
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் தேசிய பசுமை விருதுகள் வழங்கும் வைபவம் 2014 மே 12 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வளர்ந்த நாடுகளில் அவர்கள் அழித்த சுற்றாடலை பாதுகாக்க தங்கள் வரவு செலவு திட்டத்தில் கணிசமான அளவு செலவிட வேண்டும் எனவும், தாவர விலங்கினங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதனால் எதிர்கால தலைமுறையினருக்காக இப்போது இந்த நாடுகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவையோர்கள் முன் கூறினார். .
2,500 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை இயற்கைவளங்ளை பாதுகாத்து வருகிறது இது போன்ற காரணங்களுக்காக அல்ல, அது நமது கடமை மற்றும் பொறுப்பு என்று நம்பப்படுகிறது என அவர் மேலும் கூறினார். "இப் பெரிய தத்துவத்தை புரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய நேரம் இப்போது வந்துவிட்டது" என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.
தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் சிறப்பு விருது என நான்கு வகைகளாக
விருதுகள் வழங்கப்பட்டது.
சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் கெளரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள், சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர், திரு. பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர், திரு டி.டபிள்யு. பிரதாப்சிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபை பணிப்பாளர் நாயகம், வைத்தியர் சாரங்க அழகப்பெரும, மத்திய சுற்றாடல் அதிகாரசபை சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், உள்ளூர் அதிகாரசபைகள், மருத்துவமனைகள், தனியார் துறையினர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கண் கவர் நிகழ்வில் 12 தங்க விருதுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் வழங்கப்பட்டதோடு, மொத்தமாக 12 தங்க, 13 வெள்ளி, 17 வெண்கல மற்றும் 9 சிறப்பு விருதுகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது
இந்த வகையான போட்டி மற்றும் விருது வழங்கும் விழாவை நடாத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியுடன் பசுமை மற்றும் சுத்தமான சுற்றாடலை உருவாக்க முடியுமென மத்திய சுற்றாடல் அதிகாரசபை நம்புகின்றது. இந்த தூண்டுதல் மற்றும் ஊக்கமளிப்பு மூலம் அவர்களிடம் இருந்து நல்ல முடிவை பெறவும் முடியும்.









The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




