
இலத்திரனியல் மற்றும் மின்சார உபகரண கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் அகற்றுவதனால் சுற்றாடலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இது நாட்டின் ஒரு முக்கிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது. 2014 மே 27 முதல் ஜூன் 2 வரையான காலப்பகுதி தேசிய இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதுமுள்ள பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின்சார உபகரணங்களின் அதிகபட்ச அளவை சேகரிப்பது குறித்த இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாவதோடு சுற்றாடல் நட்புறவான முறையில் அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் இது நிர்வகிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் “இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம் – 2014” என இவ் வாரம் பெயரிடப்பட்டுள்ளது. கௌரவ சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் பங்குபற்றலுடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம், வைத்தியர் சாரங்க அழகப்பெரும, மத்திய சுற்றாடல் அதிகாரசபை சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட பல விருந்தினர் கலந்துகொண்ட இந்த திட்டத்தின் ஆரம்ப வைபவம் 2014 மே 26 ஆம் திகதி BMICH இல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு பத்தொன்பது தனியார் நிறுவனங்கள் (பங்காளி நிறுவனங்கள்) கூட்டாக சேர்ந்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் கைகோர்த்துள்ளன. அபான்ஸ் (Abans) குழுமம், ஆசிரி (Aasiri) மருத்துவமனைகள் குழுமம், CCS லங்கா பிரைவட் லிமிட்டட், சிலோன் கழிவு முகாமைத்துவ பிரைவட் லிமிட்டட், டம்ரோ (Damro) தொழிலக பிரைவட் லிமிட்டட், Debug கணினி பாகங்கள் பிரைவட் லிமிட்டட், டயலொக் (Dialog) ஜிஎஸ்எம் பிரைவட் லிமிட்டட், எடிசலாட் லங்கா பிரைவட் லிமிட்டட், Ewis மின் சாதனங்கள் பிரைவட் லிமிட்டட், ஜியோ-சைக்கிள் Holsim லங்கா லிமிட்டட், கிறீன் லிங் (Green Link), கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், LB ஃபினான்ஸ் பீஎல்சீ, மெட்ரொபொலிட்டன் (Metropolitan) பிரைவட் லிமிட்டட், மொபிடெல் (Mobitel) பிரைவட் லிமிட்டட், சிங்கர் இலங்கை பீஎல்சீ, திங் கிறீன் (Think Green), வேட்டுசா (Vertusa) பிரைவட் லிமிட்டட், Z Max என்டபிரைசஸ் பிரைவட் லிமிட்டட் ஆகியவை இந்த திட்டத்தின் பங்காளி நிறுவனங்களாகும்.














The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




