SinhalaSriLankaEnglish (UK)

வளி மாசுபாடு முகாமைத்துவம்

IMG 0004

யேல் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண் (EPI) படி, உலகளாவிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குறியீட்டு ஆகியவற்றில் நாட்டில் வளித் தர முகாமைத்துவ அடிப்படையில் இலங்கை EPI ல் 69 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள கணிப்பீடுகளின் படி, தென் ஆசியாவில் இலங்கையின் வளித் தர முகாமைத்துவம் சிறந்ததாக உள்ளது. ஒழுங்காக செயல்படும் வாகன புகை பரிசோதனை திட்டம் மற்றும் தொழில்துறை மாசு கட்டுப்பாட்டு அமைப்பு என்பன வெற்றிக்கான முக்கிய வளித் தர முகாமைத்துவ கருவிகளாக உள்ளன.

இதற்கு மேலதிகமாக, இலங்கை வாகனதொகுதியில் குறைந்த வெளியீடுகளை வெளியிடக்கூடிய ஹைபிறிட் (Hybrid) வாகனங்களை ஊக்குவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை எண்ணியுள்ளது. இதனால் இந்நாட்டின் போக்குவரத்து துறையினால் வெளிவிடப்படும் வெளியீடுகளை குறைக்க முடிவதோடு, இலங்கையின் வளித் தரத்தை மேலும் முன்னேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர், திரு டி.டபிள்யு. பிரதாப்சிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம், வைத்தியர் சாரங்க அழகப்பெரும, பேண்தகு சக்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷித்த சுகத்பால, பேண்தகு சக்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம், திரு. எம்.எம்.ஆர். பத்மசிறி, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு. இந்திக சம்பத் மெரன்சிகே, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர், திரு. கீர்த்தி குணவர்த்தன மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரபையின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் இது சம்பந்தமாக நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை வாகனதொகுதியில் ஹைபிறிட் (Hybrid) வாகனங்களை 20% ஆக உயர்த்துவதற்கு ஹைபிறிட் (Hybrid) வாகனங்களின் இறக்குமதிக்கு சாத்தியமான பரிந்துரைக்கப்படும் வரிச்சலுகையை பெறுவது பற்றி ஆராயப்பட்டது.. எதிர்காலத்தில் தலா வெளியீடுகளை மேலதிகமாக குறைப்பதற்கும், இலங்கைக்கான எரிபொருள் பாவனை தரத்தை விருத்திசெய்வது தொடர்பாகவும் அவர்களினால் கலந்துரையாடப்பட்டது.

IMG 0007IMG 0008IMG 0009IMG 0010

Wednesday, 24 September 2014 07:54 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்