை வளங்கள் முகாமைத்துவத்திற்கான வழிகாட்டி தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.

மண் அகழ்வு தொடர்பான தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றாடல் தாக்கம் தொடர்பில் பயிற்றுவிப்பாளர்களுக்கான ஒரு பயிற்சி கைந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

தே.சு. சட்டத்தின் 32 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்குதல்

  1. உயர் சரிவு கொண்ட பிரதேசங்களில் வருடாந்த பயிர்களின் பயிர்ச்செய்கையை தடுத்தல் (2006 ஆகஸ்ட் 04 ஆம் திகதிய 1456/35 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

  2. மண் மற்றும் இரத்தினக்கல் போன்றவற்றின் ஆய்வு, அகழ்வு மற்றும் பிரித்தெடுத்தல் கருவிகளின் பயன்பாட்டை தடுத்தல் (2006 ஜூலை 17 ஆம் திகதிய 1454/4 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்)

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்