SinhalaSriLankaEnglish (UK)

உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான திண்ம கழிவு முகாமைத்துவம் மற்றும் பிளாஸ்டிக்/ பொலித்தீன் மீள்சுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

matara0004

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக 2014 ஜூலை 31 ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் “பிலிசரு” தேசிய திண்ம கழிவு முகாமைத்துவ கருத்திட்டம் மற்றும் தேசிய நுகர்வோர் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம் ஆகிய இரண்டும் மாத்தறை மாநகர சபையுடன் ஒன்றிணைந்து மாநகர சபை ஊழியர்களுக்கு விழிப்பூட்டல் நடைபெற்றது.
 
மாத்தறை மாவட்டத்திலுள்ள நகர சபைகளினால் பிளாஸ்டிக்/ பொலித்தீன் கழிவுகளை சேகரித்தல், மாத்தறை மாநகர சபையில் மீள்சுழற்சி நிலையத்தின் வலையமைப்பை உருவாக்கல் மற்றும் மாத்தறை  மாவட்டத்திலுள்ள நகர சபைகளினால் இன்னும் செயலாக்கத்தில் இல்லாத திண்ம கழிவுகளை வேறுபிரித்தல் பற்றிய விழிப்பூட்டல் என்பவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
 
மேலும், இந்த மாவட்டத்தில் பிரதான தேவையாக இருக்கும் திண்ம கழிவுகளை வேறுபிரித்தல் மற்றும் சேகரித்தல் வசதிகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கல், மற்றும் பிளாஸ்டிக்/ பொலித்தீன் மீள்சுழற்சி வசதிகளை விருத்திசெய்தல் என்பவையும் முக்கியமாகும்.
 
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு டி.டபிள்யு. பிரதாப்சிங்க மற்றும் மாத்தறை மாநகர சபையின் மேயர் திரு. சொசிந்திர ஹட்குங்கே ஆகியோர் பிரதம விருத்தினராக பங்குபற்றினர். மேலும், தேசிய நுகர்வோர் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ கருத்திட்ட பணிப்பாளர் திரு. பந்துல சரத் குமார, பிலிசரு கருத்திட்ட பணிப்பாளர், திரு. அஜித் வீரசுந்தர, மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தென் மாகாண அலுவலக பிரதி பணிப்பாளர் திருமதி. சமந்தா மலேபத்திரன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாத்தறை மாவட்டத்திலுள்ள 17 நகர சபைகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இந் நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, கொட்டவில கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கான களப்பயணத்தில் இவ்வுத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

IMG 0006IMG 0007IMG 0012IMG 0016IMG 0017IMG 0022IMG 0036IMG 0075IMG 0114IMG 0178

Wednesday, 24 September 2014 11:05 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்